தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  World Cup 2023: பழைய பாணியில் அதிரடி! நெதர்லாந்து பவுலர்களை விரட்டியடித்த இங்கிலாந்து - 339 ரன்கள் குவிப்பு

World Cup 2023: பழைய பாணியில் அதிரடி! நெதர்லாந்து பவுலர்களை விரட்டியடித்த இங்கிலாந்து - 339 ரன்கள் குவிப்பு

Nov 08, 2023, 10:53 PM IST

google News
சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும் வாய்ப்பை பெறப்போவது யார் என்பதை முடிவு செய்யும் விதமாக அமைந்திருந்த முக்கியமான இந்த போடட்யில் இங்கிலாந்து பேட்டிங்கில் பழைய பாணியில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

உலகக் கோப்பை 2023 தொடரின் 40வது போட்டி இங்கிலாந்து - நெதர்லாந்து இடையே புனேவில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஷ் பட்லர் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சதமடித்து 108 ரன்கள் எடுத்தார். ஓபனிங் பேட்ஸ்மேன் டேவிட் மாலன் 87, கிறிஸ் வோக்ஸ் 51 ரன்கள் எடுத்தனர்.

நெதர்லாந்து பவுலர்களில் பாஸ் டி லீட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆர்யன் தத், லோக் வான் பீக் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நுழையப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் விதமாக அமைந்த இந்த போட்டியில் இங்கிலாந்து பேட்டிங்கில் தனது பழைய பார்முக்கு திரும்பி அதிரடி காட்டியுள்ளது. நெதர்லாந்து 340 ரன்கள் என மிகப் பெரிய இலக்கை எட்டினால் மட்டுமே சாம்பியன்ஸ் டிராபி வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள முடியும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி