ஜோவிகாவை வச்சு வனிதா போட்ட பிளான்.. இனி செய்யுறது எல்லாமே சம்பவம் தான்.. கூட்டணி சேர்ந்த அம்மா பொன்னு..
Oct 07, 2024, 01:19 PM IST
நடிகை வனிதா, தான் இயக்கி நடிக்கும் புதிய படத்திற்கு யார் தாயரிப்பாளர் என்ற விஷயத்தை கூறி, சினிமா வட்டாரத்தை பரபரப்பாக்கி உள்ளார்.
தமிழ் சினிமாவில் மூத்த நடிகரான விஜயகுமார்- மஞ்சுளாவின் தம்பதியின் மகள் தான் வனிதா விஜயகுமார். ஆனால் தற்போது தனது தந்தையுடன் பேச்சு வார்த்தை இல்லாமல் தனியாக வாழ்ந்து வருகின்றார்.
விஜய் நடித்த சந்திரலேகா திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான அவர், தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். வனிதா விஜயகுமாரை பொறுத்தவரை அவர் நடிகையாக பிரபலமானதை விட, அவருடைய பர்சனல் பிரச்சினைகளின் வழியாகவே பிரபலம் அடைந்ததே அதிகம்.
வனிதாவின் திருமண வாழ்க்கை
முதலில் நடிகர் ஆகாஷை திருமணம் செய்த வனிதா கருத்துவேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். அதன் பின்னர் தொழிலதிபர் ஆனந்த் ஜெய் ராஜனை திருமணம் செய்து கொண்டார். அந்த மண உறவும் சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. பின்னர், 2013ஆம் ஆண்டு நடன இயக்குநர் ராபர்ட்டுடன் வாழ்க்கையைத் தொடங்கிய வனிதா, 2017ஆம் ஆண்டு உறவில் இருந்து விலகினார். அதன் பின்னர் பீட்டர் பால் என்பவருடன் உறவில் இருந்த வனிதா அவரையும் திருமணம் செய்து கொண்டு பின்னர் பிரிந்தார்.
இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற வனிதா விஜயகுமார் மீண்டும் மீடியா வெளிச்சத்திற்கு வந்தார். அதனைத்தொடர்ந்து தன்னுடைய மகளான ஜோவிகாவையும் அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற செய்தார்.
Save the date
இந்நிலையில் கடற்கரை ஒன்றில் ராபர்ட் மாஸ்டரின் கையை காதலோடு பிடித்தபடி வனிதா விஜயகுமார் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில் Save The Date October 5 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அவர்கள் இருவருக்கும் அக்டோபர் 5 ஆம் தேதி திருமணம் நடைபெறவிருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது.
Mr & Mrs எனும் படத்தில் ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து ஜோடி போட்டு வனிதா விஜயகுமார் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைத் தான் வரும் அக்டோபர் 5ஆம் தேதி வெளியிடபோகின்றனர் என்றும் அதற்கான பப்ளிசிட்டி ஸ்டன்ட் தான் இது என தகவல்கள் வெளியாகின.
வனிதாவின் விளக்கம்
இதைத்தொடர்ந்து, இதுகுறித்து நடிகை வனிதாவே அக்டோபர் 5ம் தேதி விளக்கமளித்தார். அதில், வனிதாவும், ராபர்ட் மாஸ்டரும் ஒன்றாக சேர்ந்து மிஸ்டர் அண்டு மிஸ்சர்ஸ் திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். இந்தத் திரைப்படத்தை நடிகை வனிதாவே எழுதி இயக்கியுள்ளார் என்றார்.
ஷாக்கான மக்கள்
இந்தப் படத்தில் மொத்தம் இரண்டு விஷயங்கள் மக்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்தது.
ஒன்று, இதுவரை பட வாய்ப்புகளுக்காக காத்திருந்த வனிதா, பிக்பாஸ் புகழால் திரைப்படங்களில் நடித்து, தற்போது, ஒரு இயக்குநராக மாறியது.
இரண்டாவது இந்தப் படத்தின் தயாரிப்பாளரின் பெயரைக் கண்டு வந்தது. வனிதாவும் ராபர்ட் மாஸ்டரும் நடித்துள்ள மிஸ்டர் அண்ட் மிஸ்சர்ஸ் திரைப்படத்தை தயாரிக்க உள்ளது, வனிதாவின் மகள் ஜோவிகாவாம். இவரும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்தவர்.
கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்
இப்போது, தனது தாய் நடிக்கும் படத்தை தயாரித்து, சினிமா துறைக்குள் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகவுள்ளார்.வனிதாவின் பணத்தை வைத்து படத்தை தயாரித்து இருப்பினும், சினிமாவில் ஒரு படத்தை தயாரித்து வெளியிடுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல.
சினிமாவில் நடிகர், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கையில் வைத்துள்ள தனுஷே, தனது 27வது வயதில் தான் முதல் படத்தை தயாரித்தார். ஆனால், ஜோவிகா, 21 வயது ஆகும் போதே சினிமாவில் முதல் படத்தை தயாரித்துள்ளார் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
மேலும், சினிமாவில் மிக ஆர்வமாக நடித்து வரும் வனிதா, தனது மொத்த பொறுப்புகளையும் மகள் ஜோவிகாவிடம் ஒப்படைத்துவிடுவார் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.