தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  World Cup 2023: கூடுதல் ஸ்பின் பாதுகாப்புடன் களமிறங்கும் தென் ஆப்பரிக்கா - டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்

World Cup 2023: கூடுதல் ஸ்பின் பாதுகாப்புடன் களமிறங்கும் தென் ஆப்பரிக்கா - டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்

Nov 05, 2023, 01:57 PM IST

google News
World Cup 2023, IND vs SA Toss: தொடர்ச்சியாக நான்காவது போட்டியில் இந்தியா அணி அதே வெற்றி காம்பினேஷனுடன் இன்றும் களமிறங்குகிறது. அத்துடன் சேஸிங்கை விரும்பும் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

உலகக் கோப்பை 2023 தொடரின் 37வது போட்டி இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து இந்தியா தொடர்ச்சியாக நான்காவது போட்டியில் எந்த மாற்றமும் செய்யாமல் அதே வெற்றி கூட்டணியுடன் களமிறங்குகிறது. தென் ஆப்பரிக்கா அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸிக்கு பதிலா இடது கை ஸ்பின் பவுலரான தப்ரிஷ் ஷம்ஸி சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா, தென் ஆப்பரிக்கா என இரண்டு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கும் நிலையில், இன்றைய போட்டியில் முடிவும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இந்த சூழ்நிலையில் யார் பலசாலி என்பதை வெளிப்படுத்தும் விதமாகவும், நாக்அவுட் போட்டிக்கு முன்னர் ஒத்திகையாகவும் இன்றைய ஆட்டம் அமைந்துள்ளது. 

இந்த போட்டியின் ஆடுகளத்தை பொறுத்தவரை ஒரு பக்கம் பேட்டிங்குக்கு சாதகமாகவும், மறுபக்கம் ஸ்பின்னர்களுக்கு உதவும் என கணிக்கப்பட்டுள்ளது. பவுண்டரி அளவை பொறுத்தவரை இரண்டு சைடுகளிலும் முறையே 62, 68 மீட்டர் என உள்ளன. ஸ்டெரியிட் பவுண்டரி தூரம் 63 மீட்டராக உள்ளது.

பிட்சில் ஈரப்பதம் இருப்பதாக கூறப்படும் நிலையில் தென் ஆப்பரிக்கா கூடுதல் ஸ்பின்னருடன் களமிறங்கியுள்ளது. 

இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் விவரம்

இந்தியா: ரேஹித் ஷர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ்

தென் ஆப்பரிக்கா: குவன்டைன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, தப்ரைஸ் ஷம்சி

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி