'என்ன மேடம்.. வீடியோ ஏதோ லீக் ஆகிருக்கு போல.. ஆமா Enjoy பண்ணு..' நேரடி விமர்சனங்களை அசால்டாக டீல் பண்ணும் ஓவியா!
Oct 13, 2024, 08:46 AM IST
அந்தரங்க வீடியோ வெளியான நிலையில், அதைப் பார்த்து என்ஜாய் செய்யுமாறு நெட்டிசன்கள் கிண்டலுக்கு பளீரென பதிலளித்து திகைக்க வைத்துள்ளார் நடிகை ஓவியா.
தமிழ், மலையாள மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஓவியா. இந்நிலையில், நேற்று ஓவியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலாகி, இந்திய அளவில் இவர் ட்ரெண்ட் செய்யப்பட்ட நிலையில், எதற்கும் சளைக்காமல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவு செய்திருந்தார்.
மறுப்பு தெரிவிக்காத ஓவியா
அந்தப் பதிவில் கமெண்ட் செய்த பலர் அந்தரங்க வீடியோ குறித்து நக்கலாக கூறி வந்தனர். பின் ஓவியாவிடம் தொடர்ந்து அதுகுறித்து பேசினர். இதற்கிடையில், அந்த வீடியோவில் உள்ளது தான் இல்லை என விளக்கமளிப்பார் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்த நிலையில், அவர் வித்தியாசமாக அந்த கேலிகளையும் கிண்டல்களையும் கையாண்டு பதிலளித்து அனைவரையும் திகைக்க வைத்துள்ளார்.
வழக்கமாக ஒருவரின் அந்தரங்க புகைப்படமோ, வீடியோவை சோசியல் மீடியாவில் வெளிவந்தால், முதலில் அதை மறுக்கத்தான் செய்வார்கள். அதன் பின்னரே, அந்த வீடியோ குறித்தும், அது எப்படி வெளியானது என்பது குறித்தும் விளக்கமளிப்பர். ஆனால், நடிகை ஓவியா அனைவரிலிருந்தும் வேறுபட்டு பதிலளித்துள்ளார்.
கூலாக ஹேண்டில் செய்த ஓவியா
ஓவியாவின் போட்டோவிற்கு கமெண்ட் செய்த நபர் ஒருவர், ஓவியாவின் 17 வினாடி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது எனக் குறிப்பிட்டிருப்பார். இதைக் கண்ட ஓவியா, அவரிடம் என்ஜாய் என பதில் அளித்து, மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
பின், வேறொருவர் வெளியான வீடியோவின் நீளம் மிகவும் குறைவாக உள்ளது. அதிக நேரம் உள்ள வீடியோ கிடைக்குமா என கேள்வி எழுப்பி இருந்தார். அதைக் கண்டு கோபமடைந்து ஓவியா பதிலளிப்பார் என எதிர்பார்த்தால், அடுத்த முறை ப்ரோ என கூலாக பதிலளித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், எமோஜிக்கள் அனுப்பிய மற்றொரு நபரிடம், வீடியோவின் லிங்க் இருக்கிறதா எனவும் கேட்டுள்ளார்.
ஓவியாவுக்கு ஆதரவு குரல்
இந்த விஷயத்தில் நடிகை ஓவியா இப்படி நடந்துகொள்வார் என யாருமே எதிர்பார்க்காத நிலையில், அவர் சளைக்காமல் தன்னை கிண்டல் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்துவருகிறார். இவரின் இந்த செயலை பலரும் ஆச்சரியமாக பாராட்டி வருகின்றனர். ஒரு இக்கட்டான சூழலில் அவர் பிரச்சனையை கையாண்ட விதத்தை பலரும் பாராட்டி, அவருக்கு ஆதரவு குரல் கொடுத்தும் வருகின்றனர்.
களவாணி ஓவியா
தமிழ் சினிமாவில் நடிகர் விமலின் ஜோடியாக களவானி படத்தில் நடித்து, தனது அப்பாவித்தனமான முகத்தால் மக்கள் மனதில் அமர்ந்தவர் ஓவியா. தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் படமான மெரினாவில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருப்பார்.
பின்னர், அவருக்கு முக்கியத்துவம் கிடைக்கும் படியான படங்கள் அமையாததால், கலகலப்பு, மூடர் கூடம், யாமிருக்க பயமே போன்ற படங்களில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.பின், நடிகர் கதிருக்கு ஜோடியாக மதயானைக் கூட்டம் படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார். தொடர்ந்து அவர், மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வந்தார்.
பிக்பாஸ் நட்சத்திரம்
இதற்கு இடையில் தான், விஜய் டிவி நடத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார் ஓவியா. அங்கு அவர் பேசிய விஷயங்களும், அவரின் நடவடிக்கைகளும், அவரின் என்ணங்களும் மக்களுக்கு பிடித்துப்போக இவர் மீண்டும், மக்கள் இதயங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்தார். அவருக்காக ஆர்மியும் உருவாக்கப்பட்டது.
காதல் தோல்வி
இந்நிலையில், தான் பலமுறை காதலில் தோற்றுள்ளேன். பலரும் என்னை ஏமாற்றி இருக்கிறார்கள். எனக்கு திருமணம் மற்றும் லிவிங் டூ கெதர் உறமுறையில் நம்பிக்கை போய் விட்டது என அவர் மிகவும் மனமுடைந்து கூறி வந்த நிலையில், இதுபோன்ற வீடியோவை வெளியிட்டு ஓவியாவின் பெயருக்கு களங்களம் ஏற்படுத்த சிலர் நினைத்துள்ளனர். ஆனால், அவரோ அதை மிகவும் கூலாக ஹேண்டில் செய்து மாஸ் காட்டி வருகிறார்.
டாபிக்ஸ்