Actress dharani:‘அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு ஒத்துக்கல; முகத்தை எரிய வைச்சிட்டாரு அந்த கேமராமேன்’ - சோகம் பகிர்ந்த தாரணி!
May 25, 2023, 06:00 AM IST
அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு ஒத்துக்கொள்ளாத காரணத்தால் தான் சந்தித்த மோசமான அனுபவத்தை நடிகை தாரணி பகிர்ந்து இருக்கிறார்.
“அட்ஜஸ்ட்மென்ட் பற்றி இப்போது நிறைய பேர் பேசுகிறார்கள். என் மனதில் இதைப் பற்றி என்ன இருக்கிறது என்பதை நான் சொல்கிறேன். இப்போது இருக்கும் பெண்களுக்கு சோசியல் மீடியா கையில் இருக்கிறது.
எது நல்லது எது கேட்டது என்பதை ஒரு 15 வயதிலேயே தரம் பிரித்து அவர்களால் பார்க்க முடிந்து விடுகிறது. ஆனால் எனக்கு இப்போது வரைக்கும் நல்லது கெட்டதை பிரித்துப் பார்க்கக் கூடிய தகுதி இல்லை என்று தான் சொல்வேன்.
அந்த காலத்தில் இருந்த 90 சதவீதம் பேர் வெகுளியாகவும் அப்பாவியாகவும் தான் இருந்தார்கள். அதனால் அட்ஜஸ்ட்மென்ட் போன்ற விஷயங்கள் எல்லாம் அப்போது மிகவும் பயம் தரும் விஷயமாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் படபடப்பான விஷயமாக கூட இருந்தது.
காரணம் இப்போது சமூகத்தில் இருக்கும் சுதந்திரம் அப்போது கிடையாது. அட்ஜஸ்ட்மென்ட் என்பது அப்போதும் இருந்தது இப்பவும் உள்ளது . ஒரு பெண்ணாக அதை சந்திக்காமல் இருக்கவே முடியாது.
அதை நாம் எப்படி சமாளிக்கிறோம் என்பது தான் இங்கு முக்கியமான விஷயம். முதல் இரண்டு மூன்று படங்களில் எனக்கு அப்படியான எந்தவித பிரச்சனைகளும் இல்லை. நான் கதாநாயகியாக ஒரு படம் நடித்தேன். அப்போது அந்தப் படத்தின் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் அட்ஜஸ்ட்மென்ட் வேண்டும் என்று கேட்டார்கள்.
இயக்குனரை கூட விட்டுவிட்டார். ஆனால் ஒளிப்பதிவாளர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கினார். தங்கை கதாபாத்திரத்திலேயே நடித்துக் கொண்டிருந்த என்னை கதாநாயகியாக மாற்றி இருக்கிறோம் என்றெல்லாம் சொல்லி என்னை கட்டாயப்படுத்தினார். அப்போது அவரிடம் நான் தயவு செய்து தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள். என்னைப் பற்றி வெளியே கேட்டுப் பாருங்கள். தொழிலுக்கு நான் இப்படித்தான் வந்தேன் என்பதை விசாரியுங்கள்.
யாராவது தவறாக சொன்னார்கள் என்றால் நீங்கள் சொல்வதை நான் கேட்கிறேன் என்று அவரிடம் தைரியமாகச் சொன்னேன். இந்த மாதிரியான பதிலை அவர் எதிர்பார்க்க இல்லை. அப்போது சரி என்று சொல்லிவிட்டு விட்டுவிட்டார். அந்த சமயத்தில் நல்ல வெயில் காலம்.. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஹெச் எம் வி லைத்தான் அதிக சூடு இருக்கும். அதை அந்த கேமரா மேன் என் முகத்தில் திடீரென்று திருப்பி விட்டார். முகமே எரிந்த மாதிரி ஆகிவிட்டது. அப்படியே அம்மா என்று உட்கார்ந்து விட்டேன். என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத சம்பவம் அது.
இருந்தாலும் பரவாயில்லை அவர் கேட்டு ஒன்று கிடைக்கவில்லை அதனால் அவர் அப்படி நடந்து கொண்டார் என்று நினைத்தேன். எதுவாக இருந்தாலும் நான் நான் கதறி கதறி அழுது விடுவேன். அங்கேயும் அப்படித்தான் அழுதுவிட்டேன்.
சக நடிகர்கள் எல்லாம் என்னை சமாதானப்படுத்தினார்கள் தெரியாமல் செய்து விட்டார்கள் என்று கூட சொன்னார்கள் ஆனால் எனக்கு அதற்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியும். எதுவும் தெரியாதது போல சரி சரி என்று சொல்லி விட்டு சென்று விட்டேன். அந்த சம்பவத்திலிருந்து நான் வெளியே வர இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டது.” என்று பேசினார்
டாபிக்ஸ்