23 Years of Bharathi: நடிகர் கமல்ஹாசன் நடிப்பதாக இருந்த பாரதியார் வரலாற்று காவியம்
Sep 01, 2023, 04:45 AM IST
2000 ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது.
சாயாஜி ஷிண்டே, தேவயானி, நிழல்கள் ரவி நடித்த சுப்பிரமணிய பாரதியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட 2000 ஆம் ஆண்டு வெளிவந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பாரதி. இத்திரைப்படத்தை ஓய்வு பெற்ற கலெக்டர் ஞான ராஜசேகரன் இயக்கினார்.
2000 ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது.
வ. உ. சிதம்பரம்பிள்ளை, வீரபாண்டிய கட்டபொம்மன் என சுதந்திர போராட்டத் தியாகிகள் பற்றி படம் வந்திருந்தாலும், எழுத்தின் மூலம் சுதந்திர வேட்கையை ஏற்படுத்திய முண்டாசுக் கவியின் வாழ்க்கை வரலாறை எடுப்பதற்கு மட்டும் கால தாமதம் ஆகிவந்தது.
அந்தக் குறையை இயக்குநர் ஞான ராஜசேகரன் பூர்த்தி செய்து வைத்தார்.
அவர் மாவட்ட ஆட்சியராக இருந்த காலத்தில் கவிஞர் பாரதியைப் பற்றி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று ஒரு மாணவர் நிகழ்ச்சிக்கு விருந்தினராக அழைக்கப்பட்ட ஞான ராஜசேகரனிடம் தெரிவித்திருக்கிறார்.
அப்போது முதல் பாரதி மீது பற்று கொண்டு அவரைப் பற்றி தேடித்தேடி படிக்கலானார் ஞான ராஜசேகரன்.
முதலில் கமல்ஹாசனை நடிக்க வைக்க விரும்பினார். ஆனால் படத்தின் பட்ஜெட் அதற்கு அனுமதிக்கவில்லை. அதனால் மராத்தி நடிகர் சாயாஜி ஷிண்டேவை தேர்வு செய்தார். ஷிண்டேவுக்கான டப்பிங் குரல் நடிகர் ராஜீவ் என்பவரால் வழங்கப்பட்டது
பாரதியாரின் துணைவியார் செல்லம்மாள் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகை சுவலட்சுமிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் மறுக்க பின்னர் தேவயானியை ஒப்பந்தம் செய்ய படக்குழு முடிவு செய்தது. எட்டயபுரம், காசி மற்றும் பாண்டிச்சேரி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. படத்தின் பட்ஜெட் ஒன்றரை கோடி வரை சென்றது.
இந்தப் படத்தின் பாரதியார் எழுதிய கவிதைகளே பாடல்களாக ஆக்கப்பட்டது. பின்னணி இசை இளையராஜா.
தங்கர்பச்சான் ஒளிப்பதிவு செய்தார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் பிரபல எழுத்தாளர் சுஜாதா. முழுமையாக இவரது கதையை பதிவு செய்ய முடியாவிட்டாலும் முடிந்த வரை பாரதியின் வரலாற்றை இப்படத்தில் பதிவு செய்திருப்பார் இயக்குநர்.
மாபெரும் தமிழ் கவியான பாரதியாரின் கதாபாத்திரத்தில் தமிழே தெரியாத ஒருவர் நடித்திருந்ததார். பின்னர் தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக கொடிகட்டி பறந்தார் ஷாயாஜி ஷிண்டே.
பாரதியின் வாழ்க்கை வரலாற்றை ஓரளவேனும் தெரிந்து கொள்ள இப்படம் நிச்சயம் உதவும். இந்தத் திரைப்படம் வெளியாகி 23 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
2000வது ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்