தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thangalaan 3 Day Box Office: பாக்ஸ் ஆபிஸில் கொடியேற்றிய தங்கலான் - மூன்று நாட்களில் வாயைப்பிளக்க வைக்கும் வசூல்!

Thangalaan 3 Day Box Office: பாக்ஸ் ஆபிஸில் கொடியேற்றிய தங்கலான் - மூன்று நாட்களில் வாயைப்பிளக்க வைக்கும் வசூல்!

Marimuthu M HT Tamil

Aug 18, 2024, 10:42 AM IST

google News
Thangalaan 3 Day Box Office: பாக்ஸ் ஆபிஸில் கொடியேற்றிய தங்கலான் - மூன்று நாட்களில் வாயைப்பிளக்க வைக்கும் வசூல் குறித்துப் பார்ப்போம்.
Thangalaan 3 Day Box Office: பாக்ஸ் ஆபிஸில் கொடியேற்றிய தங்கலான் - மூன்று நாட்களில் வாயைப்பிளக்க வைக்கும் வசூல் குறித்துப் பார்ப்போம்.

Thangalaan 3 Day Box Office: பாக்ஸ் ஆபிஸில் கொடியேற்றிய தங்கலான் - மூன்று நாட்களில் வாயைப்பிளக்க வைக்கும் வசூல் குறித்துப் பார்ப்போம்.

Thangalaan 3 Day Box Office: தங்கலான் திரைப்படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் படத்தின் வசூல் குறித்த நிலவரங்கள் வரத்தொடங்கியுள்ளன.

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம், நடிகை பார்வதி, நடிகை மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து, ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகி இருக்கும் திரைப்படம், தங்கலான். இந்தத் திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

தங்கலான் சொல்லும் கதை என்ன?

வட ஆற்காடு வேப்பூர் கிராமத்தில் தங்கலான் முனி (விக்ரம்) தன்னுடையை மனைவி கங்கம்மா, ( பார்வதி) குழந்தைகள் மற்றும் தன் சனத்தோடு, தனக்கான நிலத்தில் பயிர் செய்து நிம்மதியாக வாழ்ந்து வருகிறான். இதனைப்பார்த்து பொறுக்காத ஊர் மிராசு, சூழ்ச்சி செய்து, அவனையும் அவனது மகன்களையும் பண்ணை அடிமையாகப் பணி அமர்த்துகிறார். இதற்கிடையே வரும் ஆங்கில துரை கிளவ்ன் (டேனியல்) அந்தக் காட்டில் இருக்கும் தங்கத்தை எடுக்க ஊராரின் உதவியைக் கேட்கிறார். மிராசின் அடிமையாக இருப்பதை விட, துரைக்கு உதவி செய்து கூலி வாங்கி, ரோஷத்தோடு வாழ நினைக்கிறான், தங்கலான். இதனையடுத்து அவனுடைய மகன் அசோகன் மற்றும் ராமானுஜம் வழியில் வந்த அந்தணன் ( பசுபதி) உள்ளிட்டோர் செல்கின்றனர்.

ஒரு கட்டத்தில் அவனுடன் ஊராரும் சேர்ந்து கொள்கின்றனர். ஆனால், அங்கிருக்கும் தங்கத்தை தன் உயிராகப் பாதுகாத்து நிற்கின்றனர், ஆரத்தியும் ( மாளவிகா) அவரது குழுவும். பொன்னை நெருங்க வரும் நபர்களின் உயிர்களை காவு வாங்கும் அவர்களை மீறி, இறுதியில் தங்கலான் குழு தங்கத்தை எடுத்தார்களா? இல்லையா? அதன் பின்னர் என்ன ஆனது என்பதே படத்தின் கதை.

தங்கலான் முனி கதாபாத்திரத்திற்கு தன்னுடைய உடல், பொருள், ஆவி என வழக்கம் போல, தன்னை மொத்தமாக கொடுத்து நடித்து மிரட்டியிருந்தார், விக்ரம். தங்கலானை அடக்கும் ராணியாகவும், அன்பை அரட்டுத்தனமாக காட்டுபவளாகவும் கங்கம்மா கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தார், நடிகை பார்வதி. அவளுக்கும், தங்கலானுக்கும் இடையே நடக்கும் ரொமான்ஸும் படத்தில் அழகோ அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

பொன்னை பாதுகாக்கும் ஆரத்தியாக மாளவிகா. ஆக்ஷனில் அதகளம் செய்திருக்கிறார். ராமானுஜம் வழியில் வந்த அந்தணன் கதாபாத்திரத்தில் பசுபதி தன்னுடைய நடிப்பின் முதிர்ச்சியை காண்பித்து இருக்கிறார். இதர கதாபாத்திரங்களும் கவனம் ஈர்க்கின்றன.

பா.இரஞ்சித் மற்றும் குழுவினரின் அயராத உழைப்பு:

சார்பட்டா பரம்பரை படத்தில் தன்னுடைய திரை கிராப்டின் மூலம் வட சென்னை பாக்சிக்கின் உலகத்தை கண் முன்னே நிறுத்திய பா. ரஞ்சித், தங்கலானில் கோலார் தங்கவயலில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அவர்களுக்கு தங்கத்தை எடுக்க உதவிய மக்களின் உலகத்தை கண் முன்னே நிறுத்தி இருக்கிறார்.

நடிகர்களுக்கான அலங்காரம், ஒப்பனை, ஆக்ஷன் என எல்லாவற்றிலும் முழுக்க முழுக்க உண்மை நெடி அடிக்கிறது. வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன. ஒரு அட்வென்சர் கதைக்கான களத்தையும், மாயா ஜாலத்தையும் திரைக்கதையில் கொண்டு வந்திருக்கும் பா.ரஞ்சித், தன்னுடைய வழக்கமான நிலத்திற்கான போர், மாட்டு இறைச்சி பிரச்சாரம், புத்தர் கோட்பாடு என அனைத்தையும் கொண்டு வந்து விட்டார். கிஷோரின் தங்கலான் உலகத்தை கேமரா கண்கள் கன கச்சிதமாக படம் பிடித்து இருக்கிறது. ஜிவி பிரகாஷ் குமார் தன்னுடைய இசையால் படத்தை மொத்தமாக தாங்கி நின்று மிரட்டி இருக்கிறார்.

பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்த தங்கலான்:

இந்த நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸான தங்கலான் திரைப்படம் உலகளவில் ரூ.40 கோடி வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி ரூ.13.3 கோடியும், ஆகஸ்ட் 16ஆம் தேதி இரண்டாவது நாளில் ரூ.4.75 கோடியும், ஆகஸ்ட் 17ஆம் தேதி மூன்றாவது நாளில் ரூ.5.88 கோடியும், ஆகஸ்ட் 18ஆம் தேதி காலை ஷோவின் கணக்கீட்டின்படி, ரூ.0.34 கோடியும் வசூலித்துள்ளது. எனவே, இந்தியாவில் மட்டும் ரூ.24.27 கோடியும், மொத்தமாக உலகளவில் ரூ.40 கோடி வரை வசூல் செய்ததாகத் தெரிகிறது.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி