தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pasanga Kishore: ‘வயசு பிரச்னையில் ப்ரீத்தி ஃபீல் பண்றா’ பசங்க கிஷோர் வேதனை!

Pasanga Kishore: ‘வயசு பிரச்னையில் ப்ரீத்தி ஃபீல் பண்றா’ பசங்க கிஷோர் வேதனை!

HT Tamil Desk HT Tamil

Mar 27, 2023, 06:45 AM IST

google News
‘எங்களை பொருத்தவரை, வினோத் அண்ணன் என்றால், ‘கங்கா ஸ்வீட்’ வினோத் அண்ணன் தான். ஷூட்டில் தினமும், எங்களுக்கு கங்கா ஸ்வீட் வாங்கிட்டு வந்து தருவார்,’-கிஷோர் (ksd_offl Instagram)
‘எங்களை பொருத்தவரை, வினோத் அண்ணன் என்றால், ‘கங்கா ஸ்வீட்’ வினோத் அண்ணன் தான். ஷூட்டில் தினமும், எங்களுக்கு கங்கா ஸ்வீட் வாங்கிட்டு வந்து தருவார்,’-கிஷோர்

‘எங்களை பொருத்தவரை, வினோத் அண்ணன் என்றால், ‘கங்கா ஸ்வீட்’ வினோத் அண்ணன் தான். ஷூட்டில் தினமும், எங்களுக்கு கங்கா ஸ்வீட் வாங்கிட்டு வந்து தருவார்,’-கிஷோர்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கும் அளவிற்கு சிறப்பாக நடிப்பு திறமையை வெளிப்படுத்திய பசங்க கிஷோர், இளைஞராகி, தற்போது சின்னத்திரை சீரியல் நடிகை ப்ரீத்தியை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன் இணையதளத்திற்கு அவர் அளித்த சுவாரஸ்யமான பேட்டி இதோ:

‘‘இதை நான் சொல்லியே ஆகனும், பல ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட சேனல் ஒன்று, குழந்தையாகவே காட்டிக்கொண்டிருக்கிறது. மாதம் மாதம் பசங்க படத்தை போட்டு காண்பிக்கிறார்கள். இதனால் எங்கு யார் பார்த்தாலும், ‘ஏய்… என்ன சின்ன பையனா இருந்த, இப்படி வளர்ந்துட்ட’ என்கிறார்கள். 

‘யோவ்.. 10 ஆண்டு ஆச்சுயா.. அந்த படம் வந்து..’ என்று தான் மனதிற்குள் தோன்றும். விருது வாங்கும் போது கூட அது பெரிதாக தெரியவில்லை. கல்யாணம் ஆகும் போது தான், ‘ஓ… இவன் பெரிய பையனா ஆகிட்டான்’ என்று , என்னுடைய வயதே தெரிகிறது. இதுதான் எனக்கு பெரிய சந்தோசமாக இருந்தது. 

என்னை விட, ப்ரீத்திக்கு வயது அதிகம் என்கிற கமெண்ட்ஸ் போடுகிறார்கள். என் வீட்டாருக்கு அதனால் பிரச்னை இல்லை; அதனால் எனக்கும் பிரச்னை இல்லை.  இது போன்ற கமெண்ட்ஸ்களை நான் பொருட்படுத்துவதில்லை, பார்ப்பதும் இல்லை. ஆனால், ப்ரீத்தி அதை பார்ப்பாள். அதை பற்றி என்னிடம் கவலையாகவும் கூறுவாள்.

வீட்டுக்கு பால் வாங்கப் போயிட்டு இருந்தேன், என்னுடைய சித்தப்பா போன் செய்தார், ‘தேசிய விருது வந்திருக்கு’ என்றார். எங்க வீட்டில் நான் என்னவா இருந்தாலும் சரி, பால் வாங்குவதை நான் தான் செய்ய வேண்டும். 

பசங்க படம் பண்ணதே ஒரு விபத்து. படம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. சொன்னாங்க, நடிச்சோம், ஷூட் முடிந்தது அவ்வளவு தான். இன்னொரு படத்தின் ஷூட்டில் இருந்தேன். எனக்கு அப்போ தான் நடிப்பு என்றால் என்னவென்றே தெரியும். அதெல்லாம் முடிந்து தான், தேசிய விருதின் மகிமையே தெரிந்தது. 

பசங்க முடித்தப் பின், ‘சினிமா கத்தி மேல் நடப்பது மாதிரி, அதையே நினைத்துக் கொண்டு இருக்காதே’ என என் வீட்டில் கூறிவிட்டார்கள். நல்ல ரோல் வந்தா பண்ணலாம், அதுவரை ஸ்கூலுக்கு போன்னு சொல்லிட்டாங்க. பசங்க முடித்ததும் துரோகி வந்தது, அதன் பின் கம்பன் கழகம் என்கிற படத்தில் நடித்தேன். அது ரிலீஸ் ஆகவில்லை. அதில் தான் கஷ்டப்பட்டு நடித்தேன். ஆனால் அது வரவில்லை. 

கோலிசோடா ஷூட்டிங் பசங்க டீம் அப்படியே பண்ணதாலா, முதல் இரண்டு நாள் ஜாலியா இருந்துச்சு, அதுக்கு அப்புறம் பயங்கர கஷ்டமாக இருந்தது. ரெண்டே, ரெண்டு 5டி கேமரா தான் எடுத்துட்டு போனோம். நாங்களே லைட் பிடிச்சோம், தெர்மாகோல் பிடிச்சோம். என்றாவது ஒருநாள் ரெட் கேமரா வரும். பவர் ஸ்டாருக்காக மட்டும் கேரவேன் வந்தது. 

அந்த படத்தில் எச்.வினோத் அண்ணா உதவி இயக்குனராக இருந்தார். பயங்கர அமைதியா இருப்பார். ஆனால், தகவல்களை விரல் நுனியில் வைத்திருப்பார். எனக்கு ஒரு நாள் ஜாண்டிஸ் அட்டாக் ஆகிவிட்டது. வீட்டில் இருந்தேன். வினோத் அண்ணா தான் வீட்டுக்கு வந்து , என்னை ஹாஸ்பிடலில் சேர்த்தார்.

சமீபத்தில் அவரிடம் பேசினேன், ‘டேய்… எப்படி இருக்க.. பசங்க நம்பர் எல்லாம் கொடு, ஒரு நாள் மீட் பண்ணலாம்’ என்று சொன்னார். எங்களை பொருத்தவரை, வினோத் அண்ணன் என்றால், ‘கங்கா ஸ்வீட்’ வினோத் அண்ணன் தான். ஷூட்டில் தினமும், எங்களுக்கு கங்கா ஸ்வீட் வாங்கிட்டு வந்து தருவார்,’’

என்று அந்த பேட்டியில் பசங்க கிஷோர் கூறியுள்ளார். 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி