தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  A.r.rahman:கேரளா ஸ்டோரி சர்ச்சைகளுக்கிடையில் கவனம் ஈர்த்த ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்!

A.R.Rahman:கேரளா ஸ்டோரி சர்ச்சைகளுக்கிடையில் கவனம் ஈர்த்த ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்!

May 04, 2023, 09:26 AM IST

google News
Kerala Story: கேரளா ஜமாத் ஒன்றில் இந்து முறைப்படி நடந்த திருமணம் குறித்த செய்தி காணெளியை பகிர்ந்து அதில் "துணிச்சல் என குறிப்பிட்டுள்ளார்
Kerala Story: கேரளா ஜமாத் ஒன்றில் இந்து முறைப்படி நடந்த திருமணம் குறித்த செய்தி காணெளியை பகிர்ந்து அதில் "துணிச்சல் என குறிப்பிட்டுள்ளார்

Kerala Story: கேரளா ஜமாத் ஒன்றில் இந்து முறைப்படி நடந்த திருமணம் குறித்த செய்தி காணெளியை பகிர்ந்து அதில் "துணிச்சல் என குறிப்பிட்டுள்ளார்

கேரள ஸ்டோரி சர்ச்சைகளுக்கு இடையே தற்போது ஏ.ஆர் ரஹ்மானின் ட்விட்டர் பதிவு பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கேரளா ஸ்டோரி திரைப்படம் மே 5ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இந்தப் படத்திற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த திரைப்படம் வெறுப்பு பிரச்சாரத்தை தூண்டும் வகையில் உள்ளது என்று அம்மாநில முதல்வர் உள்ளிட்ட பல தரப்பினரும் குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தனது ட்விட்டர் பதில் கேரளா ஜமாத் ஒன்றில் இந்து முறைப்படி நடந்த திருமணம் குறித்த செய்தி காணெளியை பகிர்ந்து அதில் "துணிச்சல்... மனித குலத்தின் மீதான அன்பு நிபந்தனையற்றதாகவும் குணப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ள திருமணத்தின் சுவாரஸ்யம்

கேரள மாநிலத்தில் ஆலப்புழாவைச் சேர்ந்த இளம் பெண் அஞ்சு. இவரின் தந்தை கடந்த 2019ம் ஆண்டு திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். தாய் தன் மூன்று மகள்களுடன் வசித்து வந்துள்ளார். தந்தை இறந்த பிறகு அஞ்சுவின் குடும்பம் பொருளாதார ரீதியில் பின்னடைவை சந்தித்தது. இந்த நிலையில், மூத்த மகளான அஞ்சுவுக்குத் திருமணம் செய்துவைக்க அவரின் தாய் பெரும் சிரமப்பட்டுள்ளார்.

அப்போது அஞ்சுவின் தாய் பிந்து, தன் பகுதியில் உள்ள செருவாளி முஸ்லிம் ஜமாத் கமிட்டிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் தன் குடும்ப நிலை பற்றியும் மகளின் திருமணம் பற்றியும் குறிப்பிட்டு, திருமணத்துக்குப் பண உதவி செய்யமுடியுமா என வேண்டுகோள் விடுத்திருந்தார். இதைப் படித்த உடனேயே அஞ்சுவின் திருமணச் செலவை ஏற்பதாக ஜமாத் கமிட்டி ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அஞ்சுவுக்கும் சரத் என்பவருக்கு திருமணம் நடைபெற்றது.

அதிலும் செருவாளி மசூதி வளாகத்தில் சிறிய மேடை அமைத்து அதில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. இது மட்டுமல்லாது திருமணத்துக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் உறவினர்களுக்கு ஜமாத் கமிட்டி சார்பாக சைவ உணவு பரிமாறப்பட்டது. மேலும், அஞ்சுவுக்கு சீதனமாக 10 பவுன் தங்க நகையையும் இரண்டு லட்சம் ரூபாய் பணமும் வழங்கியுள்ளது கமிட்டி. இந்தச் சிறப்பு திருமண நிகழ்வில் இந்து, முஸ்லிம் என அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொண்டு மணமக்களை ஆசீர்வாதம் செய்துள்ளனர்.

ஏழைப் பெண்ணுக்கு அளித்த வாக்குறுதியின்படி திருமணத்தை விமரிசையாக நடத்தி முடித்துள்ள ஜமாத் கமிட்டிக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி