Actress Mumtaz: “15 வருஷமா மருந்து மாத்திரை; 2.30 மணி நேரம் அப்படியே கதறி அழுது..”- எமனிடம் இருந்து மும்தாஜ் மீண்ட கதை!
Apr 06, 2024, 04:45 AM IST
கிட்டத்தட்ட 15 வருடங்களாக நான் அதற்காக மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொண்டு இருந்தேன். அல்லாவின் ஆசீர்வாதத்தாலும், குடும்பத்தின் உறுதுணையாலும் இப்போது அதில் இருந்து மீண்டு விட்டேன்.
வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட நோய் குறித்து மும்தாஜ் கலாட்டா பிங்க் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
அவர் பேசும் போது, “நான் அப்போது மும்பையில் இருந்தேன். ஒரு நாள் ஷாப்பிங் முடித்து வந்து கொண்டிருந்தேன். திடீரென்று என்னால் நடக்க முடியாமல் போனது. திடீரென்று முதுகில் ஏதோ பிடித்தது போல இருந்தது. என்னுடைய காலை நான் இழுத்து இழுத்து நடக்க வேண்டியதாயிற்று.
இதனையடுத்து நான் பல மருத்துவர்களை சென்று சந்தித்தேன். பலவிதமான ஸ்கேன்களை எடுத்து பார்த்தேன். ஆனால் எந்த ஒரு மருத்துவராலும் பிரச்சினை இதுதான் என்று கணிக்க முடியவில்லை. அதனை தொடர்ந்து எடுக்கப்பட்ட ரத்த பரிசோதனையில், எனக்கு ஆட்டோ இம்யூன் நோய் இருப்பது தெரியவந்தது. அதாவது உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியே உங்களுடைய உடலுக்கு எதிராக வேலை செய்யும்.
கிட்டத்தட்ட 15 வருடங்களாக நான் அதற்காக மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொண்டு இருந்தேன். அல்லாவின் ஆசீர்வாதத்தாலும், குடும்பத்தின் உறுதுணையாலும் இப்போது அதில் இருந்து மீண்டு விட்டேன்.
என்னால் நிறைய நாட்கள் பாத்ரூம் கூட ஒழுங்காக செல்ல முடியாமல் இருந்திருக்கிறது. வலி வரும் பொழுது என்னால் சிறிது நகர்ந்து கூட உட்கார முடியாது.
என்னுடைய உடலில் இருக்கக்கூடிய அனைத்து ஜாயிண்டுகளிலும் அந்த வலியானது இருக்கும். அதற்காக நான் ஊசிகளை எடுத்துக் வருகிறேன். நான் சிறுவயதில் இருந்தே மிகவும் எமோஷனலான ஆள். இதை பார்க்கும் பலர், என்னா நடிப்படா சாமி என்ற ரீதியில் கூட கமெண்ட் செய்திருக்கிறார்கள்.
நான் மிகவும் எமோஷனலான ஆள் என்பதை புரிந்து கொண்டே நிறைய பேர் என்னை நெருங்கி ஏமாற்ற வருவார்கள். சில சமயங்களில் அவர்கள் என்னை ஏமாற்றதான் வந்திருக்கிறார்கள் என்பது அப்பட்டமாக தெரியும்.
ஆனாலும் பரவாயில்லை; வந்து ஏமாற்றி விட்டு போங்கள், அந்த குறைந்த நேரத்தில் அவர்கள் ஒரு பொய்யான அன்பை என்னிடத்தில் காண்பிக்கிறீர்கள் அல்லவா? அது எனக்கு கொஞ்சம் நன்றாக இருக்கும். நேரமும் செல்லும் என்பதால், அதை அனுமதிப்பேன். என்னை பொறுத்தவரை என்னை நிறைய பெண்கள்தான் ஏமாற்றி இருக்கிறார்கள்.
நான் என்னுடைய அண்ணாவிடம் மிகவும் நெருக்கமாக இருப்பதற்கான காரணமே எனக்குள் இருக்கக்கூடிய மன அழுத்தம் தான். ஒரு முறை அவர் என்னை வீட்டில் விட்டுவிட்டு அலுவலகத்திற்கு சென்று விட்டார். நான் அப்படியே அழ ஆரம்பித்து விட்டேன். கிட்டத்தட்ட 2:30 மணி நேரம் தொடர்ச்சியாக அழுது கொண்டே இருந்தேன். என்னுடைய அண்ணா தான் என்னை ஒரு தாய் போல பார்த்துக் கொண்டார்.
நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டு விட்டால், அவருக்கு கொடுக்கக்கூடிய மருந்து மாத்திரைகள் எல்லாவற்றையும் தாண்டி குடும்பத்தில் ஒருவர் அக்கறையுடன் பார்த்துக் கொள்வதுதான் அவரை அந்த நோயிலிருந்து மீட்டுக் கொண்டு வரும்.” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்