PAK vs ENG Preview: அரையிறுதிக்குள் நுழைய மேஜிக் நிகழ்த்துமா பாகிஸ்தான்? இங்கிலாந்துடன் இன்று மோதல்
Nov 11, 2023, 01:37 PM IST
சாத்தியமே இல்லாத விஷயத்தை செய்தால் மட்டுமே அரையிறுதிக்குள் நுழையலாம் என்ற நெருக்கடியுடன் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். இந்த போட்டியை வெற்றியுடன் முடிக்க வேண்டும் என இரு அணிகளும் போராடும் என நம்பலாம்.
உலகக் கோப்பை தொடரின் 44வது போட்டி பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. பகலிரவு ஆட்டமாக இந்த போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.
புள்ளிப்பட்டியில் 5வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அரையிறுதி நுழைவதற்கான வாய்ப்பாக இந்த போட்டி இருந்ததது. ஆனால் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அதிக ரன் ரேட்டில் வென்றதால், பாகிஸ்தானுக்கு இருந்த இந்த வாய்ப்பு நினைத்து கூட பார்க்கமுடியாத அளவில் தலைகீழாக மாறியுள்ளது.
அதன்படி இங்கிலாந்துக்கு எதிராக இன்றைய போட்டியில் முதல் பேட்டிங் செய்தால் மட்டுமே பாகிஸ்தான் அரையிறுதி பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியும். மாறாக இங்கிலாந்து பேட்டிங் செய்தால் அவர்கள் நிர்ணயிக்கும் இலக்கை பொறுத்து 3 முதல் 6 ஓவர்களில் சேஸ் செய்ய வேண்டும்.
ஒரு வேலை பாகிஸ்தான் முதலில் பேட் செய்து 300 ரன்கள் அடித்தால் 13 ரன்களில் இங்கிலாந்தை ஆல்அவுட் செய்ய வேண்டும். 400 ரன்கள் அடித்தால் 112, 500 ரன்கள் என்றால் 212 ரன்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கலையில் பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பு 90 சதவீதம் இல்லை என்பது தெரிகிறது.
ஆனால் கிரிக்கெட் விளையாட்டில் எதுவும் நடக்கும் என்பதால், அதிர்ஷ்டம் பாகிஸ்தான் பக்கம் அடித்தால் மேற்கூறிய கணிதம் ஒர்க் அவுட் ஆகலாம். இருப்பினும் இன்றைய போட்டியின் டாஸ் நிகழ்விலேயே முடிவு உறுதியாகிவிடும்.
இந்த கணக்குகள் ஒரு புறம் இருக்க இரண்டு அணிகளும் வெற்றியுடன் உலகக் கோப்பை 2023 தொடரை நிறைவு செய்வதற்கான முயற்சியை மேற்கொள்ளும் என்பதால் சுவாரஸ்யம் மிக்க போட்டியாகவே இருக்கும் என தெரிகிறது.
இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஷ் பட்லர் இதுவரை விளையாடிய 8 இன்னிங்ஸில் 111 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். மிகவும் மோசமான தொடராக இந்த உலகக் கோப்பை தொடர் அவருக்கு அமைந்திருக்கும் நிலையில், கடைசி போட்டியான இன்று அவர் தனது பாணியிலான அதிரடி ஆட்டத்தை தொடர்வார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பிட்ச் நிலவரம்
ஸ்பின், வேகப்பந்து வீச்சு என இரண்டுக்கும் சாதகமாக அமைந்திருக்கும் ஈடன் கார்டன் மைதானம், பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கும் விதமாகவே அமைந்துள்ளது. ஆடுகளத்தில் புற்கள் இருந்தாலும் வறண்டு காணப்படுவதால் ஸ்பின்னர்கள் ஜொலிக்க வாய்ப்பு உள்ளது. மழைக்கான வாய்ப்பு இல்லை எனவும், வானிலை வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் உலகக் கோப்பை தொடரில் 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 5, இங்கிலாந்து 4 முறை வெற்றி பெற்றுள்ளன. ஒரு முறை முடிவு கிடைக்கவில்லை. கடந்த 2019 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. எனவே அதற்கு வட்டியும், முதலும் சேர்ந்த தர இங்கிலாந்து முயற்சிக்கும் என நம்பலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்