தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தேவரா 10ஆவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?: வாயைப் பிளக்க வைக்கும் கலெக்‌ஷன்

தேவரா 10ஆவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?: வாயைப் பிளக்க வைக்கும் கலெக்‌ஷன்

Marimuthu M HT Tamil

Oct 07, 2024, 11:55 AM IST

google News
தேவரா 10ஆவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?: வாயைப் பிளக்க வைக்கும் கலெக்‌ஷன் பற்றி அறிந்துகொள்வோம்.
தேவரா 10ஆவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?: வாயைப் பிளக்க வைக்கும் கலெக்‌ஷன் பற்றி அறிந்துகொள்வோம்.

தேவரா 10ஆவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?: வாயைப் பிளக்க வைக்கும் கலெக்‌ஷன் பற்றி அறிந்துகொள்வோம்.

தேவாரா திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் உலகளவில் 10 நாட்களில் ரூ.430 கோடியைத் தாண்டியுள்ளது. 

ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் சைஃப் அலிகான் நடித்து வெளியான ’தேவாரா’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் உலகளவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியானது. 

தேவரா படத்தின் பாக்ஸ் ஆபிஸ் அறிக்கையில், படம் அதன் முதல் வாரத்தில் உலகளவில் ரூ .405 கோடியை (மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல்) வசூலித்துள்ளது.

Sacnilk.com என்ற இணையதள புதுப்பிப்பின்படி, இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் அதன் முதல் 10 நாட்களில் இந்தியாவில் ரூ.243.1 கோடியை வசூலித்துள்ளது. தேவரா படத்தின் இந்தி வெர்ஷன் மட்டும், ரூ.58.47 கோடி வசூலித்துள்ளது. மேலும், உலகளவில் 430 கோடிக்கும் மேல் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. 

ஜூனியர் என்.டி.ஆர் ஆறு ஆண்டுக்குப் பின் நடித்து ரிலீஸ் செய்த படம்:

கடந்த ஆறுஆண்டுகளில் ஜூனியர் என்.டி.ஆர் தனியாக நடித்து வெளியான திரைப்படம், தேவரா. அவர் கடைசியாக எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம் சரணுடன் சேர்ந்து நடித்து இருந்தார்.

தேவரா வெளியீட்டிற்குப் பின், தனது ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி தெரிவிக்க எக்ஸ் (முன்பு ட்விட்டர்) க்கு அழைத்துச் சென்றார், ஜூனியர் என்.டி.ஆர். அதில், "நான் காத்திருந்த அந்த நாள் இறுதியாக வந்துவிட்டது. உங்கள் நம்பமுடியாத பாஸிட்டிவ் பதில்களால் திக்குமுக்காடிப் போனேன். என் ரசிகர்கள் மூலம் தேவராவுக்கான கொண்டாட்டங்களைப் பார்ப்பது என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கிறது. உங்கள் அன்புக்கு என்றென்றும் கடன்பட்டிருக்கிறேன். என்னைப் போலவே நீங்களும் அதை அனுபவித்ததில் மகிழ்ச்சி. உங்கள் அனைவரையும் தொடர்ந்து மகிழ்விப்பேன் என்று உறுதியளிக்கிறேன்’’ எனத் தெரிவித்தார்.

இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், சைஃப் அலிகான், ஜான்வி கபூர், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் மேகா, டாம் ஷைன் சாக்கோ மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தேவரா படம் எத்தகைய கதை கொண்டது?

சைஃப் அலிகான் பைராவா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குஷ்தி (மல்யுத்தம்) வாத்தியாரான, அவரது வெல்ல முடியாத உலகம் ஜூனியர் என்.டி.ஆரின் கதாபாத்திரத்தால் தலைகீழாக மாற்றப்படுகிறது. இது வெளியானபோது கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், படத்தின் முதல்நாளே ரூ.172 கோடியை ஈட்டியது.

இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், தேவரா என்ற பெயரிடப்பட்ட கதாபாத்திரத்தைச் சொல்கிறது. அவர் அப்பகுதி ஆண்களை பல ஆண்டுகளாக சட்டவிரோத நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்க மறுக்கிறார். அவரது மகன் வாரா குடும்ப பாரம்பரியத்தை எவ்வாறு பாதுகாத்து முன்னெடுத்துச் செல்கிறார் என்பதையும் இது காட்டுகிறது.

படத்தைப் பற்றிய ஹிந்துஸ்தான் டைம்ஸ் விமர்சனத்தின் ஒரு பகுதியில், "தேவரா: பகுதி 1-ன் டிரெய்லர்களை நீங்கள் உன்னிப்பாகக் கவனித்திருந்தால், நீங்கள் இதனை கணிக்கக்கூடிய கதை என்பதை அறியலாம். படத்தின் முதல் பாதி பெயரிடப்பட்ட கதாபாத்திரத்தின் குணங்களையும் செயல்பாடுகளையும் சொல்கிறது. அதன்பின், அவர் எவ்வாறு கடலின் பாதுகாவலராக வந்தார் என்பதையும் பிற்பகுதியில் சொல்கிறது. தேவராவுடன் மோதும் அனைவரும் இறப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பயத்தை ஒருபோதும் அறியாத மனிதர்கள் தேவரா படத்தின் மீதிக் கதை’ என்பதாகும்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி