தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  புக்கர் பரிசு பெற்ற இந்தியர்! ஒடுக்கு முறைக்கு எதிரானவர்! இடது சாரிகளுக்கு பிரியாமனவர்! அருந்ததி ராய் பிறந்தநாள்!

புக்கர் பரிசு பெற்ற இந்தியர்! ஒடுக்கு முறைக்கு எதிரானவர்! இடது சாரிகளுக்கு பிரியாமனவர்! அருந்ததி ராய் பிறந்தநாள்!

Suguna Devi P HT Tamil

Nov 24, 2024, 12:07 AM IST

google News
இந்தியாவின் திறமை மிக்கு எழுத்து துறையில் இருந்தே பல புரட்சியாளர்கள் உதித்து உள்ளனர். அந்த வரிசையில் வரும் ஒரு குறிப்பிட்ட நபர் தான், எழுத்தாளர் அருந்ததி ராய். இன்று அவரது 63 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்தியாவின் திறமை மிக்கு எழுத்து துறையில் இருந்தே பல புரட்சியாளர்கள் உதித்து உள்ளனர். அந்த வரிசையில் வரும் ஒரு குறிப்பிட்ட நபர் தான், எழுத்தாளர் அருந்ததி ராய். இன்று அவரது 63 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்தியாவின் திறமை மிக்கு எழுத்து துறையில் இருந்தே பல புரட்சியாளர்கள் உதித்து உள்ளனர். அந்த வரிசையில் வரும் ஒரு குறிப்பிட்ட நபர் தான், எழுத்தாளர் அருந்ததி ராய். இன்று அவரது 63 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்தியாவின் ஒவ்வொரு மூலைகளிலும் இன்றளவும் பல ஒடுக்குமுறைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. சில மட்டுமே பொது வெளியில் பெறும் பேசு பொருளாக மாறுகிறது. ஆனால் பல ஒடுக்குமுறைகள் மிகவும் வெளிப்படையாகவும், சர்வ சாதரணமாகவும் நிகழ்ந்து வருகிறது. இந்தியா மட்டுமல்லாது உலகின் பல இடங்களிலும் நிகழும் ஒடுக்கு முறைகளுக்கு எதிரான செயல்பாடுகளில் முதன்மையில் நிற்பது எழுத்து தான், இந்த பேனா எனும் ஆயுதமே போர்க்களத்தில் இருக்கும் வாளின் முனையை விட கூர்மையானது. இத்தகைய திறமை மிக்கு எழுத்து துறையில் இருந்தே  பல புரட்சியாளர்கள் உதித்து உள்ளனர். அந்த வரிசையில் வரும் ஒரு குறிப்பிட்ட நபர் தான், எழுத்தாளர் அருந்ததி ராய். இன்று அவரது 63 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

வீறு நடையின் தொடக்கம் 

1961 ஆம் ஆண்டு இதே நாளில் மேகலாய மாநிலம் சில்லாங்கில் பிறந்தார். இவரது தந்தை ஒரு மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர், தாய் கேரளாவைச் சேர்ந்தவர் ஆவர். இவரது பள்ளிப்படிப்பை கேரளா மற்றும் தமிழ்நாட்டில் முடித்துள்ளார். டெல்லியில் கட்டடக் கலை படித்து தேர்ந்தார். படித்த படிப்பை தாண்டி சினிமா மீது ஆர்வம் வந்தது. இயக்குனர் பிரதீப் கிருஷ்ணாவை சந்தித்து உடன் இணைந்து பணியாற்றினார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 1978 இல் திருமணம் செய்த இவர்கள் 1982 ஆம் ஆண்டு பிரிந்து விட்டனர். 

சினிமாவில் இருந்தே ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி விட்டார். இந்நிலையில் In Which Annie Gives it Those Ones படத்திற்கு திரைக்கதை எழுதி இருந்தார். கடந்த 1989 ஆம் ஆண்டு இந்தப் படத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டது. ஆனால் 2015ம் ஆண்டு மாட்டிறைச்சி உண்பதை குற்றமாக சித்தரித்து மதவெறி வன்முறை நடைபெற்றதை கண்டித்து தனக்கு வழங்கப்பட்ட தேசிய விருதை திருப்பி அளித்தார்.

போராட்டக் களத்தில் முன்னிலை

குஜராத் மாநிலத்தில் நர்மதா அணையின் உயரத்தை அதிகரிக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக, பழங்குடியினருக்கு ஆதரவாக போராடினார். இதில் மன்னிப்பு கேட்க முடியாது என தனது கருத்தில் பின் வாங்காமல் உறுதியாக நின்றார். மேலும் தனது Walking with The Comrades என்ற புத்தகத்தில் மாவோயிஸ்ட்டுகளுடன் இருந்த தனது அனுபவத்தை எழுதி இருந்தார். காஷ்மீரில் இந்தியா ராணுவத்தால் அந்த மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறை நிகழ்வுகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். 

எளிய மக்களின் உண்மையான குரலாக இருந்தார். நாட்டின் அனைத்து மூலைகளில் நடக்கும் ஒடுக்கு முறைகளை தனது எழுத்தின் வடிவில் பதிலடி கொடுத்தார். இவரது அனைத்து புத்தகங்களும் பல்வேறு உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டே அமைந்து இருந்தது. அருந்ததி ராயின் உச்சபட்ச கருத்துக்களால் பல சமயங்களில் சரச்சையில் சிக்கியவர். ஆனால் எந்த சல சலப்புக்கும் அஞ்சாதவர்.

 கடந்த பல ஆண்டுகளுக்கு முன் 'நான் மாவோயிஸ்ட்டுகளை ஆதரிக்கிறேன், ஆனால் எனக்குத் தெரியும். அவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் கொல்லப்படும் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன் என்று' கூறியவர். இவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு உபா சட்டம் பாய இருந்தது குறிப்பிடத்தக்கது. 

புக்கர் பரிசு பெற்ற முதல் இந்தியர் 

புனைவு இலக்கியத்திற்காக எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் புக்கர் பரிசை 1997ம் ஆண்டு The God of Small Things என்ற நாவலுக்காக பெற்றார். புக்கர் பரிசு பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இந்தியாவின் சிறப்பான மனிதருக்கு ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி