தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  24 Years Of Sivan: ரஜினியின் எந்திரன் படத்துக்கு முன்னரே ரோபோ கான்செப்டில் வெளியான படம்

24 Years of Sivan: ரஜினியின் எந்திரன் படத்துக்கு முன்னரே ரோபோ கான்செப்டில் வெளியான படம்

Nov 26, 2023, 05:15 AM IST

google News
எந்திர மனிதன் என்ற வித்தியாசமான கான்செப்டில் வெளிவந்த படமாக இருந்த சிவன், பாக்ஸ் ஆபிஸில் பெரிய வசூலை ஈட்டாமல் கோட்டை விட்டது.
எந்திர மனிதன் என்ற வித்தியாசமான கான்செப்டில் வெளிவந்த படமாக இருந்த சிவன், பாக்ஸ் ஆபிஸில் பெரிய வசூலை ஈட்டாமல் கோட்டை விட்டது.

எந்திர மனிதன் என்ற வித்தியாசமான கான்செப்டில் வெளிவந்த படமாக இருந்த சிவன், பாக்ஸ் ஆபிஸில் பெரிய வசூலை ஈட்டாமல் கோட்டை விட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன் வருவதற்கு முன்பே தமிழ் சினிமாவில் எந்திர மனிதனை அடிப்படையாக வைத்து வெளிவந்த படம் சிவன். தமிழ் சினிமாவில் நாளைய மனிதன், அதிசய மனிதன் என வித்தியாசமான சயின்ஸ் பிக்‌ஷன் படங்களின் மூலம் கவனத்தை ஈரத்த வேலுபிரபாகரன் இந்த படத்தை இயக்கியிருப்பார்.

ஹாலிவுட் திரைப்படமான அர்னால்டு நடித்த ப்ரூடேட்டரை மையமாக வைத்து வெளிவந்த அசுரன் படத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, அதேபோன்று சயின்ஸ் பிக்‌ஷன் ஆக்‌ஷன் படமாக சிவன் படத்தை உருவாக்கினார் வேலு பிரபாகரன்.

இந்த படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் அருண் பாண்டியன், நெப்போலியன், ராதிகா, ஸ்வாதி உள்பட பலரும் நடித்திருப்பார்கள். தீவிரவாத கும்பலை பிடிக்க செல்லும் நேர்மையான போலீஸ் அதிகாரியான அருண் பாண்டியன் துரோகத்தால் கொல்லப்படுகிறார். இந்த தேடுதலை தொடரும் ராதிகா, சைபர்நெட்டிக்ஸ் என்ற தொழில்நுட்பத்துடன் அருண்பாண்டியனுக்கு உயிர் கொடுத்து அவரை சிவன் என்ற எந்திர மனிதன் ஆக்குகிறார். பின்னர் எந்திர மனிதன் உதவியுடன் தீவிரவாத கும்பலை அழிப்பது தான் படத்தின் கதை.

தமிழ் சினிமாவில் வித்தியாசமாக அமைந்த இந்த கதையை குறைவான பட்ஜெட்டில் உருவாக்கியதோடு மட்டுமில்லாமல், 1 மணி நேரம் 40 நிமிடங்கள் என நீளத்திலும் சிறிய படமாகவே எடுத்திருப்பார்கள். விறுவிறுப்பான திரைக்கதைக்கு மத்தியில் நெப்போலியனின் காதல், தங்கையுடனான காட்சிகள் படத்தின் சுவாரஸ்யத்தை குறைக்கும் விதமாக அமைந்திருக்கும்.

1987இல் ஹாலிவுட்டில் வெளியான ரோப் காப் என்ற படத்தை தழுவி உருவாகியிருக்கும் இந்த படத்தை, தமிழுக்கு ஏற்றபடி காதல், செண்டிமென்ட், பாடல் காட்சிகள் என அமைத்திருப்பார்கள். ஆதித்யன் இசையில் படத்தின் பாடல்கள் தாளம் போட வைக்கும் விதமாக அமைந்திருந்தன.

தமிழில் ரோபோ கான்செப்டில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் 2010இல் வெளியானது. இதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது கடந்த நூற்றாண்டின் இறுதியிலேயே ரோபோ கான்செப்டில் உருவான படமாக சிவன் உள்ளது. பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாக அமைந்திருக்கும் சிவன் படம் வெளியாகி இன்றுடன் 24 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி