தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thangalaan Box Office: குதிரை வேகத்தில் வசூலை அள்ளும் தங்கலான்.. 4 நாட்களில் இத்தனை கோடியா?

Thangalaan Box Office: குதிரை வேகத்தில் வசூலை அள்ளும் தங்கலான்.. 4 நாட்களில் இத்தனை கோடியா?

Aarthi Balaji HT Tamil

Aug 19, 2024, 05:42 PM IST

google News
Thangalaan Box Office: ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸான தங்கலான் திரைப்படம் உலகளவில் ரூ.68 கோடி வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது.
Thangalaan Box Office: ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸான தங்கலான் திரைப்படம் உலகளவில் ரூ.68 கோடி வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது.

Thangalaan Box Office: ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸான தங்கலான் திரைப்படம் உலகளவில் ரூ.68 கோடி வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது.

Thangalaan Box Office: தங்கலான் திரைப்படம் வெளியாகி நான்க்ய் நாட்கள் ஆகியுள்ள நிலையில் படத்தின் வசூல் குறித்த நிலவரங்கள் வரத்தொடங்கியுள்ளன.

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம், நடிகை பார்வதி, நடிகை மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து, ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான திரைப்படம், தங்கலான். இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

பாக்ஸ் ஆபிஸ் வசூல் 

இந்த நிலையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸான தங்கலான் திரைப்படம் உலகளவில் ரூ.68 கோடி வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரூ.13.3 கோடியும், ஆகஸ்ட் 16 ஆம் தேதி இரண்டாவது நாளில் ரூ.4.75 கோடியும், ஆகஸ்ட் 17ஆம் தேதி மூன்றாவது நாளில் ரூ.5.88 கோடியும், ஆகஸ்ட் 18 ஆம் ரூ.0.34 கோடியும் வசூலித்துள்ளது. 

இந்தியாவில் மட்டும் ரூ.24.27 கோடியும், மொத்தமாக உலகளவில் ரூ.68 கோடி வரை வசூல் செய்ததாகத் தெரிகிறது.

தங்கலான் சொல்லும் கதை என்ன?

வட ஆற்காடு வேப்பூர் கிராமத்தில் தங்கலான் முனி (விக்ரம்) தன்னுடையை மனைவி கங்கம்மா, ( பார்வதி) குழந்தைகள் மற்றும் தன் சனத்தோடு, தனக்கான நிலத்தில் பயிர் செய்து நிம்மதியாக வாழ்ந்து வருகிறான். இதனைப்பார்த்து பொறுக்காத ஊர் மிராசு, சூழ்ச்சி செய்து, அவனையும் அவனது மகன்களையும் பண்ணை அடிமையாகப் பணி அமர்த்துகிறார். இதற்கிடையே வரும் ஆங்கில துரை கிளவ்ன் (டேனியல்) அந்தக் காட்டில் இருக்கும் தங்கத்தை எடுக்க ஊராரின் உதவியைக் கேட்கிறார். மிராசின் அடிமையாக இருப்பதை விட, துரைக்கு உதவி செய்து கூலி வாங்கி, ரோஷத்தோடு வாழ நினைக்கிறான், தங்கலான். இதனையடுத்து அவனுடைய மகன் அசோகன் மற்றும் ராமானுஜம் வழியில் வந்த அந்தணன் ( பசுபதி) உள்ளிட்டோர் செல்கின்றனர்.

ஒரு கட்டத்தில் அவனுடன் ஊராரும் சேர்ந்து கொள்கின்றனர். ஆனால், அங்கிருக்கும் தங்கத்தை தன் உயிராகப் பாதுகாத்து நிற்கின்றனர், ஆரத்தியும் ( மாளவிகா) அவரது குழுவும். பொன்னை நெருங்க வரும் நபர்களின் உயிர்களை காவு வாங்கும் அவர்களை மீறி, இறுதியில் தங்கலான் குழு தங்கத்தை எடுத்தார்களா? இல்லையா? அதன் பின்னர் என்ன ஆனது என்பதே படத்தின் கதை.

தங்கலான் முனி கதாபாத்திரத்திற்கு தன்னுடைய உடல், பொருள், ஆவி என வழக்கம் போல, தன்னை மொத்தமாக கொடுத்து நடித்து மிரட்டியிருந்தார், விக்ரம். தங்கலானை அடக்கும் ராணியாகவும், அன்பை அரட்டுத்தனமாக காட்டுபவளாகவும் கங்கம்மா கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தார், நடிகை பார்வதி. அவளுக்கும், தங்கலானுக்கும் இடையே நடக்கும் ரொமான்ஸும் படத்தில் அழகோ அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆக்ஷனில் அதகளம்

பொன்னை பாதுகாக்கும் ஆர்த்தியாக மாளவிகா. ஆக்ஷனில் அதகளம் செய்திருக்கிறார். ராமானுஜம் வழியில் வந்த அந்தணன் கதாபாத்திரத்தில் பசுபதி தன்னுடைய நடிப்பின் முதிர்ச்சியை காண்பித்து இருக்கிறார். இதர கதாபாத்திரங்களும் கவனம் ஈர்க்கின்றன.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி