World Cup 2023 Final: இதுவும் நல்லாயிருக்கே! இந்தியாவுக்கு தான் கோப்பை என அடித்து சொல்லப்படும் காரணங்கள் தெரியுமா?
Nov 18, 2023, 11:30 PM IST
உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டிகள் நிச்சயம் இந்தியா தான் வெல்லும் எனவும் அதற்கு பின்னணியாக இருந்து வரும் காரணம் குறித்து சமூக வலைத்தளங்களில் உலா வரும் பகிர்வுகளை பார்க்கலாம்.
உலகக் கோப்பை 2023 தொடரின் இறுதி போட்டி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா மூன்றாவது முறையும், ஆஸ்திரேலியா ஆறாவது முறையும் சாம்பியன் ஆவதற்கு பலப்பரிட்சை செய்கின்றன.
கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த போட்டி குறித்து முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பல்வேறு தரப்பினரின் கணிப்புகளும், கருத்து பரிமாற்றங்களும் இரு அணிகளின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.
இந்த சூழ்நிலையில், கிரிக்கெட் விளையாட்டில் கடந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளின் அடிப்படையிலும் வெற்றி பெறுவதற்கு இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளில் யாருக்கு வாய்ப்பு அதிகம் ரசிகர்கள் தரப்பில் காரணங்களுடன் கருத்துகளும் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என்பதும், அதற்கான காரணமாக கூறப்படும் சில உருட்டுகளையும் பார்க்கலாம்.
2011 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் 12 ஆண்டுகள் கழித்து இந்தியா மீண்டும் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 2011க்கு முன்னர் 2003ஆம் ஆண்டில் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 126 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
இதைத்தொடர்ந்து மீண்டும் 20 ஆண்டுகள் கழித்து உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் இறுதி போட்டிக்கு தகுதியானதில் இருந்தே இதை ஒரு பழிவாங்கல் போட்டியாகவே ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.
அத்துடன் 2003ஆம் ஆண்டில் இந்தியாவை வீழ்த்தியா ஆஸ்திரேலியா அணி அந்த தொடரில் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வெற்றி பெற்று பைனலுக்கு வந்து கோப்பையை தட்டி தூக்கியது. அதேபோல் இப்போது இந்தியா அணியும் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்றி பைனலுக்கு வந்துள்ளதால், 2003இல் ஆஸ்திரேலியாவுக்கு நடந்தது இந்தியாவுக்கு இந்த முறை நடைபெறும் என ஸ்ட்ராங்காக நம்புவதாக கணித்து உருட்டப்பட்டுள்ளது.
2003 இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்கு முன்னர் இந்தியா தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பெற்றது. அதைப் போல் இந்த முறை ஆஸ்திரேலியா பைனலுக்கு முன்னர் தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பெற்றிருக்கிறது. இதுவும் இன்னொரு கணிப்பாக கூறப்படுகிறது
2003ஆம் ஆண்டில் சாம்பியன் ஆன ஆஸ்திரேலியா மூன்றாவது உலகக் கோப்பையை வென்றது. அதேபோல் தற்போது இந்தியாவும் மூன்றாவது உலகக் கோப்பை எதிர்நோக்கி உள்ளது. இதுபோதாதா இந்தியா தான் உலகக் கோப்பையை வெல்லும் என நம்புவதற்கு என்று மனதை உற்சாகப்படுத்தி கொள்வதற்குள் மேற்கூறிய விஷயங்களையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவில் கணிப்பை வெளிப்படுத்தியுள்ளனார்.
அதாவது உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன் கேப்டன்கள் இருவரும் கோப்பையை பிடித்தவாறு போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் போது, இடது புறம் நிற்கும் கேப்டன் தான் கோப்பையை வென்றிருக்கிறார். அந்த வகையில் பார்த்தால் இந்த முறை கேப்டன் ரோஹித் ஷர்மா இடது புறம் நிற்க, வலது புறத்தில் கம்மின்ஸ் நிற்க இருவரும் கோப்பையை பிடித்தவாறு போஸ் கொடுத்துள்ளனர்.
இறுதியாக ரோஹித் கேப்டனான பிறகு பைனலில் விளையாடிய ஒரு போட்டியிலும் கோப்பையை தவறவிட்டதில்லை. எனவே தனது வெற்றி பயணத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்றும் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கணிப்புகள் அனைத்தும் நடந்தாலும், நடக்காமல் போனாலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணி நிச்சியம் கோப்பையை வெல்லும். அந்த வகையில் நல்ல பார்மில் இருந்து வரும் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி போட்டியிலும் தொடரும் என நம்பலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்