விஜய்க்கு 5 நாட்கள் தான் கெடு! தவெகவிற்கு இத்தனை தடங்கலா? அதிர்ச்சியில் விஜய்!
Oct 20, 2024, 12:55 PM IST
வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தல் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக கடந்த சில ஆண்டுகளாகவே அறிவிப்புகள் வெளி வந்த வண்ணம் இருந்தது. இதனை உறுதிப்படுத்திய விஜய் கடந்த பிப்ரவர் மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். அவர் கட்சி தொடங்கியதும் வந்த நாடாளுமன்ற தேர்தலில் அவரது கட்சி பங்கேற்கவில்லை. மேலும் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தல் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கட்சிக் கொடி மற்றும் பாடல்
கட்சி தொடங்கிய விஜய், தற்போது கைவசம் உள்ள படங்களில் மட்டும் நடித்து விட்டு முழுதுமாக அரசியலில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்து இருந்தார். மேலும் கடந்த ஆகஸ்ட் 22 அன்று கட்சியின் கொடி மற்றும் பாடலை வெளியிட்டு இருந்தார். மேலும் அந்த கட்சிக் கோடியில் இடம் பெற்ற யானை பேசு பொருளானது. குறிப்பாக பகுஜன் சாமஜ் கட்சியின் கொடியிலும் யானை இடம் பெற்றுள்ளதால் இது சர்ச்சைக்குள்ளாகியது.
இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சி எங்களது யானை சின்னத்தை பயன்படுத்தியது தவறு எனக் கூறியது. மேலும் இந்தியா தேர்தல் ஆணையத்திடம் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் புகார் தெரிவிக்கபட்டது. அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், தேர்தலுக்கு முன்பு தான் ஒரு கட்சி விண்ணப்பித்து அதற்கான சின்னத்தை பெற முடியும். எனவே ஒரு கட்சியின் கொடிக்கு தேர்தல் ஆணையம் சார்பில் ஒப்புதல், அங்கீகாரம் வழங்குவது இல்லை. கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது. ஒரு கட்சிக்கு கொடி இருக்கிறது என்றால் அந்த கட்சி தான் பொறுப்பு. மற்ற கட்சிகளின் சின்னத்தை விதிமீறாமல் கொடி இருக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.
விஜய்க்கு நோட்டீஸ்
பகுஜன் சமாஜ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவின் மாநில துணை தலைவர் சந்தீப் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது குறித்தான அந்த நோட்டீசில், 'இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கபட்ட மத்திய அரசின் அரசிதழ் விதிகளின்படியும் இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அரசு ஆணையின்படி ஒரு கட்சி, தங்களுக்கென ஒரு கொடி இருந்தால் அந்த கட்சி கொடியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வழங்கப்பட்ட சின்னத்தை போன்றோ, மற்ற கட்சிகளின் சின்னத்தை போலவோ அல்லது சின்னத்தின் மாற்று போன்றோ தங்கள் கொடியில் சின்னங்கள் அமையாமல் கவனித்து கொள்ள வேண்டியது அக்கட்சியின் தார்மீக பொறுப்பு.
இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சின்னத்தை கட்சி கொடியில் வைத்திருப்பது விதியை மீறுவதாக உள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடி வெளியிட்ட நாளிலிருந்து இதை வலியுறுத்தி வருகிறோம். பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சேபம் தெரிவித்த நிலையில் இன்றுவரை எந்தவிதமான நடவடிக்கை இல்லாத காரணத்தினால் பகுஜன் சமாஜ் கட்சியின் வழக்கறிஞர் அணியின் அறிவிப்பை இணைத்துள்ளோம். இதனையே சட்ட முறையான அறிவிப்பாக கருதி கட்சி கொடியிலிருந்து யானை சின்னத்தை நீக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் கட்சியின் மாநாடு நடக்க உள்ள நிலையில் இந்த நோட்டீஸ் தவெகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டாபிக்ஸ்