World Cup 2023: பாகிஸ்தான் பவுலர்களை பிரித்தெடுத்த நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் - 401 ரன்கள் குவிப்பு
Nov 04, 2023, 02:59 PM IST
டாஸ் வென்று நியூசிலாந்தை பேட் செய்ய அழைத்தது மோசமான முடிவு என்பதை நிருபிக்கும் விதமாக அந்த அணி பாகிஸ்தான் பவுலர்களை பிரித்தெடுத்து 401 ரன்களை குவித்துள்ளது. உலகக் கோப்பை 2023 தொடரில் இரண்டாவது 400+ ஸ்கோராக இது அமைந்துள்ளது.
உலகக் கோப்பை தொடரின் 35வது போட்டி நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே பெங்களுருவிலுள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பகல் நேர போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
நியூசிலாந்து அணியில் முழுமையாக பிட்னஸ் அடைந்த கேன் வில்லியம்சன் நான்கு போட்டிகளுக்கு பிறகு இன்று மீண்டும் களமிறங்கியுள்ளார். அவர்கள் இன்றைய போட்டியில் கேப்டனாக செயல்படுகிறார். அதேபோல் மார்க் சாப்மேனும் காயத்திலிருந்து குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ளார். வில் யங், ஜேமி நீஷம், மேட் ஹென்றி ஆகியோருக்கு பதிலாக வில்லியம்சன், சாப்மான், இஷ் சோதி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். உலகக் கோப்பை 2023 தொடரில் சோதி முதல் போட்டியில் களமிறங்குகிறார். பாகிஸ்தான் அணியில் ஸ்பின்னர் உஸ்மான் மிர்க்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஹசான் அலி சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து முதலில் பேட் செய்து நியூசிலாந்து, பாகிஸ்தான் அணியின் தேர்வு தவறும் என நிருபிக்கும் விதமாக 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் குவித்துள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது 400+ ஸ்கோராக இது அமைந்துள்ளது.
நியூசிலாந்து பேட்ஸ்மேன்களில் ரச்சின் ரவீந்திரா சதமடித்து 108 ரன்கள் அடித்து அவுட்டானார். இவருக்கு அடுத்தபடியாக கேன் வில்லியம்சன் 95 ரன்கள் அடித்து சதத்தை மிஸ் செய்து அவுட்டானார்.
கடைசி நேரத்தில் அதிரடியாக பேட் செய்து ரன் குவித்த கிளென் பிளிப்ஸ் 25 பந்துகளில் 41, சாப்மேன் 27 பந்துகளில் 39 ரன்கள் குவித்தனர். நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா - கேன் வில்லியம்சன் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்காக 180 ரன்கள் சேர்த்தனர். கடைசி 10 ஓவரில் நியூசிலாந்து அணி 94 ரன்கள் குவித்தது.
பாகிஸ்தான் பவுலர்களில் முகமது வாசிம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹசான் அலி, இப்திகார் அகமது, ஹரிஸ் ராஃப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். அதேபோல் கேமியோ இன்னிங்ஸை வெளிப்படுத்திய சாண்ட்னர் 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
பேட்டிங்கில் நல்ல பார்மில் இருந்து வரும் ரச்சின் ரவீந்திர உலகக் கோப்பை 2023 தொடரில் இரண்டாவது சதமடித்திருப்பதுடன், அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களில் 7 போட்டிகளில் 523 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி 10 ஓவரில் 90 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை
பாகிஸ்தான் அணி தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய 402 ரன்கள் என்ற மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்ய வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்