தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அனுமதிக்கப்படாத பார்வையாளர்கள்.. சர்வதேச திரைப்பட விழாவில் நடந்த சம்பவத்தை சாடிய ப்ளூ சட்டை மாறன்

அனுமதிக்கப்படாத பார்வையாளர்கள்.. சர்வதேச திரைப்பட விழாவில் நடந்த சம்பவத்தை சாடிய ப்ளூ சட்டை மாறன்

Aarthi V HT Tamil

Dec 20, 2023, 11:42 AM IST

google News
சென்னை சர்வதேச திரைப்பட விழா விழாவில் நேற்று Non Members படம் பார்க்க அனுமதிக்கப்பட்டவில்லை எனப்ளூ சட்டை மாறன் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
சென்னை சர்வதேச திரைப்பட விழா விழாவில் நேற்று Non Members படம் பார்க்க அனுமதிக்கப்பட்டவில்லை எனப்ளூ சட்டை மாறன் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

சென்னை சர்வதேச திரைப்பட விழா விழாவில் நேற்று Non Members படம் பார்க்க அனுமதிக்கப்பட்டவில்லை எனப்ளூ சட்டை மாறன் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

சென்னை 21 ஆவது சர்வதேச திரைப்பட விழா தொடங்கிய நிலையில் நாளை ( நவ. 21) நிறைவடைக்கிறது. இதில் 12 தமிழ் திரைப்படங்களுடன் 57 நாடுகளைச் சேர்ந்த 126 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.

இதனிடையே விழாவில் நேற்று Non Members படம் பார்க்க அனுமதிக்கப்பட்டவில்லை என ப்ளூ சட்டை மாறன் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில், " Chennai International Film Festival 2023. மீண்டும் ஒரு அத்துமீறல். நேற்று மாலை 6.30 மணிக்கு சிக்ஸ் டிகிரீஸ் தியேட்டரில் Mankhurd எனும் இந்திய படம் திரையிடப்படும் என அறிவித்திருந்தனர்.

Non Members அனைவரும் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக ஒழுங்காக வரிசையில் நின்று கொண்டிருந்தனர். எதிர்ப்பக்கம் வழக்கம் போல.. டாஸ்மாக் கவுண்ட்டர் அருகே நிற்பது போல வரிசையை பின்பற்றாமல் குழுமி இருந்தனர் ICAF மெம்பர்கள் மற்றும் சீனியர் சிட்டிசன்கள்.

6.15 மணிக்கு உள்ளே அனுமதிக்கான கதவு திறக்கப்பட்டதும் ICAF மெம்பர்கள்/ சீனியர் சிட்டிசன்கள் உள்ளே புகுந்தனர். இவர்களில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி எனும் விதி மீண்டும் காற்றில் பறக்க விடப்பட்டது.

உண்மையான மெம்பர்கள் யார் என ID கார்டை செக் செய்து, அவர்களில் 20 பேரை அனுப்புவதுதானே சரியான முறை? ஆனால் இந்த சாதாரண விஷயம் இந்தாண்டு பின்பற்றப்படவே இல்லை. ஒருசில இடங்களில் கடமைக்கு ஐந்தாறு பேரின் ID கார்டை மட்டும் செக் செய்து அனுப்பினர். ஒரு சில இடங்களில் மட்டுமே.

இதனால் மெம்பர் அல்லாதவர்களும் இந்த வரிசையில் கலந்து பல படங்களை பார்த்தனர். இந்த முறையும் அதுதான் நடந்தது.

இதுபோக இன்னொரு கொடுமையும் நடந்தது. படக்குழுவினர் சுமார் 30 பேர்..வரிசையில் நிற்காமல் உள்ளே நுழைந்து இருக்கைகளில் அமர்ந்து விட்டனர்.

இந்த கேலிக்கூத்துகளை எப்போதும் போல அமைதியாக பார்த்தபடி வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள் Non Members. அதன்பிறகே இவர்களுக்கு அனுமதி கிடைத்தது. சில நிமிடங்களில் தியேட்டர் ஹவுஸ்புல் ஆனது.

நீண்ட நேரம் வரிசையில் நின்றும்.. உள்ளே செய்ய இயலாத Non Member ஒருவர் 'படக்குழுவினர் என்றால்.. நான்கைந்து பேர் மட்டுமே உள்ளே சென்றால் போதாதா? 30 பேர் சென்றால்.. நாங்கள் எப்படி படம் பார்ப்பது? இவ்வளவு நேரம் காத்திருந்து என்ன பயன்? யாருக்காக படம் போடுகிறீர்கள்?

நீங்களே பார்த்துக்கொள்ள வேண்டுமெனில்..அதற்காக தனியாக ஷோ போட்டுக்கொள்ளலாமே?' என ஆதங்கம் கலந்த கோபத்துடன் கத்தினார். உள்ளே செய்ய இயலாத வருத்தத்துடன் பல Non Members ஏமாற்றத்துடன் திரும்பி விட்டார்கள்.

6.30 மணிக்கு தொடங்க வேண்டிய படம்.. 6.40 மணிக்கு தாமதமாக தொடங்கியது.

ICAF Member, Senior Citizen, VIP, Movie Crew ஆகியோர் மட்டுமே படம் பார்க்க முதல் உரிமை என்றால்..சாமான்ய சினிமா ரசிகர்களிடம் பணம் வாங்கிவிட்டு மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வைப்பது ஏன்?

அடுத்த ஆண்டு முதல் அவர்களுக்கு மட்டுமே உலக சினிமா விழா நடத்தட்டும் என பலரும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

மெம்பர்கள் 20 பேரை ..ஒழுங்காக வரிசையில் நிற்க வைத்து, அவர்களின் ID கார்ட்களை செக் செய்து உள்ளே அனுப்பவதும், அதற்கு மேல் வருபவர்களை அனுமதிக்காமல் தடுப்பதும்..ஒரு சாதாரண வேலை.

இதைக்கூட சரியாக செய்யாமல் இருப்பது ICAF (Indo Cine Appreciation Foundation) உடைய மிகப்பெரிய நிர்வாக தோல்வி. நாளை மாலை ஆறு மணிக்கு நிறைவு விழா நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து Anatomy of a Fall படமும் சத்யம் மெயின் ஸ்க்ரீனில் திரையிடப்படுகிறது.

இங்கும் கட்டுக்கடங்காத கூட்டம் வரும். ஆனால் நிர்வாகிகள் தியேட்டருக்கு உள்ளே விஐபிக்களை வரவேற்று பேசுவதில் பிஸியாக இருப்பார்கள்.

ஆகவே தியேட்டர் வாசலில் மீண்டும் கடுமையான தள்ளுமுள்ளு, கலாட்டாக்கள் மற்றும் கடும் வாக்குவாதங்கள் உறுதியாக நடக்கும் என்கிறார்கள் சாமான்ய உலக சினிமா ரசிகர்கள். இதையாவது உருப்படியாக கையாளுமா ICAF நிர்வாகம்? " எனக் குறிப்பிட்டு உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி