Actress Priyamani: “என்னை ஆன்ட்டின்னு கூப்பிடணுமா? தாராளமா.. 39 வயதிலும் நான் ஹாட்தான்..” - பிரியா மணி!
Sep 13, 2023, 06:00 AM IST
பிரியாமணி தன்னுடைய உடல் பற்றிய கமெண்டுகள் குறித்து பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது “நாம் நம்மைப் பற்றி வரும் விமர்சனங்களுக்கு ரியாக்ட் செய்தால் அவர்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று ஆகிவிடும்.
நாம் என்ன செய்தாலும் பேசுகிறவர்கள் பேசிக்கொண்டே தான் இருப்பார்கள். ஒரு படத்திற்காக நான் எடையை குறைத்தால், நீங்கள் அதிகமாக எடையை குறைத்து விட்டீர்கள் என்று பேசுவார்கள். எடையை கூட்டினால் நீங்கள் அதிகமாக எடையை கூட்டி விட்டீர்களே என்று பேசுவார்கள்.
நான் அண்மையில் வெளியான ஃபேமிலி 1 ,ஃபேமிலி 2 ஆகிய இரண்டு சீரிஸூகளிலும் கொஞ்சம் எடை கூடி காட்சியளித்தேன். அந்த கேரக்டருக்காக அதனை நான் செய்ய வேண்டி இருந்தது. அதிலிருந்து தற்போது சொல்ல முடியாத அளவுக்கு நான் என்னுடைய எடையை முழுவதுமாக குறைத்து இருக்கிறேன்.
அடுத்ததாக நான் ஃபேமிலி 3 -ல் வேலை செய்தால் எடையை கூட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். அது எனக்கு தெரியாது. நான் எனக்கு வரும் கமெண்டுகளை படிக்க மாட்டேன் என்று சொல்லமாட்டேன். நிச்சயமாக அந்த கமெண்ட்களை எல்லாம் படிப்பேன். ஆனால் அவர்களுக்கு பதில் அளித்து நான் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை.
அது எனக்கு தேவையில்லாத ஒன்று. நான் நினைத்தால் தற்போது கூட ஒரு ஃபேக் அக்கவுண்டை உருவாக்கி அவர்களுக்கு என்னால் பதிலடி கொடுக்க முடியும். ஆனால் அது எனக்கு தேவையே இல்லை. என்னை ஆன்ட்டி என்று கூப்பிட வேண்டுமா? தாராளமாக கூப்பிடுங்கள். ஒரு பிரச்சனையும் கிடையாது.
நாளை நீங்களும் இதே போன்ற ஒரு வயோதிக நிலையை அடையத்தான் போகிறீர்கள். நான் இந்த இடத்தில் மிகவும் பெருமையாக சொல்கிறேன் எனக்கு 39 வயது ஆகிறது என்று. அடுத்த வருடம் நான் என்னுடைய 40 - தை தொட இருக்கிறேன். இன்றும் நான் ஹாட்டாக இருக்கிறேன். நான் நான் அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட போவதே இல்லை. பாடி ஷேமிங் செய்ய வேண்டுமா தாராளமாக செய்யுங்கள்.” என்று பேசினார்.
நன்றி: இந்தியா கிளிட்ஸ்!
டாபிக்ஸ்