தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Nz Vs Sl Preview: நியூசிலாந்துக்கு அரையிறுதி, இலங்கைக்கு சாம்பின்ஸ் டிராபி தகுதி! வெல்லப்போவது யார்?

NZ vs SL Preview: நியூசிலாந்துக்கு அரையிறுதி, இலங்கைக்கு சாம்பின்ஸ் டிராபி தகுதி! வெல்லப்போவது யார்?

Nov 09, 2023, 06:10 AM IST

google News
World Cup 2023, NZ vs SL Preview: நியூசிலாந்துக்கு அரையிறுதி, இலங்கை அணிக்கு சாம்பியன்ஸ் டிராபி தகுதி என்ற இலக்குடன் இரு அணிகளும் களமிறங்குகின்றன. இதில் சாதிக்கப்போவது யார் என்கிற பரபரப்பு மிக்க போட்டியாக இன்றைய ஆட்டம் அமைகிறது.
World Cup 2023, NZ vs SL Preview: நியூசிலாந்துக்கு அரையிறுதி, இலங்கை அணிக்கு சாம்பியன்ஸ் டிராபி தகுதி என்ற இலக்குடன் இரு அணிகளும் களமிறங்குகின்றன. இதில் சாதிக்கப்போவது யார் என்கிற பரபரப்பு மிக்க போட்டியாக இன்றைய ஆட்டம் அமைகிறது.

World Cup 2023, NZ vs SL Preview: நியூசிலாந்துக்கு அரையிறுதி, இலங்கை அணிக்கு சாம்பியன்ஸ் டிராபி தகுதி என்ற இலக்குடன் இரு அணிகளும் களமிறங்குகின்றன. இதில் சாதிக்கப்போவது யார் என்கிற பரபரப்பு மிக்க போட்டியாக இன்றைய ஆட்டம் அமைகிறது.

உலகக் கோப்பை தொடரின் 41வது போட்டி நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையே பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. பகலிரவு போட்டியாக மதியம் 2 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் போட்டி தொடங்குகிறது.

அரையிறுதி போட்டிக்கு ஏற்கனவே இந்தியா, தென் ஆப்பரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றிருக்கும் நிலையில் மீதமிருக்கும் நான்காவது இடத்துக்கான போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என புள்ளிப்பட்டியிலில் அடுத்தடுத்து இடங்களில் மூன்று அணிகள் உள்ளன. இதில் நியூசிலாந்து தவிர பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிக்கு இன்னும் ஒரு போட்டி மீதம் உள்ளது.

இந்த சூழ்நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் நியூசிலாந்து அணி களமிறங்குகிறது. இன்றைய போட்டியில் வெற்றியுடன் ரன்ரேட்டையும் வலுவாக வைத்துக்கொள்ள வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

முதல் நான்கு போட்டிகளில் தொடர் வெற்றி நியூசிலாந்து, பின்னர் அடுத்த நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி அரையிறுதிக்கு தகுதி பெறுவதென்பதே கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 401 ரன்கள் அடித்தபோதிலும் மழை குறுக்கீடு காரணமாக டிஎல்எஸ் விதிமுறைப்படி நியூசிலாந்து தோல்வியை தழுவியது.

அந்த வகையில் கடந்த போட்டி நடைபெற்ற அதே பெங்களூரு மைதானத்தில் இன்றைய போட்டியும் நடைபெற இருக்கும் நிலையில், மழைக்கான வாய்ப்பும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. எனவே நியூசிலாந்து அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதோடு இல்லாமல், இயற்கையும் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும்.

பேட்டிங். பவுலிங், பீல்டிங் என உச்சகட்ட பார்மில் இருக்கும் நியூசிலாந்து தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான போட்டி தவிர சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. பெங்களூருவில் ஸ்பின்னர்களை காட்டிலும், சரியாக பவுலிங் செய்தால் வேகப்பந்து வீச்சாளர்கள் சாதிப்பார்கள் என்பதால் இன்றைய போட்டியில் பெர்குசன், ஜேமிசன் என இருவரும் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

நெதர்லாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து பெற்ற வெற்றியின் காரணமாக புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் இருந்த இலங்கை 9வது இடத்துக்கு சென்றுள்ளது. இதனால் சாம்பின்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழக்க அபாயம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கும் இதுதான் கடைசி போட்டி என்பதால், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தகுதி பெறுவதற்கான வாயப்பை உறுதிபடுத்தி கொள்ள போராடும் என எதிர்பார்க்கலாம்.

பிட்ச் நிலவரம்

பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பெங்களூரு ஆடுகளத்தில் இன்றும் பேட்டர்கள் ஜொலிப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த இரண்டு போட்டிகளில் சேஸிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளதால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிகிறது.

இன்றைய போட்டியிலும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், போட்டியின் முடிவில் மழை முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து - இலங்கை அணிகள் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் இலங்கை 6, நியூசிலாந்து 5 முறை வெற்றி பெற்றுள்ளன. 2011க்கு பிறகு இலங்கை நியூசிலாந்து அணியை வெற்றி பெறவில்லை. எனவே 12 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு நியூசிலாந்து வீழ்த்தும் முயற்சியில் இலங்கை களமிறங்கும். தென் ஆப்பரிக்காவிடம் இருந்து வந்த சோக்கர்ஸ் என்னும் பட்டத்தை தவிர்க்க நியூசிலாந்து அணி போராடும் என நம்பலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி