தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பேன்டஸி விரும்பி.. சமகால அரசியலை அடித்து ஆடும் கலைஞன்.. சிம்புதேவனின் பிறந்தநாள் இன்று..

பேன்டஸி விரும்பி.. சமகால அரசியலை அடித்து ஆடும் கலைஞன்.. சிம்புதேவனின் பிறந்தநாள் இன்று..

Nov 23, 2024, 06:05 AM IST

google News
தம்மைச் சுற்றி நடக்கும் அரசியலை மிகவும் எதார்த்தமாக, போகிற போக்கில் பேசி பட்டென உடைத்து எதார்த்தத்தை விளக்கும் இயக்குநர் சிம்புதேவனின் பிறந்தநாள் இன்று.
தம்மைச் சுற்றி நடக்கும் அரசியலை மிகவும் எதார்த்தமாக, போகிற போக்கில் பேசி பட்டென உடைத்து எதார்த்தத்தை விளக்கும் இயக்குநர் சிம்புதேவனின் பிறந்தநாள் இன்று.

தம்மைச் சுற்றி நடக்கும் அரசியலை மிகவும் எதார்த்தமாக, போகிற போக்கில் பேசி பட்டென உடைத்து எதார்த்தத்தை விளக்கும் இயக்குநர் சிம்புதேவனின் பிறந்தநாள் இன்று.

ஓவியராகவும் இயக்குநராகவும் நம்மில் பலருக்கும் தெரிந்த சிம்பு தேவனின் இயற் பெயர் செந்தில் குமார். மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர், சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் பிரியமும் ஆர்வமும் கொண்டவர்.

சிறுவயதில் தனது அண்ணனை ரோல் மாடலாக எடுத்துக் கொண்ட சிம்பு தேவன், என்ன புத்தகங்களைப் படிக்க வேண்டும், எந்த நடிகருக்கு ரசிகனாக வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளத் தொடங்கினாராம்.

சிம்புதேவனை சூழ்ந்த காமிக்ஸ் உலகம்

3ம் வகுப்பு முதல் காமிக்ஸ் புத்தகங்கள் படிக்கத் தொடங்கியபோது, அது நம்மைச் சுற்றி இல்லாத ஒரு பேன்டஸி கதையைக் கொண்டிருந்தாலும், அது எப்படியோ ஒரு உலகத்தை நம்மில் கட்டமைத்துவிடும். இந்த காமிக்ஸ்கள் நம்மையும் அறியாமல், பல அறிவியல், அரசியல் விஷயங்களை நம் தலைக்குள் ஏற்றிவிடும். அது எளிய நடையில் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை தரும் என்பதில் உறதியாக இருந்திருக்கிறார் சிம்பு தேவன்.

ஓவியராக செதுக்கிய தொ.ப

இந்த காமிக்ஸ் அவரை ஓவியராக மாற்றி இருக்கிறது, பின் படிப்பிற்காக சென்னை வந்த அவருக்கு ஆசிரியராக கிடைத்தவர்கள் தொ.பரமசிவமும், ஞானசம்பந்தனும். இவர்கள், ஓவியம் குறித்த இவரது பார்வ்யை மாற்றி, கூர் தீட்டி உள்ளனர். அதுவரை ஓவியத்தின் மீது கொண்டிருந்த காதல், கார்ட்டூன் பக்கம் செல்ல ஆரம்பித்தது. அவை கூறும் நுனுக்கமான அரசியல் தெரிய வந்தது. இதையடுத்து தான், விகடன் இதழில் மாணவ பத்திரிகையாளராக இருந்து கார்ட்டூனிஸ்டாக பணியில் சேர்ந்தார்.

சேரனின் உதவி இயக்குநர்

பின், இயக்குநர் சேரனிடம் உதவி இயக்குநராக சேர்ந்த இவர், சினிமாவின் பரிணாமத்தை எப்படி சிறப்பாக பயன்படுத்திக் கொள்வது எனதெரிந்து கொண்டார்.

இந்த சமயத்தில் தான் இயக்குநர் பாண்டிராஜ், ஏ.ஆர்.முருகதாஸின் பழக்கம் கிடைத்தது. இவர்கள் ஒன்றாக ஒரே அறையில் தங்கி இருந்து சினிமா கனவுகளை எட்டினர். இவர் காசு இல்லாத பசி நேரத்தில் வாழைப்பழத்தையும், வேர்கடலையையும் வைத்து கலோரி குறித்து வகுப்பெடுப்பான் என பாண்டிராஜ் கிண்டல் செய்துள்ளார்.

அரசியலை வெளிப்படுத்திய முதல் படம்

வறுமையிலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடக்கூடாது என எண்ணிய சிம்பு தேவன், புத்தகங்கள் மூலம் தனக்குள் ஊரிப்போன அரசியலையும், பத்திரிகை துறையில் கிடைத்த சமகால அரசியலையும் கார்ட்டூன் தொனியையும் பயன்படுத்தி அவர் தன் முதல் கதையை வடிவமைத்தார்.

பின், அந்தக் கதை இயக்குநர் ஷங்கரை வெகுவாகக் கவர்ந்ததால், அவரே சிம்பு தேவனின் முதல் படத்தை தயாரிக்கவும் ஒப்புக் கொண்டார். அதுதான் எவர் கிரீன் பிளாக் பஸ்டர் படமான 'இம்சை அரசன் 23ம் புலிகேசி'. இந்தப் படத்தில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல அத்தனை அரசியல், அவரது கார்ட்டூன் போல பேசாமல் பேசியது.

பேன்டஸியால் மக்களைக் கவரந்த கலைஞன்

இந்தப் படத்தை இன்று பார்த்தாலும், தற்போதைய அரசியலுடன் தொடர்பு படுத்தி பேசும். இப்படி ஒரு கதையையும், கதையை வெளிப்படுத்தும் திறனையும் தமிழ் சினிமா காணாததால், அவரின் முதல் படத்திலேயே மக்கள் அவரை கொண்டாடித் தீர்த்தனர்.

இதையடுத்து, தன்னுடைய பேன்டஸி சிந்தனையை வைத்தும், காமிக்ஸ் அவருள் ஏற்படுத்திய தாக்கத்தையும் அரசியல் வசனங்களோடு சேர்த்து, 'அறை எண் 305ல் கடவுள்', 'இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்' போன்ற படங்களை இயக்கினார்.

இவரது படத்தின் தலைப்புகளுக்கே சிலர் விசிறிகளாக இருந்துள்ளனர், முதல் 2 படமும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற நிலையில், கௌபாய் சிங்கம் மட்டும் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

இதையடுத்து அவர் இயக்கிய ஒரு கன்னியும் 3 களவாணிகளும், புலி போன்ற படங்கள் விமர்சனங்களையும் தோல்வியையும் சந்தித்தது.

சினிமாவில் அடுத்தகட்ட முன்னேற்றம்

இருப்பினும், மக்களின் ரசனைகளுடன் தான் சொல்ல வந்த கருத்துகளையும் வெளிப்படுத்த முயன்ற சிம்பு தேவன், கசடதபற எனும் அந்தாலஜி படத்தை இயக்கினார். 6 படங்களைக் கொண்ட இந்த கதையை 6 ஒளிப்பதிவாளர்கள், 6 எடிட்டர் என பயன்படுத்தி சினிமாவில் வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்திருப்பார்.

சிக்கலில் தவித்த சிம்பு தேவன்

பின், இம்சை அரசன் 23ம் புலிகேசியின் அடுத்த பாகமாக 24ம் புலிகேசி படத்தை எடுக்க இவர் எவ்வளவோ முயன்றும் அது நடக்காமலே போனது. காரணம், படத்தின் நாயகன் வடிவேலுவிற்கும் தயாரிப்பாளர் ஷங்கருக்கும் ஏற்பட்ட மோதலால், வடிவேலுவின் பட வாய்ப்புகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு சினிமா வாழ்க்கையே கேள்விக் குறியானது. இதைத் தொடர்ந்து அவரும் சமீபத்தில் தான் படங்களில் நடிக்கத் தொடங்கினார். இருப்பினும் 24ம் புலிகேசியில் அவர் நடிப்பாரா என்பது கேள்விக் குறியே..

படகில் சவாரி செய்யும் சிம்புதேவன்

இந்த நிலையில், இந்திய சுதந்திர போராட்டத்தின் போது சொல்லப்படாத சில உண்மைகளையும் 2ம் உலகப் போரின் போது தமிழ்நாடு பாதிக்கப்பட்டதையும் மையமாக வைத்து படகு எனும் படத்தை இயக்கியுள்ளார் சிம்புதேவன். இந்தப் படம் சத்தமே இல்லாமல் வெளியாகி பலரது பாராட்டுகளையும் பெற்றது. இது 23ம் புலிகேசி போல, இவருக்கு மீண்டும் பெரும் பெயரை சினிமா உலகில் வாங்கிக் கொடுத்தது.

இப்படி, மக்கள் சந்திக்கும் அரசியலையும், அவர்கள் கண்டு கொள்ளாமல் விட்ட கதைகளையும் வரலாறையும் தனக்கே உரித்தான பாணியில் மக்கள் விரும்பும்படியாக வழங்கி சினிமா ரசிகர்களின் விருப்ப இயக்குநராக இருக்கும் சிம்பு தேவன் இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி