தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தென்னிந்திய சினிமாவின் நாயகி.. நடிப்பு மட்டும் தான்.. வெளியே பார்க்க முடியாத திரை ஓவியம் நடிகை சுஜாதா

தென்னிந்திய சினிமாவின் நாயகி.. நடிப்பு மட்டும் தான்.. வெளியே பார்க்க முடியாத திரை ஓவியம் நடிகை சுஜாதா

Apr 06, 2024, 06:30 AM IST

google News
நடிகை சுஜாதா உச்ச நடிகையாக இருந்த பொழுதும் அவரை எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் பார்க்க முடியாது. தமிழில் அவர் நடித்த கடைசி திரைப்படம் வரலாறு. தெலுங்கில் ஸ்ரீ ராமதாசு என்ற திரைப்படத்தில் கடைசியாக இவர் நடித்திருந்தார். 2011 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார்.

சினிமா பல புதையல் நிறைந்த வேற்று உலகம். அங்கு அவிழ்க்க முடியாத முடிச்சுகள் எத்தனையோ உள்ளன. பல நடிகர்களின் வாழ்க்கை மர்மமான கதையாக இருந்துள்ளது. அது இப்போதும் தொடர்வது சற்று வருத்தத்துக்குரிய செய்தியாகும்.

காலடி எடுத்து வைத்த முதல் திரைப்படத்தின் கதை போலவே நிஜ வாழ்க்கை ஒருவருக்கு அமைந்ததென்றால் அது நடிகை சுஜாதாவுக்கு மட்டும்தான். இவரைப் பற்றி சினிமா வட்டாரங்களில் உள்ள எவருக்கும் தெரியாது.

ஒரு சிலருக்கு அவரைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பு இருந்தாலும். அவர்கள் வாய் திறக்க வாய்ப்பே கிடையாது. அவள் ஒரு தொடர்கதை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகத்தில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை சுஜாதா.

நிஜ வாழ்க்கையில் இவர் யார் என்று யாருக்கும் தெரியாது. அவரைப் பற்றி அவருக்கு மட்டுமே தெரியும். இறுதி வரை அவரை அவரே பார்த்துக் கொண்டார். எவராலும் நெருங்க முடியாத தனி ராணியாக வாழ்ந்து வந்தார்.

200க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார். அதில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகி. திரையில் இவருடன் நடிக்காத சூப்பர் ஸ்டார்களே இருக்க முடியாது. என்னதான் சினிமாவில் பல விருதுகள் பெற்றுப் பல படங்கள் நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் குடும்பத்தோடு வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கையாகும்.

ஒரு கட்டத்தில் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்தில் தன்னை சிக்க வைத்துக் கொண்டார் எனக் கூறப்படுகிறது. இலங்கையில் பிறந்து இளம் வயதில் கேரளா வந்து தஞ்சமடைந்தவர் சுஜாதா. சினிமாவில் நடிக்க விருப்பமில்லை என்றாலும் இவரைத் தேடி சினிமா வந்தது.

1971 ஆம் ஆண்டு மலையாள படமான தபஷ்வினி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஒரு படப்பிடிப்பின் போது இயக்குநர் பாலச்சந்தரின் கண்களில் சிக்கினார். உடனே அவர், அவள் ஒரு தொடர்கதை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகில் அறிமுகப்படுத்தினார் .

அந்தப் படத்தைப் பார்த்தால் அது நடிகை சுஜாதாவுக்கு முதல் படம் என்று யாராலும் சொல்ல முடியாது. அந்தத் திரைப்படத்தில் சுஜாதாவின் கவிதா கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விடவும் முடியாது. நிஜ வாழ்க்கையில் கவிதா எப்போதும் பெண்களுக்கு முன் உதாரணம் தான்.

அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என தென்னிந்தியா முழுக்க வாய்ப்புகள் இவரைத் தேடி வந்தன. இசைஞானியாகத் தமிழ் சினிமாவில் வாழ்ந்து வரும் இளையராஜாவுக்கு முதல் படமான அன்னக்கிளி திரைப்படத்தில் இடம் பெற்ற மச்சானை பாத்தீங்களா என்ற பாடலை உலகம் முழுக்க பரப்பியது இதே சுஜாதா தான்.

இப்படி தென்னிந்தியா முழுக்க வலம் வந்த நடிகை சுஜாதா, ஒரு சூழ்நிலையில் யாருமே சந்திக்க முடியாத அளவிற்கு ஒதுங்கி இருந்தார். சூட்டிங் பற்றி அவரிடம் தெரிவிப்பதே மிகப்பெரிய சவாலாக இருந்தது. இவர் எங்கே இருக்கிறார் என்று மற்றவர்கள் தேடும் அளவிற்கு மர்மமாக மறைந்து விடுவார்.

அவருக்கு ஏதோ சிக்கல் இருக்கிறது என்று மற்றவர்களுக்குத் தெரிந்தாலும், எவரும் அவரிடம் நெருங்க முடியவில்லை. இருப்பினும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவ்வப்போது சினிமாவில் வந்து நடித்து தனது ரசிகர்களை மகிழ்வித்தார். 1990 ஆம் ஆண்டிற்குப் பிறகு திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார்.

இவர் ஜோடியாக நடித்த அனைத்து நடிகர்களுக்கும் அம்மாவாகவும் நடித்தார். சிவாஜி கணேசன் மறைந்த தருணத்தில் நடிகை மனோரமாவுடன் சேர்ந்து ஊர்வலத்தில் நடந்து வந்தார். சிவாஜி வீட்டிற்குள் அமர்ந்திருந்த அவரை பல ஊடகங்கள் பேட்டி எடுக்க முயற்சி செய்தும் அது தோல்வியிலேயே முடிந்தது.

நடிகை சுஜாதா உச்ச நடிகையாக இருந்த பொழுதும் அவரை எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் பார்க்க முடியாது. தமிழில் அவர் நடித்த கடைசி திரைப்படம் வரலாறு. தெலுங்கில் ஸ்ரீ ராமதாசு என்ற திரைப்படத்தில் கடைசியாக இவர் நடித்திருந்தார். 2011 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார்.

இவருடைய இறுதிச் சடங்கிற்கு வந்த இயக்குனர் கே. பாலச்சந்தர் அவரின் உடலைப் பார்த்து கண் கலங்கி நின்றார். ஒழுக்கமான பெண்மணியாக இருந்து வந்த நடிகை சுஜாதா, வீடு விட்டால் ஷூட்டிங், ஷூட்டிங் விட்டால் வீடு எனத் தனது வாழ்க்கையை ஒரு மர்மமான பைக்குள் முடிச்சு போட்டு வைத்திருந்தார்.

இன்றுடன் அவர் காலமாகி 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவள் ஒரு தொடர்கதையில் தொடங்கிய இந்த நடிகையின் வாழ்க்கையானது மர்மங்கள் நிறைந்த தொடர் கதையாக இன்றும் நீடித்து வருகின்றது. என்னவாக இருந்தாலும் தென்னிந்திய சினிமாவால் தவிர்க்க முடியாத நாயகி தான் சுஜாதா.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி