தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Bjp- Pmk Alliance: 'வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக - பாமக கூட்டணி உறுதி': பாமக மாநில பொதுச்செயலர் வடிவேல் ராவணன்

BJP- PMK alliance: 'வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக - பாமக கூட்டணி உறுதி': பாமக மாநில பொதுச்செயலர் வடிவேல் ராவணன்

Marimuthu M HT Tamil

Mar 18, 2024, 08:16 PM IST

google News
BJP- PMK alliance: வரும் நாடாளுமன்றத்தில் பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.
BJP- PMK alliance: வரும் நாடாளுமன்றத்தில் பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.

BJP- PMK alliance: வரும் நாடாளுமன்றத்தில் பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.

BJP- PMK alliance: 18ஆவது மக்களவைத் தேர்தலை, தமிழ்நாட்டில் பாஜக உடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சி சந்திக்கிறது.பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டணி குறித்துப் பேசி முடிவு எடுக்க பாமக நிர்வாகிகள் கூட்டமானது, இன்று திண்டிவனம், தைலாபுரத்தில் உள்ள மருத்துவர் ராமதாஸ் அவர்களின் பண்ணை இல்லத்தில் நடைபெற்றது.

அக்கூட்டம் முடிவுபெற்றபின், இதுதொடர்பாக பாமக மாநிலப் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, ‘’பாட்டாளி மக்கள் கட்சி வெற்றிபெற, சிறந்த செயல்பாட்டுக்கான தேர்தல் கூட்டணியுடன் பாமக தேர்தலைச் சந்திக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் கூட்டணியை அறிவிக்கிற பொறுப்பை எங்கள் நிறுவனத் தலைவர் மருத்துவர் ஐயா அவர்களிடம் ஒப்படைத்து இருந்தோம். அதன்படி, அவரது அறிவிப்புக்கு இணங்க, பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைப்பது என முடிவு எடுத்துள்ளது. எத்தனை சீட்டுகள் என்பதை, நாளை உறுதிப்படுத்திவிட்டு தொகுதிகள் குறித்து தெரிவிக்கிறோம்’’ என்றார்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டபின், பாமக வழக்கறிஞர் பாலு கூறுகையில், ''தேர்தல் குறித்து உயர்மட்டக் குழு கூட்டமும், மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் நடைபெற்றது. மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்களுக்கு, தேர்தல் குறித்து பொதுக்குழு வழங்கிய அதிகாரத்தின்படி, தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து மருத்துவர் ஐயா அவர்கள் முறையான அறிவிப்பினை வெளியிடுவார்.

தேச நலன் கருதியும், நாட்டு நலன் கருதியும், தமிழக மக்களின் நலன் கருதியும், பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்களின் நலன் கருதியும் நல்ல முடிவு எடுக்கப்படும். தேர்தல் கூட்டணி குறித்த முடிவை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பார். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்கள் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து முறைப்படி அறிவிப்பார்’’ என்று தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் தலைவர் ஜி.கே. மணி எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது, ‘’ பருவ காலத்தில் மாமரங்கள் பூ பூத்து குலுங்கும் மகிழ்ச்சியான அற்புதக் காட்சி. மாங்காய் காய்த்து "மாம்பழம்" சுவைக்க அறுவடை காலம் மிக விரைவில்’’ எனப் பதிவிட்டுள்ளார். 

தேர்தலுக்கு முந்தையப்  பேச்சுகள்: முன்னதாக, அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றால் 7 நாடாளுமன்றத் தொகுதிகள் வரை மட்டுமே பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. பாஜக கூட்டணியில், பாமக இணைந்தால் 7 முதல் 10 தொகுதிகளை பாமக கேட்டிருக்கும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் அன்புமணி ராமதாஸ் டெல்லி செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக கூட்டணியில், பாமக இடம்பெற விரும்புவதாக ராமதாஸ் விரும்புவதாக கூறப்பட்டது. அதிமுக கூட்டணியில் இணைவது தொடர்பாக பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஏற்கெனவே இரண்டு முறை நேரடியாக, தைலாபுரம் பண்ணைவீட்டுக்குச் சென்று, சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.

இந்த நிலையில், தேசிய அளவில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படும் நிலையில், மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் எனும் திட்டத்துடன் பாஜக உடன் கூட்டணி அமைக்க அன்புமணி ராமதாஸ் விரும்புவதாக கூறப்பட்டது. இந்நிலையில், பாஜக உடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி வைப்பது உறுதியாகியுள்ளதாக, பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தெரிவித்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி