Sri Reddy: 'கல்யாணம் என்பது ஒரு அதிகாரப்பூர்வ விபச்சாரம்.. என் கூட தூங்குனவங்க எல்லாம் பெரிய நடிகர்கள்':ஸ்ரீரெட்டி பகீர்
Aug 20, 2024, 10:34 PM IST
Sri Reddy: ‘கல்யாணம் என்பது ஒரு அதிகாரப்பூர்வ விபச்சாரம்.. என் கூட தூங்குனவங்க எல்லாம் பெரிய நடிகர்கள்’ என நடிகை ஸ்ரீரெட்டி பேசியுள்ளார்
Sri Reddy: கல்யாணம் என்பது ஒரு அதிகாரப்பூர்வ விபச்சாரம் எனவும், என் கூட தூங்குனவங்க எல்லாம் பெரிய நடிகர்கள் என நடிகை ஸ்ரீரெட்டி பகீர் கிளப்பியுள்ளார்.
ஒரு ஆண்டுகளுக்கு முன் நடிகை ஸ்ரீரெட்டியிடம் நடிகை ஷகிலா, கலாட்டா பிங்க் சேனலுக்குப் பேட்டி எடுத்து இருந்தார். அந்தப் பேட்டியின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நடிகை ஷகிலாவிடம் உண்மையைப் பகிர்ந்த நடிகை ஸ்ரீரெட்டி:
இதுதொடர்பாக நடிகை ஸ்ரீரெட்டி அளித்த பேட்டி, ‘’கல்யாணம் என்பது ஒரு அதிகாரப்பூர்வ விபச்சாரம். நான் குற்றச்சாட்டு வைத்த எந்தவொரு நபராவது எனக்கும் இந்தப் பெண்ணுக்கும் சம்பந்தம் இல்லை என்று செய்தியாளர்களைச் சந்தித்து கூறியுள்ளனரா, இல்லையே. இதுக்கு மேல் என்ன ஃப்ரூப் வேணும்.
எனக்கு ஏ நடிகை, பி நடிகை அப்படியெல்லாம் தெரியாது. என்னைப் பொறுத்தவரை நல்ல மனதுகொண்ட நடிகையா, இல்லை கெட்ட மனது கொண்டவரா என்பது மட்டுமே முக்கியம்.
நான் எப்போது என்னுடைய மேலாடையை அகற்றி நான் போராடினேனோ, அப்போதே எனக்கு மானம், அபிமானம் எல்லாம் போயிடுச்சு.
நான் சினிமாவில் வாய்ப்புத்தேடும்போது நடக்கும் போட்டோஷீட்டில் அப்படி காட்டு, இப்படி காட்டுனு சொல்றாங்க. புரொடியூசருக்கு இப்படி காட்டி போஸ் கொடு, அப்படி திருப்திப்படுத்தணும் சொல்றாங்க. இந்த மாதிரி கஷ்டம் சினிமா துறையில் இருக்குதுன்னு சொல்றதுக்கு, இதைப் பார்த்து நீங்களாவது நியாயம் சொல்லுங்கன்றதுக்காகத்தான், நான் என் மேல் ஆடையை கழற்றிவிட்டு, ஹைதராபாத்தில் போராட்டத்தில் உட்கார்ந்துட்டேன் அக்கா.
’என் கூட தூங்குன எல்லோரும் பெரிய நடிகர்கள்’ - ஸ்ரீரெட்டி!
நான் சினிமா துறையில் 20 - 25 பேர்கிட்ட ஏமாந்திருக்கேன். இந்த வலி நான் கிரியேட் பண்ணுனது இல்ல. என் கூட தூங்குன எல்லோரும் பெரிய புரொடியூசர், பெரிய நடிகர்கள், பெரிய இயக்குநர்கள்.
பொதுவாக தென்னிந்திய நடிகைகளை தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் ஏற்றுக்கொள்வது இல்லை. சமீப காலங்களாக, தமிழ் சினிமா அப்படி இல்லை. நேச்சுரலாக இருக்குது.
படத்தில் நடிக்கும்போது கதைக்குத்தேவைப்பட்டால் நம் உடலை வெளிக்காட்டலாம். அதைவிட்டுவிட்டு, வெளியில் ஒரு ஆடியோ லாஞ்ச்க்கு உடல் தெரியற மாதிரி துணிபோடுறது தவறுதான்.
இப்படி காட்டினால்தான் வாய்ப்புகள் வருமா? அப்போது திறமைக்கு மதிப்பே இல்லையா?. இப்போது இருக்கிற கிளாமர் எல்லாம் கிளாமரே கிடையாது. அதுக்குன்னு முன்பு மூன்று, நான்கு நடிகைகள் இருந்தாங்க. சில்க் ஸ்மிதா, ஷகிலா, அனுராதா, ஜெயமாலினி, ஜோதிலட்சுமி. அவங்க செஞ்சது தான், கிளாமர். அவங்க தன் உடலைக் காட்டினாலும், ஆபாசம் இருக்காது. ஆனால், செக்ஸியான ஃபீல் வரும். இப்போது இருக்கிற நடிகைகளுக்கு எல்லாம் நல்ல உடம்பே இல்லை. அவங்க ஆணா, பெண்ணா என்றே டவுட்டா இருக்கு’’ என்று பேசி முடித்தார்.
யார் இந்த நடிகை ஸ்ரீரெட்டி?:
ஆந்திர மாநிலத்தைப் பூர்வீகமாக கொண்டவர், நடிகை ஸ்ரீரெட்டி. கடந்த 2011ஆம் ஆண்டு, 'நேனு நானா அபத்தம்’ என்னும் திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகம் ஆனார்.பின் அரவிந்த் 2 மற்றும் ஜிந்தகி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
மிகக்குறைவான படங்களே நடித்தாலும் ஆந்திரா மற்றும் தமிழ் சினிமாவில் நடக்கும் உள்மறைவு வேலைகளை அம்பலப்படுத்தியதற்காக தமிழ் மற்றும் தெலுங்கு மக்களிடையே ரசிகர்களிடையே பரவலாக அறியப்படுகிறார்.
ஆடையைக் கழற்றி போராடிய ஸ்ரீரெட்டி:
கடந்த 2019ஆம் ஆண்டு, தெலுங்கு திரைப்பட சங்கமான, மா முன்பு, தனது மேலாடையைக் களைந்து, போராட்டத்தில் ஈடுபட்டார், ஸ்ரீரெட்டி. தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பல்வேறு தென்னிந்திய நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களைக் குற்றம்சாட்டினார்.
ஸ்ரீரெட்டியின் தொடர்குற்றச்சாட்டுகளால், மனித உரிமைகள் அமைப்பு, தெலங்கானா மாநிலத்திற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பியது.
நடிகர் விஷால், நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது பாலியல் சுரண்டலில் ஈடுபட்டதாகப் பல்வேறு புகார்களை வெளிப்படையாக அறிவித்தார்.
இந்நிலையில் சமீபத்தில் புதிதாகப் பதவியேற்றுள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண், உள்துறை அமைச்சர் அனிதா, சந்திரபாபு நாயுடுவின் மகன் நர.லோகேஷ் ஆகியோர் சர்ச்சையான கருத்துகளைப் பகிர்ந்துவருகிறார். மேலும்,தான் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதரவாளராக தனது சமூக வலைத்தளங்களில் கூறிவருகிறார், ஸ்ரீரெட்டி.
நன்றி: கலாட்டா பிங்க்