தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  World Cup 2023, Eng Vs Ned: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரேஸ்! டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்

World Cup 2023, ENG vs NED: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரேஸ்! டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்

Nov 08, 2023, 10:54 PM IST

google News
சாம்பியன்ஸ் டிராபிக்கான ரேஸில் யார் முந்தப்போவது என்று முக்கியத்துவம் வாய்ந்த இன்றைய போட்டியில் இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் பலப்பரிட்சை செய்கின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபிக்கான ரேஸில் யார் முந்தப்போவது என்று முக்கியத்துவம் வாய்ந்த இன்றைய போட்டியில் இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் பலப்பரிட்சை செய்கின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபிக்கான ரேஸில் யார் முந்தப்போவது என்று முக்கியத்துவம் வாய்ந்த இன்றைய போட்டியில் இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் பலப்பரிட்சை செய்கின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

உலகக் கோப்பை 2023 தொடரின் 40வது போட்டி இங்கிலாந்து - நெதர்லாந்து இடையே புனேவில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஷ் பட்லர் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இங்கிலாந்து அணியில் லயாம் லிவிங்ஸ்டன், மார் உட் ஆகியோருக்கு பதிலாக ஹாரி ப்ரூக், கஸ் ஆட்கின்சன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். நெதர்லாந்து அணியில் சாகிப் சுல்பிகருக்கு பதிலாக தேஜா நிடமானுரு சேர்க்கப்பட்டுள்ளார்.

நடப்பு சாம்பியனான இங்கிலாந்து 5 தொடர் தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியில் கடைசி இடத்தில் உள்ளது. சிறந்த அணியாக இருந்தாலும் இதுவரை எந்த உலகக் கோப்பை தொடரிலும் இல்லாத அளவில் மிகவும் மோசமான ஆட்டத்தை இங்கிலாந்து வெளிப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட இங்கிலாந்து, 2025இல் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க வேண்டுமானால் டாப் 8 இடங்களை பிடிக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாலும் இங்கிலாந்து ரன் ரேட் அடிப்படையில் கடைசி இடத்திலேயே இருக்கும். எனவே வெற்றியுடன் மிகப் பெரிய ரன்ரேட் பெற்றால் மட்டும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து விளையாடுவது சாத்தியமாகவுள்ளது.

நெதர்லாந்து அணியை பொறுத்தவரை இந்த உலகக் கோப்பை தொடரில் இரண்டு வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியிலில் 7வது இடத்தில். தென் ஆப்பரிக்கா அணியை வீழ்த்தி அப்செட் செய்து முதல் வெற்றியை பெற்ற நெதர்லாந்து, பின்னர் வங்கதேசத்துக்கு எதிராக இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

இங்கிலாந்தை போல் நெதர்லாந்து அணியும் அரைிறுதி வாய்ப்பை இழந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தகுதி பெறுவதற்கான வாய்ப்பை பெற இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் உள்ளது.

இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் விவரம்:

இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மாலந், ஹாரி ப்ரூக், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் பட்லர் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அடில் ரஷித், கஸ் ஆட்கின்சன்,

நெதர்லாந்து: வெஸ்லி பாரேசி, மேக்ஸ் ஓ'டவுட், கொலின் அக்கர்மேன், சைப்ராண்ட் ஏங்கல்பிரெக்ட், ஸ்காட் எட்வர்ட்ஸ், தேஜா நிடமனுரு, பாஸ் டி லீட், லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தட், பால் வான் மீகெரென்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி