தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nandita Swetha: அதிகமா வேலை செய்ய முடியாது.. 3 வருட வேதனை.. சமந்தா வரிசையில் நோயால் அவதியுறும் நந்திதா! - விபரம்!

Nandita Swetha: அதிகமா வேலை செய்ய முடியாது.. 3 வருட வேதனை.. சமந்தா வரிசையில் நோயால் அவதியுறும் நந்திதா! - விபரம்!

Jul 19, 2023, 01:30 PM IST

google News
உடல்சோர்வு, வலி, தசைக்கூட்டு வலி, உணர்ச்சிகள் சமநிலையின்மை, நினைவாற்றல் சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளிட்டவை இதன் அறிகுறிகள். என்னால் மிக நீணட நேரம் வேலை செய்ய முடியாது. நான் என்னுடைய சாப்பாட்டில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறேன்.

தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த நடிகை நந்திதா ஸ்வேதா கடந்த 2008ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'நந்தா லவ்ஸ் நந்திதா' என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

தமிழில் பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டக்கத்தி திரைப்படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து அதன் பின்னர் எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, விஜய் நடித்த புலி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். அதன் பின்னர் தமிழ் படங்களின் வாய்ப்பு குறையவே, தெலுங்கு பக்கம் தாவினார்.

தற்போது அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ஹிடிம்பா திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது. நாளை இந்தப்படம் வெளியாக இருக்கிறது.

ஃபைப்ரோமியால்ஜியா எனும் நோய்!

இந்த நிலையில் அவர் ஃபைப்ரோமியால்ஜியா எனும் அரிய வகை நோயால் அவர் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதனை பேட்டி ஒன்றில் அவரே உறுதிப்படுத்தியும் இருக்கிறார். இது குறித்து பேசிய நந்திதா, “ நான் ஃபைப்ரோமியால்ஜியா எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். உடல்சோர்வு, வலி, தசைக்கூட்டு வலி, உணர்ச்சிகள் சமநிலையின்மை, நினைவாற்றல் சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளிட்டவை இதன் அறிகுறிகள். என்னால் மிக நீணட நேரம் வேலை செய்ய முடியாது. நான் என்னுடைய சாப்பாட்டில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறேன்.

இந்த நோயானது என்னுடைய வளர்சிதை மாற்றத்தை பாதிக்கலாம். இது என்னுடைய உடல்முழுக்க மெதுவாக பரவும். கடந்த மூன்று வருடங்களாக இந்த நோயுடன் போராடி வருகிறேன். இது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியே நம் உடலை அழிக்கும் ஆட்டோ இம்யூன் நோய் வகையைச் சேர்ந்தவை அல்ல. இது இரவு நேரங்களில் தூங்காமல் இருப்பது, உடல் அழுத்தம் உள்ளிட்டவற்றால் வருகின்றன. இது நம் உடலை விட்டு செல்வதில்லை. காரணம் அவை நம் உடலிலேயே இருக்கும்.

நான் அதிகமாக உடற்பயிற்சி செய்யக்கூடாது, உணவுக்கட்டுப்பாட்டிலும், உறக்கத்திலும் நீங்கள் சமரசமே செய்யக்கூடாது. இதனை அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படத்திலும் கடை பிடித்து இருக்கிறேன்” என்றார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி