தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  World Cup 2023, Nz Vs Sl: 80 சதவீதம் மழை வாய்ப்பு - இரு அணிகளிலும் ஒரு மாற்றம்! டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங்

World Cup 2023, NZ vs SL: 80 சதவீதம் மழை வாய்ப்பு - இரு அணிகளிலும் ஒரு மாற்றம்! டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங்

Nov 09, 2023, 01:58 PM IST

google News
World Cup 2023, NZ vs SL: இன்றைய போட்டியில் மழை குறுக்கீடு இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படும் நிலையில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. கட்டாயமாக வெற்றி பெற்றாக வேண்டிய இந்த போட்டியில் நியூசிலாந்து, இலங்கை என இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை தொடரின் 41வது போட்டி நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையே பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

நியூசிலாந்து அணியில் ஸ்பின்னரான இஷ் சோதிக்கு பதிலாக லாக்கி பெர்குசன் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கை அணியிலும் கசுன் ரஜிதாவுக்கு பதிலாக சமிகா கருணரத்னே சேர்க்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணி தனது கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை பெங்களுரு மைதானத்தில் தான் எதிர்கொண்டது. அந்தப் போட்டியிலஸ் 401 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து. ஆனால் அந்த போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. இருப்பினும் இந்த ஆடுகளமும் பேட்டிஸ்மேன்களுக்கே சாதகமாக இருக்கும் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் தற்போது வானிலை மேகமூட்டத்துடன் இருந்தாலும் 80 சதவீதம் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நியூசிலாந்து - இலங்கை என இரு அணிகளுக்கும் உலகக் கோப்பை 2023 தொடரின் கடைசி லீக் போட்டியாக அமைந்துள்ளது. இதையடுத்து நியூசிலாந்து இந்தப் போட்டியில் வெற்றியுடன் நல்ல ரன் ரேட்டும் பெற்றால் மட்டும் அரையிறுதி வாய்ப்பை பெற முடியும். நியூசிலாந்துக்கு போட்டியிாக இருந்து வரும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளில் ஒன்று தங்களது போட்டியில் வெற்றியுடன் ரன் ரேட் அதிகமாக பெற்றால் கூட அரையிறுதிக்குள் நுழைந்துவிடும். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இலங்கையை எதிர்கொள்கிறது நியூசிலாந்து.

இலங்கை புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் இருந்து வரும் நிலையில், இன்று வெற்றி பெற்றால் மட்டுமே, 8வது இடத்துக்கு முன்னேறி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும். அந்த வகையில் இரு அணிகளுக்கும் முக்கியத்துவமான போட்டியான இந்த ஆட்டம் அமைந்திருப்பதால் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது என நம்பலாம்.

இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் விவரம்

நியூசிலாந்து: டேவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், கிளென் பிளிப்ஸ், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), மிட்செல் சாண்ட்னர், லாக்கி பெர்குசன், டிம் செளதி, ட்ரெண்ட் போல்ட்

இலங்கை: பாதும் நிஸ்ஸங்கா, குசால் பெராரே, குசால் மென்டிஸ் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரமா, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்ஜெய டி சில்வா, சமிகா கருணரத்னா, மகேஷ் தீக்‌ஷனா, துஷ்மந்தா சமீரா, தில்ஷன் மதுஷங்கா

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி