தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  World Cup 2023: சதத்தை நூலிழையில் மிஸ் செய்த உமர்சாய்! தென் ஆப்பரிக்காவுக்கு 245 ரன்கள் இலக்கு

World Cup 2023: சதத்தை நூலிழையில் மிஸ் செய்த உமர்சாய்! தென் ஆப்பரிக்காவுக்கு 245 ரன்கள் இலக்கு

Nov 10, 2023, 07:27 PM IST

google News
தென் ஆப்பரிக்கா பவுலர்களின் தரமான பந்துவீச்சை எதிர்கொண்டு சிறப்பாக பேட் செய்த ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் அஸ்மதுல்லா உமர்சாய் 97 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் உள்ளார். (REUTERS)
தென் ஆப்பரிக்கா பவுலர்களின் தரமான பந்துவீச்சை எதிர்கொண்டு சிறப்பாக பேட் செய்த ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் அஸ்மதுல்லா உமர்சாய் 97 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் உள்ளார்.

தென் ஆப்பரிக்கா பவுலர்களின் தரமான பந்துவீச்சை எதிர்கொண்டு சிறப்பாக பேட் செய்த ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் அஸ்மதுல்லா உமர்சாய் 97 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் உள்ளார்.

உலகக் கோப்பை தொடரின் 42வது போட்டி தென் ஆப்பரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணி கடந்த போட்டியில் களமிறங்கிய அதே அணியுடன் இன்றைய போட்டியிலும் விளையாடுகிறது. தென் ஆப்பரிக்கா அணியில் மார்கோ ஜான்சன், ஷம்ஸி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் அண்டில் பெஹ்லுக்வாயோ, ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 244 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டாகியுள்ளது.

அந்த அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அஸ்மதுல்லா உமர்சாய் 97 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ரஹ்மத் ஷா 26, நீர் அகமது 25,ரஹ்மனுல்லா குர்பாஸ் 25 ரன்கள் எடுத்தனர்.

தென் ஆப்பரிக்கா பவுலர்களில் ஜெரால்ட் கோட்ஸி சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கேசவ் மகராஜ், லுங்கி இங்கிடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அரையிறுதிக்கு முன்னர் தென் ஆப்பரிக்கா அணிக்கு சிறந்த பயிற்சியாக அமைந்திருக்கும் இந்த போட்டியை வெற்றி பெற 245 ரன்களை சேஸ் செய்ய வேண்டும்.

தென் ஆப்பரிக்கா, ஆப்கானிஸ்தான் என இரு அணிகளும் தங்களது கடைசி போட்டியில் இன்று களமிறங்கியுள்ளன. எனவே இரண்டு அணிகளும் தங்களது கடைசி போட்டியை வெற்றியுடன் முடிக்க முயற்சிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் போட்டிங் தொடங்கியது.

தென் ஆப்பரிக்கா பெற்றிருக்கும் இரண்டு தோல்விகளும் சேஸிங்கில் இன்று மீண்டும் சேஸிங் செய்யும் சூழல் அந்த அணிக்கு உருவாகியுள்ளது.

இதையடுத்து அடுத்தடுத்து இவர்கள் இருவரும் அவுட்டானார்கள். 100 ரன்களுக்குள் ஆப்கானிஸ்தான் அணி முதல் 4 விக்கெட்டுகளை இழந்தது.

அப்போது களத்தில் இருந்த அஸ்மதுல்லா உமர்சாய், விக்கெட் சரிவை தடுத்து பொறுப்புடன் பேட் செய்து அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து உமர்சாய் ரன்குவிப்பில் ஈடுபட்ட நிலையில் மற்றவர்கள் அவருடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைக்காமல் அவுட்டாகி வெளியேறினர்.

கடைசி கட்டத்தில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட உமர்சாய், 3 ரன்களில் சதத்தை மிஸ் செய்தார்.107 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தாலும் 2025இல் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியினஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் தென் ஆப்பரிக்கா அணியை வீழ்த்தினால் உலகக் கோப்பை தொடரில் மற்றொரு அப்செட்டை செய்யும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி