தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  World Cup 2023: டாஸ் வென்று பாகிஸ்தான் தலைவிதியை மாற்றிய இங்கிலாந்து!

World Cup 2023: டாஸ் வென்று பாகிஸ்தான் தலைவிதியை மாற்றிய இங்கிலாந்து!

Nov 11, 2023, 02:00 PM IST

google News
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸை இழந்து அரையிறுதி வாய்ப்பை கிட்த்தட்ட தவறவிட்ட பாகிஸ்தான் வெற்றியுடன் உலகக் கோப்பை 2023 தொடரிலிருந்து வெளியேற முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸை இழந்து அரையிறுதி வாய்ப்பை கிட்த்தட்ட தவறவிட்ட பாகிஸ்தான் வெற்றியுடன் உலகக் கோப்பை 2023 தொடரிலிருந்து வெளியேற முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸை இழந்து அரையிறுதி வாய்ப்பை கிட்த்தட்ட தவறவிட்ட பாகிஸ்தான் வெற்றியுடன் உலகக் கோப்பை 2023 தொடரிலிருந்து வெளியேற முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம்.

உலகக் கோப்பை தொடரின் 44வது போட்டி பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஷ் படலர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட் செய்தால் மட்டுமே அரையிறுதியில் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு என்பது இருந்தது. ஆனால் முதல் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கும் இங்கிலாந்து டாஸ் நிகழ்விலேயே பாகிஸ்தான் கனவை தகர்த்தது.

இதையடுத்து பாகிஸ்தான் அணியில் ஹசன் அலிக்கு பதிலாக ஷதாப் கான் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் களமிறங்குகிறது.

அரையிறுதி வாய்ப்பை பாகிஸ்தான் அணி கிட்டத்தட்ட இழந்துவிட்டாலும், கடைசி லீக் போட்டியில் வெற்றியுடன் முடிக்க முழு முயற்சியும் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கலாம். அதேபோல் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து 5 தொடர் தோல்விகளுக்கு பிறகு கடந்த போட்டியில் தான் வெற்றி பாதைக்கு மீண்டும் திரும்பியது. முக்கிய வீரர்கள் பார்ம் இல்லாமல் தவித்து வந்தாலும் அவ்வளவு எளிதாக பாகிஸ்தானை ஆதிக்கம் செய்ய விடாமல் நெருக்கடி தரலாம்.

இங்கிலாந்து  அணி  வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லிக்கு இது கடைசி போட்டியாக அமைந்துள்ளது. எனவே அவரது ஆட்டம் இன்றும் கவனம் பெறும் விதமாக அமையும் என தெரிகிறது. 

இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணிகளின் விவரம்

இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, கஸ் அட்கின்சன், அடில் ரஷித்

பாகிஸ்தான்: அப்துல்லா ஷபிக், பகர் ஸமான், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), செளத் ஷாகில், இப்திகார் அகமது, ஷதாப் கான், அகா சல்மான், முகமது வாசிம், ஷாகின் அப்ரிடி, ஹரிஸ் ராஃப்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி