தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Raghuvaran: மகன் கொடுத்த தனிமை தீ.. வெக்கையில் வாடிய ரகுவரன்.. ஆட்டிப்படைத்த குடி பழக்கம்! - சகோ பேட்டி!

Actor Raghuvaran: மகன் கொடுத்த தனிமை தீ.. வெக்கையில் வாடிய ரகுவரன்.. ஆட்டிப்படைத்த குடி பழக்கம்! - சகோ பேட்டி!

Aug 07, 2023, 01:50 PM IST

google News
ரகுவரன் இறப்பு குறித்து அவரது சகோதரர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
ரகுவரன் இறப்பு குறித்து அவரது சகோதரர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

ரகுவரன் இறப்பு குறித்து அவரது சகோதரர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

இது குறித்து கலாட்டா சேனலுக்கு பேட்டியளித்த அவர், ‘ரகுவரன் மிக மிக சென்சிட்டிவ். ஆனால் குடும்பச் சூழ்நிலைகள்தான் அவரை தனிமைப்படுத்தி விட்டது. அவருக்கு மகன் ரிஷி என்றால் உயிர். ரோகிணி ரிஷியை சனிக்கிழமை கொண்டு அவருடன் விட்டு  விட்டு ஞாயிற்றுக்கிழமை கூட்டிச் செல்வார். 

அந்த நாட்களில் ரகுவரன் ரிஷிவுடன் அவ்வளவு சந்தோசமாக இருப்பார். இருப்பினும் அதைவிட மேலான நெருக்கமானது அவருக்கு தேவைப்பட்டு இருக்கிறது. அது அவரை கொஞ்சம் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதித்து விட்டது. 

அவரது இறப்புக்கு காரணம் அதிகப்படியாக அவர் மது அருந்தியது என்ற தகவல் இருக்கிறது. ஆம் அது உண்மைதான். அவர் மிகவும் அதிகப்படியான மதுவை அருந்தினார். ஒரு கட்டத்தில் விட்டார் பின்னர் மீண்டும் அதை கைக்கொண்டார். மீண்டும் விட்டார் மீண்டும் கை கொண்டார். ஆனால் இறுதி காலத்தில் அவர் எல்லா கெட்ட பழக்க வழக்கங்களுக்கும் முழுக்குப் போட்டு கிளீனாக வாழ்ந்தார். 

ஆனால் அவர் எதற்காக குடித்தார் என்பதற்கு பர்சனல் காரணங்கள் இருக்கின்றன. நடிகர் தனுஷ் நேராக வந்து ரகுவரனிடம் எனது அப்பாவாக நீங்கள் நடிக்க வேண்டும் என்று கேட்டார். அப்போது ரகு நிச்சயமாக நடிக்கிறேன் நீ என்னுடைய மகன் போலவே இருக்கிறாய் என்று தோள் மீது கை போட்டு அந்தப் படத்தில் நடித்துக்கொடுத்தார். மருத்துவமனைக்கு நான் தான் சென்று டாக்டர்களிடம் உடல்நிலை குறித்த விவரத்தைக் கேட்பேன். 

அவரை கவனித்துக் கொள்வதற்காக எட்டு பேர் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஒரு நாள் திடீரென்று நெஞ்சு வலிக்கிறது என்று சொல்லி இருக்கிறார். அன்றைய இரவு கிட்டத்தட்ட மூன்று பேர் இருந்திருப்பார்கள். அவர்கள் முதலில் சிகிச்சை அளித்தார்கள்; நெஞ்சில் கொஞ்சம் தட்டினார்கள். அதன் பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சென்ற பின்னர் அவர் உயிர் பிரிந்து விட்டது தெரிந்தது. அது மிகவும் அதிர்ச்சியான செய்தியாக இருந்தது. ரஜினிகாந்த் உட்பட பல்வேறு திரை பிரபலங்கள் ரகுவரனின் இறுதிச் சடங்கிற்கு வந்திருந்தார்கள். குறிப்பாக ரஜினி தன்னுடைய படத்தின் படப்பிடிப்பை 15 நிமிடங்கள் நிறுத்தியதாகவும் நான் கேள்விப்பட்டேன்.” என்று பேசினார்.

நன்றி: கலாட்டா!

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி