தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Fact Check: அகில இந்திய மஜ்லிஸ் கட்சியை ஆதரித்து பிரதமர் மோடி பேசினாரா?-வைரலாகி வரும் வீடியோ உண்மையா?

Fact Check: அகில இந்திய மஜ்லிஸ் கட்சியை ஆதரித்து பிரதமர் மோடி பேசினாரா?-வைரலாகி வரும் வீடியோ உண்மையா?

The Quint HT Tamil

May 21, 2024, 12:08 PM IST

google News
the quint குழு முழு பேச்சையும் கேட்டது. இந்த வீடியோவில் பிரதமர் மோடி AIMIM ஐ ஆதரித்ததற்கான எந்த ஆதாரத்தையும் அந்தக் குழு கண்டறியவில்லை. எனவே அந்த வீடியோ போலியானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
the quint குழு முழு பேச்சையும் கேட்டது. இந்த வீடியோவில் பிரதமர் மோடி AIMIM ஐ ஆதரித்ததற்கான எந்த ஆதாரத்தையும் அந்தக் குழு கண்டறியவில்லை. எனவே அந்த வீடியோ போலியானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

the quint குழு முழு பேச்சையும் கேட்டது. இந்த வீடியோவில் பிரதமர் மோடி AIMIM ஐ ஆதரித்ததற்கான எந்த ஆதாரத்தையும் அந்தக் குழு கண்டறியவில்லை. எனவே அந்த வீடியோ போலியானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் அகில இந்திய மஜ்லிஸ் (ஏஐஎம்ஐஎம்) கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடியின் உரையின் வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை என்ன என்பதை the quint கண்டறிந்துள்ளது.

வீடியோ பற்றி: வைரலாகி வரும் வீடியோவில், பிரதமர் மோடி, "தெலுங்கானா மக்கள் காங்கிரஸை வேண்டாம், பிஆர்எஸ் வேண்டாம், பாஜக வேண்டாம் என்று கூறுகிறார்கள், நாங்கள் எம்ஐஎம்-க்கு மட்டுமே வாக்களிப்போம், எம்ஐஎம் வெற்றிபெறச் செய்வோம்" என்று பிரதமர் மோடி கூறுவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இது உண்மையா?: இந்த வீடியோவில் உண்மை இல்லை, 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி AIMIM-க்கு ஆதரவளித்ததாகக் கூறும் வகையில் வீடியோ திருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், உண்மையான வீடியோவில் தெலங்கானா மக்கள் பா.ஜ.க.வை வெற்றி பெறச் செய்வார்கள் என்று பிரதமர் மோடி கூறுவது தெளிவாக இருக்கிறது.

உண்மையை எப்படி கண்டறியப்பட்டது:

பிரதமர் மோடி ஹைதராபாத்தில் பேசியதை யூடியூப்பில் "பிஎம் மோடி ஹைதராபாத்" போன்ற முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடினோம், அது அவரது உரையின் முழு வீடியோவையும் எங்களுக்கு வழங்கியது.

மே 10 அன்று அவரது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் "பிரதமர் மோடி தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்" என்ற தலைப்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் தனது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மாநில மக்களிடம் உரை நிகழ்த்துவதையும், NDA கூட்டணிக்கு ஆதரவு கோருவதையும் காணலாம்.

அகில இந்திய மஜ்லிஸ் கட்சிக்கு ஆதரவாக பிரதமர் மோடி பேசியதாக பேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்ட வீடியோவின் ஸ்கிரீன் ஷாட்

யூ-டியூப் வீடியோவில் சுமார் 3:13 நிமிடங்களில், பிரதமர் மோடி, “இந்தக் காட்சி, இந்தச் சூழல் தெலங்கானாவின் மனநிலையை தெளிவாகப் பிரதிபலிக்கிறது. தெலங்கானா மக்கள் காங்கிரஸுக்கு வேண்டாம், பி.ஆர்.எஸ்., அல்ல. எம்.ஐ.எம்-க்கும் அல்ல என்று சொல்கிறார்கள். இல்லை, நாங்கள் பாஜகவுக்கு மட்டுமே வாக்களிப்போம் என்று சொல்கிறார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

the quint குழு முழு பேச்சையும் கேட்டது. இந்த வீடியோவில் பிரதமர் மோடி AIMIM ஐ ஆதரித்ததற்கான எந்த ஆதாரத்தையும் அந்தக் குழு கண்டறியவில்லை.

முடிவு:

பார்வையாளர்களை தவறாக வழிநடத்தும் வகையில் வீடியோ எடிட் செய்யப்பட்டு பகிரப்படுகிறது என்பது தெளிவாகிறது.

எனவே, பிரதமர் மோடி அகில இந்திய மஜ்லிஸ் கட்சியை ஆதரித்து பேசவில்லை என்பதே உண்மை.

பொறுப்புத் துறப்பு

இந்தச் செய்தி முதலில் the quint-இல் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

இதனிடையே, அகில இந்திய மஜ்லிஸ் (ஏ.ஐ.எம்.ஐ.எம்) தலைவர் அசாதுதீன் ஒவைசியின் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம் ஆன்லைனில் பகிரப்பட்டுள்ளது, அதில் அவர் இந்து கடவுளான ராமரின் ஓவியத்தை வைத்திருப்பது போன்ற தவறான கூற்று உள்ளது.

ஒரிஜினல் புகைப்படத்தில் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் உருவப்படத்தை ஓவைசி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலின் நான்காவது கட்டத்தில் மே 13, 2024 அன்று வாக்களித்த ஹைதராபாத் தொகுதியில் அசாதுதீன் ஒவைசி போட்டியிட்டார்.

பூம் செய்தித்தளம் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடியதில், அசாதுதீன் ஒவைசி தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்திலிருந்து அசல் படத்தை ஏப்ரல் 7, 2018 அன்று வெளியிட்டது தெரியவந்தது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி