தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  World Cup 2023 Final: வெற்றி கூட்டணியுடன் விளையாடும் இரு அணிகள்! டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு

World Cup 2023 Final: வெற்றி கூட்டணியுடன் விளையாடும் இரு அணிகள்! டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு

Nov 19, 2023, 02:42 PM IST

google News
Ind vs Aus World Cup 2023 live Score: உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். பனிப்பொலிவை கருத்தில் கொண்டு முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளதாக கம்மின்ஸ் கூறியுள்ளார். (PTI)
Ind vs Aus World Cup 2023 live Score: உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். பனிப்பொலிவை கருத்தில் கொண்டு முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளதாக கம்மின்ஸ் கூறியுள்ளார்.

Ind vs Aus World Cup 2023 live Score: உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். பனிப்பொலிவை கருத்தில் கொண்டு முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளதாக கம்மின்ஸ் கூறியுள்ளார்.

உலகக் கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. சுமார் 1.30 லட்சம் பார்வையாளர்கள் இந்த போட்டியை நேரில் காண்கின்றனர்.

இதில் டாஸ் வென்ற அணி ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.  இரு அணிகளும் கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் களமிறங்கியுள்ளன.

"பிட்ச் வறட்சியாக இருப்பதால் அதை நன்கு பயன்படுத்திகொள்ள விரும்புகிறோம்.  இரவு நேரத்தில் இங்கு பனிப்பொலிவு அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டுள்ளோம்" என்று டாஸ் வென்ற பின்னர் ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறினார்.

இதன் பின்னர் பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா, “நாங்கள் முதலில் பேட் செய்யவே விரும்பினோம். மிக பெரிய போட்டியில் நல்ல ஸ்கோர் எடுக்க வேண்டும்” என்றார்.

இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் விவரம்

இந்தியா: ரோஹித் ஷர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குலதீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரீத் பும்ரா முகமது சிராஜ்\

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ட்ராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்சேன், கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஷ் (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹசில்வுட்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி