தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Lok Sabha Election 2024 Results : கோவை, தூத்துக்குடி, தேனி, வேலூர் தொகுதியின் 9 மணி நிலவரம் இதோ!

Lok Sabha Election 2024 Results : கோவை, தூத்துக்குடி, தேனி, வேலூர் தொகுதியின் 9 மணி நிலவரம் இதோ!

Jun 04, 2024, 10:19 AM IST

google News
Lok Sabha Election 2024 Results: கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை 3 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இரண்டாவது சுற்று முடிவில் 164 வாக்குகள் மட்டும பெற்றுடுள்ளார்.
Lok Sabha Election 2024 Results: கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை 3 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இரண்டாவது சுற்று முடிவில் 164 வாக்குகள் மட்டும பெற்றுடுள்ளார்.

Lok Sabha Election 2024 Results: கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை 3 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இரண்டாவது சுற்று முடிவில் 164 வாக்குகள் மட்டும பெற்றுடுள்ளார்.

கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை 3 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இரண்டாவது சுற்று முடிவில் 164 வாக்குகள்  மட்டும பெற்றுடுள்ளார். 

கோவையில் தபால் வாக்கு திமுக முன்னிலை..

திமுக 78

அதிமுக 12

பாஜக 26.

கோவை நாடாளுமன்ற தொகுதி முதல் சுற்று நிலவரம்

திமுக -5127

அதிமுக -1541

பாஜக - 1852

கோவை தெற்கு இரண்டாம் சுற்று

திமுக 4546

அதிமுக 1600

பாஜக 164

தூத்துக்குடி மக்களவை தொகுதி

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை

திமுக : 2313

நாதக : 818

அதிமுக : 479

தமாக: 420

தேனி மக்களவைத் தொகுதி

முதல் சுற்று முடிவு

திமுக-21652

அதிமுக-11997

அமமுக-12443

நாதக- 3248

வேலூர் நிலவரம் 

திமுக கூட்டணி ( திமுக) :- 25,067

அதிமுக / கூட்டணி அதிமுக :- 4,576

பாஜக கூட்டணி ( புதிய நீதி கட்சி):- 14,872

10,195 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை.

இதேபோல் தருமபுரியில் பாமக  முன்னிலையில் உள்ளது.

விருதுநகரில் விஜயபிரபாகரன் முன்னிலையில் உள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் இந்திய தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படுகிறது. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகி உள்ள வாக்குகளின் எண்ணிக்கை தொடங்க உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 4 கோடியே 20 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்துள்ள நிலையில் தேர்தல் முடிவுகளை மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்.

எதிர்பார்ப்பில் மக்கள்

அடுத்த 5 ஆண்டுகள் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை ஆட்சி செய்யப்போவது யார் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

உலகமே உற்று நோக்கும் இந்தியாவில் ஏற்கனவே 2 முறை ஆட்சியில் இருந்த பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமா.. பிரதமர் மோடி 3 ஆவது முறையாக ஆட்சி அமைப்பாரா.. அல்லது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இணைந்துள்ள இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமா என்ற கேள்வி மக்களிடையே உள்ளது.

இந்தியாவின் 18 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தொடங்கி கடந்த ஜூன் 1ஆம் தேதி வரை மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக நடைபெற்றது.

கடும் போட்டி

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதனிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணிக்கே அதிக வாய்ப்புகள் உள்ளது என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணியிலும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டது. மொத்தம் 950 வேட்பாளர்கள் களம் கண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவிற்கு வாய்ப்பு உள்ளதா?

இந்த தேர்தலில் பாஜகவின் மாநில தலைவரான அண்ணாமலை கோவையில் களம் காண்கிறார். அதேபோல் அக்கட்சியை சேர்ந்த தமிழிசை சவுந்தர் ராஜன் தெலுங்கானாவில் ஆளுநராக இருந்த நிலையில் தனது பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு மத்திய சென்னையில் போட்டியிட்டார்.

இதனிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் திமுக தலைமையிலான கூட்டணிக்கே அதிக வாய்ப்புகள் உள்ளது என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

அடுத்த செய்தி