தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kannodu Kanbathellam: நெகடிவ் கேரக்டரில் மிரட்டிய அர்ஜுன்!சூர்யா - ஜோதிகா ஜோடியாக நடிக்க இருந்து மிஸ்ஸான படம்

Kannodu Kanbathellam: நெகடிவ் கேரக்டரில் மிரட்டிய அர்ஜுன்!சூர்யா - ஜோதிகா ஜோடியாக நடிக்க இருந்து மிஸ்ஸான படம்

Aug 14, 2024, 05:53 PM IST

google News
பிரப சாலமனின் அறிமுக படமான கண்ணோடு காண்பதெல்லாம் என்கிற இந்த படத்தில் காதல் காட்சிகளில் உருகியும், வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் நெகடிவ் கேரக்டரில் அர்ஜுன் நடிப்பில் கலக்கியிருப்பார். சூர்யா - ஜோதிகா இளம் காதலர்களாக கேரக்டரில் முதல் முறையாக ஜோடி சேர இருந்த இந்த படம் மிஸ்ஸானது.
பிரப சாலமனின் அறிமுக படமான கண்ணோடு காண்பதெல்லாம் என்கிற இந்த படத்தில் காதல் காட்சிகளில் உருகியும், வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் நெகடிவ் கேரக்டரில் அர்ஜுன் நடிப்பில் கலக்கியிருப்பார். சூர்யா - ஜோதிகா இளம் காதலர்களாக கேரக்டரில் முதல் முறையாக ஜோடி சேர இருந்த இந்த படம் மிஸ்ஸானது.

பிரப சாலமனின் அறிமுக படமான கண்ணோடு காண்பதெல்லாம் என்கிற இந்த படத்தில் காதல் காட்சிகளில் உருகியும், வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் நெகடிவ் கேரக்டரில் அர்ஜுன் நடிப்பில் கலக்கியிருப்பார். சூர்யா - ஜோதிகா இளம் காதலர்களாக கேரக்டரில் முதல் முறையாக ஜோடி சேர இருந்த இந்த படம் மிஸ்ஸானது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்தபோதே நெகடிவ் கதாபாத்திரத்தில் அர்ஜுன் தோன்றி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய படம் கண்ணோடு காண்பதெல்லாம். ரெமாண்டிக் த்ரில்லர் ஜானர் தமிழில் வெளியான திரைப்படங்களில் முக்கிய படமாக இது அமைந்துள்ளது.

பிரபு சாலமன் இயக்குநராக அறிமுகமான இந்த படத்தில் அர்ஜுன் கதையின் நாயகனாகவும், சோனாலி பிந்த்ரே கதையின் நாயகியாகவும் நடித்திருப்பார்கள். இரண்டாவது நாயகன் மற்றும் நாயகியாக சுசிந்திரா, ருச்சிதா பிரசாத் நடித்திருப்பார்கள்.

மணிவண்ணன், கிரேஸி மோகன், அனு மோகன், நிழல்கள் ரவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள்.

காதலுக்கு எதிரியாக இருக்கும் காதல்

பிசினஸ்மேனாக இருக்கும் அர்ஜுன், சோனாலி பிந்த்ரே மீது பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார். இதற்கிடையே இளம் காதலர்களாக இருக்கும் சுசிந்திரா - ருச்சிதா பிரசாத் ஆகியோரின் அர்ஜுனின் காதல் பிரிவதற்கு எதிர்பாராத விதமாக காரணமாக அமைகிறார்கள். இதனால் இந்த இளம் காதலர்களை பழிவாங்க அவர்களை இணைந்து இருக்கவிடாமல் டார்ச்சர் செய்கிறார். இறுதியில் காதலித்த பெண்ணை அர்ஜுன் சந்திக்க, இளம் காதலர்கள் என்ன ஆனார்கள் என்பதை டுவிஸ்டுடன் கூறியிருப்பார்கள்.

வில்லத்தனத்தில் மிரட்டிய அர்ஜுன்

படத்தின் முதல் பாதியில் பிசியான பிசினஸ் மேனாகவும், இரண்டாவது பாதியில் தனது காதலை தொலைக்க காரணமாக இருந்த காதலர்களை பாடாய் படுத்துவது என வில்லத்தனமான நடிப்பில் மிரட்டியிருப்பார்.

சோனாலி பிந்த்ரே குறைந்த காட்சிகள் வந்திருந்தாலும் அழகு பதுமையாக தோன்றி, நடிப்பிலும் கலக்கியிருப்பார்.

முதலில் அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தில் ரகுவரன் நடிக்க வைக்க இயக்குநர் பிரப சாலமன் முயற்சித்தார். படத்தின் கதை பிடித்துபோக அவரும் சம்மதம் தெரிவித்தார். ஆனால் அவர் நடிக்க முடியாமல் போக இந்த கதை மம்முட்டி, ராஜசேகர், பார்த்திபன் என சென்றது.

இறுதியில் அர்ஜுன் நடிக்க கமிட்டானதுடன், சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார். 

அர்ஜுன் - சோனாலி இடையிலான காட்சிகள் மிகவும் குறுகிய நேரத்தில் வந்தாலும் ரசிக்கும் விதமாகவும், கதைக்கும் முக்கியத்துவமாகவும் அமைந்திருக்கும். சோனாலியிடம் காதலை வெளிப்படுத்தும் காட்சியில் அர்ஜுன் இயல்பான உணர்ச்சிகளை காட்டி ஸ்கோர் செய்திருப்பார். 

மிஸ்ஸான சூர்யா - ஜோதிகா ஜோடி

படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்திருக்கும் சுசிந்திரா, பழம்பெரும் நடிகை வைஜேந்தி மாலாவின் மகன் ஆவார். இவரை இந்த படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். ஆனால் இந்த கேரக்டரில் நடிப்பதற்கு, இயக்குநர் பிரபு சாலமன் சூர்யா - ஜோதிகாவிடம் பேசி சம்மதமும் வாங்கியிருந்தார். பட தயாரிப்பு நிறுவனத்தின் முடிவால் இந்த ஜோடி மிஸ்ஸானது.

தேவா இசையில் அற்புதமான பாடல்கள்

மயில் பாடல் வரிகளில் ஹரிஹரன் பாடிய தாஜ்மகால் ஒன்று காதல் சொல்லியதே சிறந்த மெலடியாகவும், எஸ்பிபி - சுஜாதா பாடிய மோனா மோனா மோனலிசா பாடல் துள்ளல் இசையுடன் கூடிய பாடலாகவும் ஹிட்டடித்தது.

அதேபோல் பாடலாசிரியர் கலைக்குமார் எழுதி ஜானகி, ஹரிஹரன் பாடிய இருபது வயது வரை என்ற மற்றொரு மெலடி பாடலும் 1990 காலகட்டத்தில் ஒலித்த அற்புத மெலடி பாடலாக அமைந்தது.

இரண்டு க்ளைமாக்ஸ்

படத்தின் க்ளைமாக்ஸில் சோனாலிக்கு திருமணம் ஆகியிருப்பது போலவும், அர்ஜுன் தனது தவறை உணர்ந்தாலும், அவருக்கு ஜோடி இல்லாமல் இருப்பது போலவும் முடித்திருப்பார்கள்.  ஆனால் படம் இப்படி முடிந்தது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், சோனாலியின் கணவராக காட்டப்பட்ட நிழல்கள் ரவி கேரக்டரை அவரது அண்ணாக காட்டி இரண்டாவது க்ளைமாக்ஸுடன் படத்தை முடித்து இன்னொரு வெர்ஷனை வெளியிட்டார்கள். 

சுவாரஸ்யமான திரைக்கதை, கதாபாத்திரங்களில் நடிப்பு, பாடல்கள் இதர தொழில்நுட்ப விஷயங்கள் என அனைத்தும் சிறப்பாக அமைந்தபோதிலும் பெரிய வெற்றியை பெறாமல் போனது. ஆனாலும் அர்ஜுனின் வித்தியாச நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த கண்ணோடு காண்பதெல்லாம் படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி