World Cup 2023: மேக்ஸ்வெல்க்கு ஓய்வு! கட்டாய வெற்றி பெற வேண்டிய போட்டியில் வங்கதேசம் பேட்டிங்
Nov 11, 2023, 10:38 AM IST
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ளும் விதமாக வங்கதேசம் அணிக்கு அமைந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது.
உலகக் கோப்பை 2023 தொடரின் 43வது போட்டி ஆஸ்திரேலியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையே புனேவில் இன்று நடைபெறுகிறது. மகராஷ்ட்ரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் பகல் நேர போட்டியாக இதில் டாஸ் வென்ற
ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
வங்கதேச அணியில் தன்ஸிம் ஹாசன் ஷாகிப், ஷோரிபுல் இஸ்லாம், ஷாகிப் அல் ஹாசன் ஆகியோருக்கு பதிலாக முஸ்தபிசுர் ரஹ்மான், மெஹிதி ஹாசன், நசும் அகமது ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஷாகிப் அல் ஹாசன் இல்லாத நிலையில் ஷாண்டோ கேப்டனாக செயல்படுகிறார். ஆஸ்திரேலியா அணியில் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டாக்குக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஸ்டீவ் ஸ்மித், சீன் அபாட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வங்கதேசம் அணி 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழ்நிலை வங்கதேசத்துக்கு உள்ளது. ஏனென்றால் தோல்வியை தழுவினால் 9வது இடத்தில் இருக்கும் 8வது இடத்துக்கு முன்னேறும். அத்துடன் 2025இல் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியனஸ் லீக் தொடரில் விளையாட தகுதி பெறும். எனவே இதை தவரிப்பதற்கும், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடும் வாய்ப்பை தக்க வைப்பதற்கும், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வங்கேதசம் வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற நிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியா - வங்கதேசம் அணிகள் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 3 முறை வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லாமல் உள்ளது. எனவே இன்று வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியாவை முதல் முறையாக உலகக் கோப்பை தொடரில் வீழ்த்திய பெருமையை பெறும்.
இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் முழு விவரம்
வங்கதேசம்: லிட்டன் தாஸ், தன்சித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர), மஹ்முதுல்லா, மெஹிதி ஹசன் மிராஸ், தவ்ஹித் ஹிர்தோய், மெஹேதி ஹசன், நசும் அகமது, தஸ்கின் அகமது, முஸ்தபிசுர் ரஹ்மான்,
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்சேன், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அபோட், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹசில்வுட்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்