World cup 2023: 49வது சதம்..! ஈடன் கார்டனில் பர்த்டே ட்ரீட் கொடுத்த கோலி - தென் ஆப்பரிக்காவுக்கு 327 ரன்கள் இலக்கு
Nov 05, 2023, 06:06 PM IST
பிறந்நாளில் சதமடித்த வீரர்களில் நியூசிலாந்தின் ரோஸ் டெய்லர், ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ் ஆகியோருக்கு அடுத்தபடியாக அந்த லிஸ்டில் விராட் கோலியும் இணைந்துள்ளார். பொறுப்புடன் பேட் செய்த ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் உள்ளார்.
உலகக் கோப்பை 2023 தொடரின் 37வது போட்டி இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 326 அடித்துள்ளது. விராட் கோலி தனது பிறந்தநாளான இன்று ஒரு நாள் போட்டியில் தனது 49வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்களில் சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார். 101 ரன்கள் எடுத்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் உள்ளார்.
கோலியுடன் இணைந்து சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் குவிப்பில் ஈடுபட்ட ஷ்ரேயாஸ் ஐயர் 77 ரன்கள் எடுத்தார். ஓபனிங் பேட்ஸ்மமேனாக களமிறங்கி அதிரடியான தொடக்கத்தை தந்த கேப்டன் ரேஹித் ஷர்மா 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். கடைசியாக பேட் செய்ய வந்து அதிரடி காட்டிய ரவீந்திர ஜடேஜா 15 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் சூர்யகுமார் யாதவ் சிறிய கேமியோ இன்னிங்ஸை வெளிப்படுத்தி 14 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.
தென் ஆப்பரிக்கா பவுலர்களில் இங்கிடி, ஜான்சன், கேசவ் மகாராஜ், ஷம்ஸி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
தென் ஆப்பரிக்கா அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடிக்க 327 ரன்களை சேஸ் செய்ய வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்