தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Devayani: ‘பார்த்திபனை எச்சரித்த தேவயானி அம்மா’ முதல் நாளே நடந்த சம்பவம் பற்றி மனம் திறந்த ராஜகுமாரன்!

Devayani: ‘பார்த்திபனை எச்சரித்த தேவயானி அம்மா’ முதல் நாளே நடந்த சம்பவம் பற்றி மனம் திறந்த ராஜகுமாரன்!

Aug 01, 2024, 06:15 PM IST

google News
Devayani: ‘‘எனக்கு யாராலும் எந்த தொல்லையும் இல்லை. நான் என் விருப்பத்தில் தான் முழு ஷூட் எடுத்தேன். மார்ச் ஷூட் தொடங்கினோம், மே மாதம் 8 ம் தேதி அஜித் சார் ஷூட்க்கு வந்தார். அந்த நேரத்தில் மே 1ம் தேதி வாலி ரிலீஸ் ஆகியிருந்தது’’
Devayani: ‘‘எனக்கு யாராலும் எந்த தொல்லையும் இல்லை. நான் என் விருப்பத்தில் தான் முழு ஷூட் எடுத்தேன். மார்ச் ஷூட் தொடங்கினோம், மே மாதம் 8 ம் தேதி அஜித் சார் ஷூட்க்கு வந்தார். அந்த நேரத்தில் மே 1ம் தேதி வாலி ரிலீஸ் ஆகியிருந்தது’’

Devayani: ‘‘எனக்கு யாராலும் எந்த தொல்லையும் இல்லை. நான் என் விருப்பத்தில் தான் முழு ஷூட் எடுத்தேன். மார்ச் ஷூட் தொடங்கினோம், மே மாதம் 8 ம் தேதி அஜித் சார் ஷூட்க்கு வந்தார். அந்த நேரத்தில் மே 1ம் தேதி வாலி ரிலீஸ் ஆகியிருந்தது’’

நடிகை தேவயானியின் கணவரும், இயக்குனருமான ராஜகுமாரன், டூரீங் டாக்கீஸ் சேனலுக்கு அளித்த சுவாரஸ்யமான பேட்டி இதோ:

‘‘நீ வருவாய் என ஸ்டார்ட் பண்ணி, முதல் ஷெட்யூல் எல்லாமே பார்த்திபன் சாருக்கும், தேவயானிக்கும் தான். பார்த்திபன் சார் எப்படினா, படங்களில் நிறைய தலையிடுவார். வேற படமாக இருந்தாலும் கூட டைரக்‌ஷன், வசனம் எல்லாத்திலும் தலையிடுவார். கொஞ்சம் இறங்கி செய்வார். இதெல்லாம் தேவயானிக்கு நல்லாவே தெரிந்திருந்தது.

தேவயானி அம்மா எச்சரிக்கை

அவர்கள் ஏற்கனவே படம் நடித்திருந்தார்கள் என்பதால், பார்த்திபன் பற்றி தேவயானியின் அம்மாவுக்கு நன்றாக தெரிந்திருந்தது. முதல் நாள் ஷூட், பார்த்திபன் சார், ரமேஷ் கண்ணா இரண்டு பேரோடும் சீன். இரண்டு பேருமே இயக்குனர்கள். அப்போ தான் ரமேஷ் கண்ணா டைரக்‌ஷனில் தொடரும் படம் தேவயானி பண்ணிருந்தாங்க. 

தேவயானி அம்மா முதல் நாளே சொல்லிட்டாங்க, ‘இது நம்ம பையன் படம்.. இரண்டு பேரும் நடிக்க மட்டும் தான் வர்றீங்க.. அத மட்டும் செய்யுங்க.. வேற ஏதாவது பண்ணிங்க..’ என்று பார்த்திபன் மற்றும் ரமேஷ் கண்ணாவை மிரட்டிவிட்டார். ஆனால் பார்த்திபன் சார் முழு ஈடுபட்டோடு, பிடிச்சுப் போய் தான் வந்தார். ராஜகுமாரன் எழுதியதை என்னால் ஒரு புள்ளி கூட வைக்க முடியவில்லை என்று, ஒரு பேட்டியில் பார்த்திபனே சொல்லியிருந்தார். 

ஒரு நாள் கூடுதலாக தந்த அஜித்

எனக்கு யாராலும் எந்த தொல்லையும் இல்லை. நான் என் விருப்பத்தில் தான் முழு ஷூட் எடுத்தேன். மார்ச் ஷூட் தொடங்கினோம், மே மாதம் 8 ம் தேதி அஜித் சார் ஷூட்க்கு வந்தார். அந்த நேரத்தில் மே 1ம் தேதி வாலி ரிலீஸ் ஆகியிருந்தது. 12 நாட்கள் தான் அவரிடம் கேட்டிருந்தேன். அவர் கூடுதலாகவே ஒரு நாள் கொடுத்து ஜாலியா நடிச்சுட்டு போனார். 

ஸ்கிரிப்ட் அவருக்கு ரொம்ப பிடித்திருந்தது. அப்போது அவரால் அமர்ந்து கூட கதை கேட்க முடியவில்லை. அந்த அளவுக்கு பாதித்திருந்தார். படித்துக் கொண்டே கதையை கேட்டு, விழுந்து விழுந்து சிரித்தார். அந்த அளவிற்கு அவருக்கு கதை பிடித்திருந்தது. அவர் போஸன் மட்டும் சொன்னேன். முழு கதையை சொல்லச் சொன்னார். நான் சொல்லச் சொல்ல, திரும்ப சொல்லச் சொல்லி ரசித்து ரசித்து கேட்டார். 

சூப்பர் குட் ப்லிம்ஸில் நான் கதை சொல்லி, படம் எடுத்த பின், படம் பார்த்த அனைவருக்கும் படம் பிடிக்கவில்லை. சூப்பர் குட் ப்லிம்ஸ் ஆபிஸே சோகமாக இருக்கிறது. முதல் நாள் ஆர்.பி.செளத்ரி சார் படம் பார்த்திருந்தார். நான் மறுநாள் அவரை பார்க்க போகிறேன். ஒருத்தர் கூட என்னிடம் பேசவில்லை. என்னடா இது என்று எனக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. 

செளத்ரி சார் சொன்ன வார்த்தை

செளத்ரி சார் சந்தித்தார், அவரும் அமைதியா இருந்தார். என்ன சொல்லப் போறார்னு எனக்கு டென்ஷன். கொஞ்ச நேரத்தில, ‘10 படம் டைரக்ட் பண்ண இயக்குனர் படம் எடுத்த மாதிரி எடுத்து வெச்சிருக்க.. உன்னை மாதிரி ஒரு இயக்குனரை அறிமுகப்படுத்துறத பெருமையா நினைக்கிறேன். உன்னை மாதிரி ஒரு இயக்குனரை நான் இதுவரை பார்க்கல. என்னிடம் என்ன சொன்னியோ.. அதை அப்படியே எடுத்து வெச்சிருக்க’ என்று ஒரே பாராட்டு. 

எனக்கு ஒரே சந்தோஷம் சார். படம் அந்த அளவுக்கு பெரிய ஹிட். எல்லா தியேட்டர்ளையும் கூட்டம் கூட்டமா வந்து படம் பார்த்தாங்க,’’ என்று அந்த பேட்டியில் ராஜகுமாரன் கூறியிருந்தார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி