தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Actor Karthik: யதார்த்தமான நடிப்பு..விதவிதமான கேரக்டர்களில் அசத்திய நவரச நாயகன்..நடிகர் கார்த்திக்கின் கதை!

HBD Actor Karthik: யதார்த்தமான நடிப்பு..விதவிதமான கேரக்டர்களில் அசத்திய நவரச நாயகன்..நடிகர் கார்த்திக்கின் கதை!

Karthikeyan S HT Tamil

Sep 13, 2024, 10:15 AM IST

google News
HBD Actor Karthik: 'அலைகள் ஓய்வதில்லை' படங்கள் மூலம் பயணத்தை தொடங்கிய நடிகர் கார்த்திக்கின் அலை இன்னும் ஓயவே இல்லை. படங்களில் நடிப்பது குறைந்துவிட்டாலும், இன்னும் பல ஆண்டுகளானாலும் கார்த்திக்கை எவராலும் மறக்கவே முடியாது.
HBD Actor Karthik: 'அலைகள் ஓய்வதில்லை' படங்கள் மூலம் பயணத்தை தொடங்கிய நடிகர் கார்த்திக்கின் அலை இன்னும் ஓயவே இல்லை. படங்களில் நடிப்பது குறைந்துவிட்டாலும், இன்னும் பல ஆண்டுகளானாலும் கார்த்திக்கை எவராலும் மறக்கவே முடியாது.

HBD Actor Karthik: 'அலைகள் ஓய்வதில்லை' படங்கள் மூலம் பயணத்தை தொடங்கிய நடிகர் கார்த்திக்கின் அலை இன்னும் ஓயவே இல்லை. படங்களில் நடிப்பது குறைந்துவிட்டாலும், இன்னும் பல ஆண்டுகளானாலும் கார்த்திக்கை எவராலும் மறக்கவே முடியாது.

HBD Actor Karthik: நவரச நாயகன்' என தமிழ் திரையுலகில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் கார்த்திக் இன்று (செப்டம்பர் 13) தனது 64 பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது திரை வாழ்க்கை குறித்த ஒரு சிறப்பு தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் கார்த்திக். இவரது உண்மையான பெயர் முரளி கார்த்திகேயன் முத்துராமன் ஆகும். 1980களில் 'அலைகள் ஓய்வதில்லை' திரைப்படத்தில் இளமையான தோற்றத்தோடு அறிமுகமான கார்த்திக், முதல் திரைப்படத்திலேயே தனக்கு வழங்கப்பட்ட விச்சு கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பாரதிராஜா இயக்கிய இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு கார்த்திக்குக்கு தமிழக அரசின் சிறந்த அறிமுக நடிகர் என்ற விருதையும் பெற்றுத் தந்தது.

யதார்த்தமான நடிப்பு

மிக அற்புதமாக கதாபாத்திரத்தை உள்வாங்கி, ரொம்பவே யதார்த்தமாக நடிப்பதில் கில்லாடி என்று பேரெடுத்தார் நடிகர் கார்த்திக். நடை, பேசுகிற பாவனை, முகத்தில் படபடவென விழுந்து கொண்டே இருக்கும் டியாக்‌ஷன். இவை எல்லாமே கார்த்திக்கை நவசர நாயகனாக உயர்த்தியது. 'கோபுர வாசலிலே', 'வருஷம் 16', 'பாண்டி நாட்டு தங்கம்', 'சொல்லத்துடிக்குது மனசு', 'நாடோடி பாட்டுக்காரன்' என்று கார்த்திக்கின் படங்களும் ஹிட்டு. பாடல்களும் அமர்க்களம். படமும் நூறுநாள், இருநூறு நாள் ஓடியது.

விதவிதமான கேரக்டர்களில் அசத்தல்

'அமரன்', 'இதயத்தாமரை' என்று விதவிதமான கேரக்டர்களை பண்ணி அசத்தினார். சுந்தர்.சி.யின் இயக்கத்தில் 'உள்ளத்தை அள்ளித்தா', 'மேட்டுக்குடி', 'உனக்காக எல்லாம் உனக்காக', 'கண்ணன் வருவான்', 'அழகான நாட்கள்' போன்ற படங்களில் நகைச்சுவைக்கு முக்கியத்துவமுள்ள கேரக்டர்களில் கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் கார்த்திக். கே.எஸ்.ரவிகுமாரின் ‘பிஸ்தா’விலும் காமெடி சரவெடிகளை கொளுத்திப் போட்டிருப்பார் கார்த்திக்.

டப்பிங் கலைஞர்

தமிழிலும், தெலுங்கிலும் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த கார்த்திக், ஆங்கில படங்கள் உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கு டப்பிங்கும் பேசி இருக்கிறார். 'அலைகள் ஓய்வதில்லை' தொடங்கிய கார்த்திக்கின் பயணத்தில். ஏகப்பட்ட வெற்றிப் படங்கள். நூறுநாள் படங்கள். வெள்ளிவிழாப் படங்கள். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தோடு வலம் வந்தவர் நடிகர் கார்த்திக்.

125க்கும் மேற்பட்ட திரைப்படங்கள்

'அலைகள் ஓய்வதில்லை' படங்கள் மூலம் திரைப்பயணத்தை தொடங்கிய நடிகர் கார்த்திக்கின் அலை இன்னும் ஓயவே இல்லை. தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த நடிகராக இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் கார்த்திக் கிட்டதட்ட 125 திரைப்படங்களுக்கு மேல் நடித்து நான்கு தமிழக அரசின் விருதுகள், நான்கு பிலிம்பேர் விருதுகளுடன் நவரச நாயகனாக மக்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறார்.

64 வயதில் அடியெடுத்து வைக்கும் நடிகர் கார்த்திக்

படங்களில் நடிப்பது குறைந்துவிட்டாலும், இன்னும் பல ஆண்டுகளானாலும் கார்த்திக்கை எவராலும் மறக்கவே முடியாது. 1960ஆம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி சென்னையில் பிறந்த அற்புதமான கலைஞன் கார்த்திக் இன்று தனது 64ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பாக நாமும் கார்த்திக்கை வாழ்த்துவோம்..வாழ்க பல்லாண்டு!

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி