தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  World Cup 2023: வான் டெர் டுசென் பொறுப்பான பேட்டிங் - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி சேஸிங்கில் தென் ஆப்பரிக்கா முதல் வெற்றி

World Cup 2023: வான் டெர் டுசென் பொறுப்பான பேட்டிங் - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி சேஸிங்கில் தென் ஆப்பரிக்கா முதல் வெற்றி

Nov 10, 2023, 10:16 PM IST

google News
சேஸிங்கில் சொதப்பி வந்த தென் ஆப்பரிக்கா அணி இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தி வெற்றி பெற்றிருப்பதுடன், அரையிறுதிக்கு முன்னர் அதை சரி செய்துள்ளது. (AFP)
சேஸிங்கில் சொதப்பி வந்த தென் ஆப்பரிக்கா அணி இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தி வெற்றி பெற்றிருப்பதுடன், அரையிறுதிக்கு முன்னர் அதை சரி செய்துள்ளது.

சேஸிங்கில் சொதப்பி வந்த தென் ஆப்பரிக்கா அணி இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தி வெற்றி பெற்றிருப்பதுடன், அரையிறுதிக்கு முன்னர் அதை சரி செய்துள்ளது.

உலகக் கோப்பை தொடரின் 42வது போட்டி தென் ஆப்பரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 244 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டாகியது. ஆப்கானிஸ்தான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அஸ்மதுல்லா உமர்சாய் 97 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இவருக்கு அடுத்தபடியாக ரஹ்மத் ஷா 26, நீர் அகமது 25,ரஹ்மனுல்லா குர்பாஸ் 25 ரன்கள் எடுத்தனர்.

தென் ஆப்பரிக்கா பவுலர்களில் ஜெரால்ட் கோட்ஸி சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கேசவ் மகராஜ், லுங்கி இங்கிடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அரையிறுதிக்கு முன்னர் பயிற்சியாக அமைந்திருக்கும் இந்த போட்டியை வெற்றி பெற 245 ரன்களை சேஸ் செய்ய வேண்டும் என்ற நிலையில் தென் ஆப்பரிக்கா களமிறங்கியது.

இதைத்தொடர்ந்து 47.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்து 15 பந்துகள் மீதமிருக்க தென் ஆப்பரிக்கா வெற்றி பெற்றுள்ளது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ராஸ்ஸி வான் டெர் டுசென் அரைசதமடித்து 76 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவருக்கு அடுத்தபடியாக குவன்டைன் டி காக் 41 எடுத்தார். இன்றைய போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்ற ஆண்டிலே பெஹ்லுக்வாயோ 39 ரன்கள் அவுட்டாகாமல் இருந்தார்.

ஆப்கானிஸ்தான் பவுலர்களில் ரஷித் கான், முகமது நபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். ஆட்டநாயகனாக தென் ஆப்பரிக்காவின் வான் டெர் டுசென் தேர்வு செய்யப்பட்டார்.

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி