World Cup 2023: நிதானம் + அதிரடியில் மிரட்டிய கில்லர் மில்லர் - ஆஸ்திரேலியாவுக்கு 213 ரன்கள் இலக்கு
Nov 16, 2023, 06:22 PM IST
இந்த தொடர் முழுவதும் பேட்டிங்கில் பெரிதாக ஜொலிக்காத டேவிட் மில்லர், முக்கியத்துவம் வாய்ந்த இன்றைய போட்டியில் ஒற்றை ஆளாக நின்று சதமடித்து தென் ஆப்பரிக்கா அணியை நல்ல ஸ்கோரை எடுக்க செய்தார்.
உலகக் கோப்பை 2023 இரண்டாவது அரையிறுதி போட்டி ஆஸ்திரேலியா - தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பரிக்கா அணி கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து முதலில் பேட் செய்த தென் ஆப்பரிக்கா அணி 49.4 ஓவரில் 212 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியுள்ளது. உலகக் கோப்பை தொடர் முழுவதும் பேட்டிங்கில் பெரிதாக ஜொலிக்காமல் இருந்து வந்து டேவிட் மில்லர், இன்றைய போட்டியில் நெருக்கடியான நேரத்தில் பேட் செய்ய வந்து, ஒற்றை ஆளாக ரன்குவிப்பில் ஈடுபட்டு சதமடித்ததுடன், அணியை கரை சேர்த்தார்.
தென் ஆப்பரிக்கா அணியில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 101, ஹென்ரிச் கால்சன் 47 ரன்கள் எடுத்தனர். மொத்தம் ஐந்து பேட்ஸ்மேன்கள் மட்டுமே தென் ஆப்பரிக்காவில் இரட்டை இலக்கை ரன்கள் அடித்தனர்.
உலகக் கோப்பை 2023 தொடரில், லீக் போட்டிகளில் முதல் பேட்டிங்கில் சிறப்பாக ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்த தென் ஆப்பரிக்கா, இன்றைய போட்டியில் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா பவுலிங்கில் ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ட்ராவிஸ் ஹெட், ஹசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
அரையிறுதி, நாக்அவுட் போட்டிகளில் தோல்வியை தழுவி சோக்கிங் செய்யப்படும் தென் ஆப்பரிக்கா, இந்த போட்டியில் தோல்வியை தவிர்த்து முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற ஆஸ்திரேலியாவை 213 ரன்கள் சேஸ் செய்ய விடாமல் தடுக்க வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்