World Cup 2023: ரோஹித் அதிரடி தொடக்கம்! பர்த்டே ஸ்பெஷலாக கோலி அரைசதம் - ரன்குவிப்பில் இந்தியா
Nov 05, 2023, 04:40 PM IST
பர்த்டே ஸ்பெஷலாக விராட் கோலி ரசிகர்களின் ஆராவாரத்துக்கு மத்தியில் அரைசதமடித்து விளையாடி வருகிறார். அவருடன் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்து சிறப்பாக பேட் செய்து 50 ரன்கள் மேல் அடித்து விளையாடி வருகிறார்.
உலகக் கோப்பை 2023 தொடரின் 37வது போட்டி இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து இந்தியா தொடர்ச்சியாக நான்காவது போட்டியில் எந்த மாற்றமும் செய்யாமல் அதே வெற்றி கூட்டணியுடன் களமிறங்குகிறது. தென் ஆப்பரிக்கா அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸிக்கு பதிலா இடது கை ஸ்பின் பவுலரான தப்ரிஷ் ஷம்ஸி சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து முதலில் பேட் செய்த ரோஹித் ஷர்மா - கில் ஆகியோர் தொடக்கத்திலிருந்து அதிரடியாக ரன் குவிப்பில்
ஈடுபட்டனர். பவுண்டரி, சிக்ஸர் என தென் ஆப்பரிக்கா பவுலர்களை வெளுத்து வாங்கிய ரோஹித் ஷர்மா 24 பந்துகளில் 40 ரன்கள் அடித்து ராபாடா பந்தில் அவுட்டானார்.
ரோஹித்தின் அதிரடியால் இந்தியா 4.2 ஓவரில் 50 ரன்களை கடந்தது. அவர் அவுட்டான பிறகு வந்த கோலியும் தன் பங்குக்கு அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். பிரதான பவர் ப்ளே முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்தனர்.
பவர்ப்ளேவுக்கு பின்னர் இந்திய பேட்ஸ்மேன்களின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தும் விதமாக ஸ்பின்னரான கேசவ் மகராஜை பவுலிங் செய்ய வைத்தார் தென் ஆப்பரிக்கா கேப்டன் பவுமா. அதற்கு கை மேல் பலனாக அவர் வீசிய இரண்டாவது பந்திலேயே சிறப்பாக பேட் செய்து வந்த கில் 23 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
இதன் பின்னர் வந்த ஷ்ரேயாஸ், களத்தில் இருந்த கோலி ஆகியோர் விக்கெட் சரிவை தடுக்கும் விதமாக நிதான ஆட்டத்தை கடைப்பிடித்தனர். முதல் 10 ஓவரில் 91 ரன்கள் எடுத்த இந்தியா, அடுத்த 10 ஓவரில் 33 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஸ்பின்னர்களான கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்சி ஆகியோரின் துல்லிய பந்து வீச்சை பொறுமையாக எதிர்கொண்டு மெல்ல ரன் குவிப்பில் ஈடுப்படனர்.
ஆட்டத்தின் 28.1 ஓவரில் கோலி அரைசதத்தை பூர்த்தி செய்தார். அவர் 67 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். தனது பிறந்தநாளில் முதல் முறையாக ஒரு நாள் போட்டியில் களமிறங்கிய கோலி 50 ரன்கள் அடித்தது ஸ்பெஷலாக அமைந்தது.
தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயரும் ஆட்ட்த்தின் 30.2 ஓவரில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். இந்தியா 32 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 55, ஷ்ரேயாஸ் 60 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்