தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Ned Preview: கடைசி லீக் போட்டி - நெதர்லாந்துக்கு எதிராக மோதல்! புதிய சாதனை செய்ய காத்திருக்கும் இந்தியா

IND vs NED Preview: கடைசி லீக் போட்டி - நெதர்லாந்துக்கு எதிராக மோதல்! புதிய சாதனை செய்ய காத்திருக்கும் இந்தியா

Nov 12, 2023, 05:45 AM IST

google News
World Cup 2023, IND vs NED Preview: இந்தியாவின் தொடர் வெற்றி பயணம் நெதர்லாந்துக்கு எதிராகவும் தொடர்ந்து, ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அனைத்து லீக் போட்டிகளிலும் வென்ற அணி என்கிற புதிய சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கலாம்.

உலகக் கோப்பை தொடரின் 45வது போட்டி இந்தியா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையே பெங்களுருவில் இன்று நடைபெறுகிறது. கடைசி லீக் போட்டியான இது பகலிரவு ஆட்டமாக சின்னசாமி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

விளையாடிய 8 போட்டிகளிலும் வென்று Bossஆக வலம் வரும் இந்தியா, நெதர்லாந்து அணியையும் வீழ்த்தி அனைத்து லீக் போட்டிகளிலும் வென்ற அணி புதுமையான சாதனை படைக்கும் என எதிர்பார்க்கலாம்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் இந்த நாளில், ரசிகர்களுக்கு வெற்றியுடன் சிறந்த கிரிக்கெட் ஆட்டத்தை பரிசாக தர இந்திய அணி முயற்சிக்கலாம். டாப் அணிகளுக்கு எதிராகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி துவம்சம் செய்த இந்தியா, தனது கடைசி போட்டியில் வளர்ந்து வரும் அணியாக திகழும் நெதர்லாந்துக்கு எதிராகவும் ஆதிக்கத்தை தொடரும் என நம்பலாம்.

தொடர்ச்சியாக வெற்றி காம்பினேஷனில் விளையாடி வரும் இந்திய அணி இன்றைய போட்டியில் முக்கிய வீரர் யாருக்காவது ஓய்வை அளித்துவிட்டு ஸ்பின்னர் அஸ்வின், இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஆகியோரை விளையாட வைக்கும் வாய்ப்பு உள்ளது. பேட்டிங்கில் விராட் கோலி, பவுலிங்கில் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

நெதர்லாந்தை பொறுத்தவரை, இந்த உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பரிக்காவை தோல்வியை அடைய செய்த அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. அத்துடன் வங்கதேசம், இலங்கை அணிகளை போல் 2 வெற்றிகளை பெற்றிருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இந்த தொடரில் பல்வேறு விதமான புதிய முயற்சிகள், மாற்றங்களை செய்திருக்கும் நெதர்லாந்து, கடைசி போட்டியில் தங்களது முழு திறமையும் வெளிப்படுத்தி சிறப்பான ஆட்டத்தை ஆட முயற்சிக்கும்.

பிட்ச் நிலவரம்

பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியான பெங்களுருவில் நடைபெற்ற கடைசி போட்டியில் பவுலர்கள் சாதித்தனர். இருப்பினும் முதலில் பேட் செய்யும் அணி மிக பெரிய ஸ்கோரை குவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை இரண்டு முறை இந்தியா - நெதர்லாந்து அணிகள் உலகக் கோப்பை தொடரில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி