தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  List Of Bjp Candidates: கோவையில் நிற்கும் அண்ணாமலை, தென்சென்னையில் தமிழிசை: வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்

List Of Bjp Candidates: கோவையில் நிற்கும் அண்ணாமலை, தென்சென்னையில் தமிழிசை: வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்

Marimuthu M HT Tamil

Mar 21, 2024, 08:31 PM IST

google News
List Of Bjp Candidates:தமிழ்நாட்டில் பாஜக மற்றும் அதன் கூட்டணிவேட்பாளர்கள் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அதன் தலைமை வெளியிட்டுள்ளது. ( Dr.L.Murugan X)
List Of Bjp Candidates:தமிழ்நாட்டில் பாஜக மற்றும் அதன் கூட்டணிவேட்பாளர்கள் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அதன் தலைமை வெளியிட்டுள்ளது.

List Of Bjp Candidates:தமிழ்நாட்டில் பாஜக மற்றும் அதன் கூட்டணிவேட்பாளர்கள் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அதன் தலைமை வெளியிட்டுள்ளது.

List Of Bjp Candidates: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கோவை நாடாளுமன்றத்தொகுதியிலும், தமிழிசை செளந்தரராஜன் தென்சென்னை தொகுதியிலும் போட்டியிடுகிறார். பாஜகவின் 9 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை, அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, பாஜகவின் தேர்தல் மையக்குழு, மக்களவைத் தொகுதியில் தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சியினரின் மூன்றாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

பாஜக தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் நேரடியாக, களம் இறங்கும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். அதனை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் அருண் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.

அதில் தமிழிசை செளந்தர்ராஜன், தென்சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். வினோஜ் பி.செல்வம் பாஜக சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். புதிய நீதிக் கட்சித் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் நரசிம்மன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். மேலும், எல். முருகன், பாஜக சார்பில் நீலகிரி தனித்தொகுதியில் போட்டியிடுகிறார். 

கோவை நாடாளுமன்றத்தொகுதியில் பாஜக சார்பாக அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பெரம்பலூரில் டி.ஆர். பாரிவேந்தர் போட்டியிடுகிறார். அதேபோல், திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் நயினார் நாகேந்திரன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

குறிப்பாக, ஏ.சி. சண்முகமும் பாரிவேந்தரும் பாஜக சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கிய மத்திய சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளரை ஒதுக்கியது. 

பாட்டாளி மக்கள் கட்சிக்கு மத்திய சென்னை தொகுதி ஒதுக்கப்படுவதாக ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், தற்போது அந்தத் தொகுதியில் வினோஜ் பி செல்வம் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக பாஜக அறிவித்துள்ளது.

கோவை மக்களவைத் தொகுதிக்கு வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கோவை மக்களவைத் தொகுதியின் திமுக பொறுப்பாளர் டி.ஆர்.பி. ராஜா, ‘’ தேர்தல் முடிந்ததும் பிரியாணி போடுகிறோம் என சொல்லியிருந்தோம். இப்போதுதான் செய்தி பார்த்தேன். கோவைக்கு சுவையான ஆட்டு பிரியாணி காத்திருக்கிறது’’ என்றார்.

கோவை மக்களவைத் தொகுதியைச் சார்ந்த அதிமுக முக்கியப் பிரமுகர், சிங்கை ஜி.ராமச்சந்திரன் , அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் டேக் செய்து, நான் உங்களுக்காக காத்திருக்கிறேன் எனும் பொருள்படும், ‘ஐ அம் வெயிட்டிங்’ எனப் பதிவிட்டுள்ளார்.

பாஜக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி 10 தொகுதிகளிலும், தமிழ் மாநில காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இரண்டு தொகுதிகளிலும் பாஜக கூட்டணியில் தொகுதிகளைப் பெற்று போட்டியிடுகின்றன. மேலும், புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் ஆகிய நான்கு கட்சிகள் தலா ஒரு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகின்றன.             இதற்கிடையே பாஜகவுடன் இணக்கமாக செயல்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், இத்தேர்தலில் தனித்து விடப்பட்டார். என்னதான், பிரதமர் மோடியுடனான கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் பேச அழைக்கப்பட்டாலும், தொகுதிப்பங்கீட்டில் ஒரு சீட் கூட, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக ஆதரவாளர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதே இதன்மூலம் புலனாகிறது.

அடுத்த செய்தி