தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பாரதியாராக ரசிகர்களை கவர்ந்த நடிகர்..நவம்பரில் தேர்தல் - அரசியலில் இணைந்த ஷாயாஜி ஷிண்டே

பாரதியாராக ரசிகர்களை கவர்ந்த நடிகர்..நவம்பரில் தேர்தல் - அரசியலில் இணைந்த ஷாயாஜி ஷிண்டே

Oct 11, 2024, 10:40 PM IST

google News
வில்லன் நடிகராகவும், ரீல் அரசியல்வாதியாகவும் பல படங்களில் தனது நடிப்பால் கவர்ந்தவர் ஷாயாஜி ஷிண்டே. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பாரதியாராக அறிமுகமான இவர் ரியல் அரசியல்வாதியாக மாறியுள்ளார். (PTI)
வில்லன் நடிகராகவும், ரீல் அரசியல்வாதியாகவும் பல படங்களில் தனது நடிப்பால் கவர்ந்தவர் ஷாயாஜி ஷிண்டே. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பாரதியாராக அறிமுகமான இவர் ரியல் அரசியல்வாதியாக மாறியுள்ளார்.

வில்லன் நடிகராகவும், ரீல் அரசியல்வாதியாகவும் பல படங்களில் தனது நடிப்பால் கவர்ந்தவர் ஷாயாஜி ஷிண்டே. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பாரதியாராக அறிமுகமான இவர் ரியல் அரசியல்வாதியாக மாறியுள்ளார்.

பாலிவுட், டோலிவுட், தமிழ் படங்களில் நடித்து வருபவர் ஷாயாஜி ஷிண்டே. மகாகவி பாரதியார் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவான பாரதி படத்தில் பாரதியாராக நடித்திருந்த இவர், அதன் பிறகு தமிழில் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்த தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். அத்துடன் அந்த கட்சியின் ஸ்டார் பேச்சாளராக மாற இருக்கிறார்.

அரசியலில் இணைந்த ஷாயாஜி ஷிண்டே

மகாராஷ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த ஷாயாஜி ஷிண்டே தற்போது அந்த மாநிலத்தில் முக்கிய கட்சியாக திகழும் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். நவம்பர் மாதம் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், அவர் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.

ஷாயாஜி ஷிண்டேவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித் பவார் வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தார்.

சுயநல நோக்கம் இல்லை

அரசியல் நுழைந்த பின்னர் 65 வயதாகும் ஷாயாஜி ஷிண்டே கூறியதாவது, "நான் பல படங்களில் அரசியல்வாதிகள் வேடத்தில் நடித்திருக்கிறேன். ஆனால் நிஜத்தில் இன்னும் அரசியல்வாதியாகவில்லை. நான் செய்யும் சமூகப் பணிகள் வெளியில் மட்டும் இருக்காமல், சிஸ்டத்துக்குள் வந்து நல்ல வேலைகளைச் செய்தால் நன்மை தரும் என்று நினைத்தேன்.

அதனால்தான் நான் அரசியலில் நுழைந்தேன். நான் அஜித் பவாரின் கொள்கைகளை விரும்பினேன். அவரது லாட்லி பெஹ்னா யோஜனா ஏழை பெண்களுக்கு தேவைப்படும் ஆதரவை வழங்கியுள்ளது. அரசியலில் நுழைவதற்கு எனக்கு சுயநல நோக்கம் எதுவும் இல்லை." என்றார்.

"ஷிண்டே ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, தற்போது அரசியல்வாதியாகவும் மாறியுள்ளார். அரசியலில் அவருக்கு எந்த சிரமமும் வராது" என்று அக்கட்சியின் தலைவர் சாகன் புஜ்பால் கூறினார்.

ஷாயாஜி ஷிண்டே பிண்ணனி

மேற்கு மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் பிறந்த ஷிண்டே, மராத்தி மேடை நாடக நடிகராக தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான ஷூல் என்ற படத்தில் அவர் வில்லனாக நடித்ததன் மூலம் பாலிவுட் சினிமாவில் அவருக்கு திருப்புமுனை கிடைத்தது.

ஷாயாஜி ஷிண்டே தாய்மொழியான மராத்தி மட்டுமல்லாமல் இந்தி தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், குஜராத்தி மற்றும் போஜ்புரி படங்கள் என 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் அறிமுகமான மராத்தி மொழி படமான அபோலி என்கிற படத்தில் ஷாயாஜி என்ற கேரக்டரில் நடித்த இவருக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.

தமிழில் 2000ஆவது ஆண்டில் வெளியான பாரதி என்ற படத்தில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாராக தோன்றி சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இந்த படத்துக்காக தமிழ்நாடு அரசின் விருது விழாவில் கெளரவிக்கப்பட்டார்.

இதன் பின்னர் தமிழில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பூவெல்லாம் உன் வாசம், சந்தோஷ் சுப்பிரமணியம், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்பட பல படங்களில் இவர் குணச்சித்திர வேடங்களிலும் கலக்கியுள்ளார்.

இந்த ஆண்டில் இவரது நடிப்பில் இந்தியன் 2 படம் வெளியாகியுள்ளது. சினிமாக்கள் தவிர வெப்சீரிஸ்களிலும் ஷாயாஜி ஷிண்டே நடித்துள்ளார்.

 

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி