'சினிமாவில் 10, 12 மணி நேரம் வேலை செய்வது கஷ்டம் தான் ஆனால் செய்ய முடியாதது அல்ல..' ஜெனிலியா சொல்வது என்ன?
Published Jun 17, 2025 11:04 AM IST

திரைப்படத்தின் இயக்குனர் படப்பிடிப்பை 12 மணி நேரம் வரை நீட்டித்தாலும், அது நியாயமானதாகவே இருக்கும் என்று நடிகை ஜெனிலியா டிசோசா கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகை ஜெனிலியா டி'சோசா நீண்ட வேலை நேரம் மற்றும் தனது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை எவ்வாறு சமநிலைப்படுத்துகிறார் என்பது பற்றி பேசியுள்ளார். ஜெனிலியா ஜூம் உடனான உரையாடலில், ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்வதாகவும், அது "கடினமானது தான் ஆனால் சாத்தியமற்றது அல்ல" என்றும் கூறியுள்ளார்.
தீபிகா- ஜெனிலியா கருத்து வேறுபாடு
தீபிகா படுகோன் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ஸ்பிரிட் படத்தில் 8 மணி நேர வேலை நேரத்தை ஏற்க மறுத்ததால் வெளியேறியதாக கூறப்படுகிறது. இது நடிகர்களுக்கான வேலை- வாழ்க்கை சமநிலை குறித்த விவாதத்தைத் தூண்டியது. இந்த நிலையில், அதுகுறித்து பேசிய டநடிகை ஜெனிலியா டிசோசா 10 மணி நேரம் வேலை செய்வது சாத்தியமற்றது அல்ல என்று கூறுகிறார்.
அது சாத்தியமானதல்ல
இதுபற்றி ஜெனிலியா கூறுகையில், திரைப்படத்தின் இயக்குனர் படப்பிடிப்பை 12 மணி நேரம் வரை நீட்டித்தாலும், அது நியாயமானது என்று தான் நினைக்கிறேன். இது கடினமானது ஆனால் சாத்தியமற்றது அல்ல. நான் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்கிறேன், இயக்குனர் 11 அல்லது 12 மணி நேரம் வரை நீட்டிக்கச் சொல்லும் நாட்களும் உள்ளன. அது நியாயமானது என்று நினைக்கிறேன்.
ஆனால் அந்த மாற்றங்களைச் செய்ய எங்களுக்கு கொஞ்சம் அவகாசம் தேவை. ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நீங்கள் அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கும் போது, அது குறித்த ஒரு புரிதல் தேவை என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
தீபிகாவின் வேலை நேர கோரிக்கை
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ஸ்பிரிட் படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகினார். ய பிறகு, 8 மணி நேர வேலை நேரம், படத்தின் லாபத்தில் பங்கு மற்றும் தெலுங்கில் வசனம் பேசக்கூடாது என்பது உட்பட அவரது சில கோரிக்கைகளை அவர் நிராகரித்ததாக செய்திகள் வெளியாகின. இவரது கோரிக்கைகளுக்கு மணி ரத்னம், அஜய் தேவ்கன் மற்றும் நேஹா துபியா உள்ளிட்ட பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தனர்.
தீபிகாவின் புதிய படம்
பின்னர், ஸ்பிரிட் படத்தில் தீபிகாவுக்கு பதிலாக திரிப்தி திம்ரி தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையில் தீபிகா படுகோன் சமீபத்தில் அல்லு அர்ஜுன்- அட்லி கூட்டணியில் உருவாகும் பான் இந்தியா படத்தில் இணைந்தார். சமீபத்தில் இதற்கான அறிவிப்பினை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
ஜெனிலியாவின் வரவிருக்கும் படம்
ரசிகர்கள் ஜெனிலியாவை அடுத்து அமீர்கானின் வரவிருக்கும் விளையாட்டு நகைச்சுவை நாடகமான 'சிதாரே ஜமீன் பர்' படத்தில் பார்க்கலாம். அமீர்கான் புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தில் பத்து அறிமுக நடிகர்களை அறிமுகப்படுத்துகிறது - அரூஷ் தத்தா, கோபி கிருஷ்ணா வர்மா, சம்வித் தேசாய், வேதாந்த் சர்மா, ஆயுஷ் பன்சாலி, ஆஷிஷ் பெண்ட்சே, ரிஷி ஷாஹானி, ரிஷப் ஜெயின், நமன் மிஸ்ரா மற்றும் சிம்ரன் மங்கேஷ்கர் ஆகியோர் சிதாரே ஜமீன் பாரில் நடிக்கின்றனர். ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கியுள்ள இப்படம் ஜூன் 20 அன்று திரையரங்குகளில் மட்டுமே வெளியாகவுள்ளது.
டாபிக்ஸ்