லட்சியம், காதல், போராட்டம், வாழ்கை! உணர்வுப்பூர்வமான கதை! 23ம் ஆண்டில் கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்
May 05, 2023, 05:50 AM IST
இப்படத்தை இயக்குனர் ராஜிவ் மேனன் இயக்கியிருப்பார். சென்ஸ் மற்றும் சென்ஸிபிளிட்டி நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருப்பார். ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்தப்படம் வெளியானபோது நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.
ஒரு கிராமத்தில் வசித்து வரும் தனிப்பெண்ணுக்கு மூன்று பெண் குழந்தைகள் இருப்பார்கள். அதில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு பிரச்னை ஏற்படுகிறது. அதை அவர்கள் எவ்வாறு எதிர்கொண்டு ஜெயிக்கிறார்கள் என்பதுதான் கதை. கிராமத்தில் வசிக்கும் தாய் ஸ்ரீவித்யா அவரது பேசமுடியாத மற்றும் லை, கால்கள் செயலிழந்த தந்தையை தனது மூன்று மகள்களுடன் பார்த்துக்கொள்கிறார். ஏற்கனவே அவர் கணவனை இழந்தவர்.
மூத்த மகள் தபு, இரண்டாவது மகள் ஐஸ்வர்யா ராய், மூன்றாவது மகள் ஷாம்லி. அனைவரும் கிராமத்தில் இருப்பார்கள். அஜீத், சினிமாத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற வெறியில் வெற்றி இயக்குனராக வேண்டும் என்ற வெறியில் உழைத்துக்கொண்டிருப்பார். வழக்கம்போல், மூத்த மகளான தபுவுக்கு திருமணம் செய்ய தாய் முயலும்போதெல்லாம் அவருக்கு வரன் அமையாமல் அதிர்ஷ்டமில்லாத பெண் என்ற பெயர் கிடைத்து அந்த மன உளைச்சலில் வாழ்ந்துகொண்டிருப்பார்.
ஒரு படத்தின் படப்பிடிப்பிற்காக இவர்கள் வசிக்கும் கிராமத்திற்கு வரும்போது அஜித் தபுவை சந்திக்க நேரிட்டு காதல் வயப்படுகிறார். பணி நிமித்தம் அந்த கிராமத்திற்கு வரும் அப்பாஸ், ஐஸ்வர்யா ராயுடன் காதலில் விழுகிறார். இவர்களின் குடும்ப நண்பராக அறிமுகமாகிறார் ராணுவ வீரர் மம்முட்டி, போரில் ஒரு காலை இழந்த அவரும் ஐஸ்வர்யா ராயை ஒரு தலையாக காதலிக்கிறார். கடைசி மகள் சிறுமி. இப்படியாக நாட்கள் செல்ல, அந்த வாய் பேச முடியாத ஸ்ரீவித்யாவின் தந்தையும் இறந்து விடுகிறார்.
பின்னர் வழக்கப்படி அவர்களின் சொத்து அனைத்தும் தந்தையை கவனிக்காத மகன் நிழல்கள் ரவிக்குச் சென்றுவிடுகிறது. இதனால் ஸ்ரீவித்யாவின் மொத்த குடும்பமும் தெருவிற்கு வருகிறது. அவர்கள் சென்னைக்கு குடிபெயர்கிறார்கள். இதற்கிடையில் அப்பாஸ் குடும்ப நிர்பந்தத்திற்காக வேறு ஒரு பெண்ணை மறக்க நேரிடுகிறது.
பாடல் பாடுவதில் திறமையுள்ள ஐஸ்வர்யா ராயும் சென்னையில் சினிமாவில் பாடல்கள் பாடி குடும்பத்திற்கு உதவுகிறார். இவர்கள் சென்னையில் வசிப்பதற்கு மம்முட்டியும் உதவுகிறார். அப்பாஸ் ஏமாற்றிய மன உளைச்சலில் இருக்கும் ஐஸ்வர்யாராய் மம்முட்டியை காதலிக்க துவங்குகிறார்.
இதற்கிடையில் தபு ஒரு நிறுவனத்தில் சாதாரண வேலையில் சேர்கிறார். பின்னர் அங்கேயே அவருக்கு நல்ல வேலையை அவரது பாஸாக வரும் ரகுவரன் வழங்குகிறார். இவரது பரிந்துரைத்த பெயரில் வெளியான படம் அஜித்திற்கு காலை வாரிவிட மீண்டும் அவருக்கு அதிர்ஷ்டமில்லாத பெண் என்ற பெயர் கிடைக்கவே அவர், அஜித்தை சந்திப்பதையே தவிர்க்கிறார். அவரை மறக்கவும் முடியாமல், சந்திக்கவும் முடியாமல் காதல் வாட்டும் காட்சிகளில் தபு கலக்கியிருப்பார். நன்றாக சம்பாதித்து சொந்த வீடெல்லாம் வாங்கியிருப்பார்.
பின்னர் அஜித் வேறு ஒரு படம் எடுத்து வெற்றி பெற்று தபுவை சந்திப்பார். அஜித்தை தபு ஏற்றுக்கொள்வாரா? மாட்டாரா என்பதுதான் படத்தின் கிளைமேக்ஸ். காதல், பாசம், போராட்டம், லட்சியம், வாழ்க்கை என பல்வேறு பரிமாணங்களிலும் படம் பயணிக்கும்.
இப்படத்தை இயக்குனர் ராஜிவ் மேனன் இயக்கியிருப்பார். சென்ஸ் மற்றும் சென்ஸிபிளிட்டி நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருப்பார். ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்தப்படம் வெளியானபோது நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. அத்துடன் இன்றளவும் ரசிகர்கள் மனதில் இடம்பெற்ற படமாகவும் உள்ளது.
இந்தப்படத்தின் பாடல்கள் குறித்து பிரத்யேகமாக பேசிய ஆக வேண்டும். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட். எங்கே எனது கவிதை... சந்தன தென்றலில்.... கண்டுகொண்டேன்... கண்டுகொண்டேன்... கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா.... கொஞ்சும் மைனாக்களே என்று அனைத்து பாடல்களும் இன்றளவும் ரசிக்கக்கூடியவையாக உள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்