World Cup 2023: கைகொடுக்காத போராட்டம்! வெளியேறிய இங்கிலாந்து - வெற்றியுடன் அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்த ஆஸ்திரேலியா
Nov 04, 2023, 10:36 PM IST
பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு, பேட்டிங்கில் வெற்றிக்காக போராடிய போதிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியை தழுவி உலகக்க கோப்பை 2023 தொடரிலிருந்து வங்கதேசத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது அணியாக வெளியேறியுள்ளது.
உலகக் கோப்பை தொடரின் 36வது போட்டி ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஷ் பட்லர் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவரில் 286 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களில் மார்னஸ் லபுஸ்சேன் அதிகபட்சமாக 71 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்திபடியாக கேமரூன் க்ரீன் 47, ஸ்டீவ் ஸ்மித் 47 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை மிரிட்டிய இங்கிலாந்து பவுலர் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மார்க் உட், அடில் ரஷித் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழத்தினர்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என இரு அணிகளுக்கும் கட்டாயமாக வெற்றி பெற்றாக வேண்டிய இந்தப் போட்டி அமைந்திருந்தது. இதில் ஆஸ்திரேலியாவை பெரிய ஸ்கோர் குவிக்கவிடாமல் இங்கிலாந்து கட்டுப்படுத்தியது.
இதைத்தொடர்ந்து 287 ரன்களை சேஸ் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து 48.1 ஓவரில் 253 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியுள்ளது. இதனால் ஆஸ்திரேலியா 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்பபை தக்கவைத்துள்ளது.
இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பென் ஸ்டோக்ஸ் 64 ரன்கள் குவித்தார். இவருக்கு அடுத்தபடியாக மொயின் அலி 42 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் வெற்றிக்காக போராட்டத்தை வெளிப்படுத்திய கிறிஸ் வோக்ஸ் 32 ரன்கள் அடித்தார். இருப்பினும் இங்கிலாந்து தொடர்ந்து 5வது தோல்வியை தழுவியுள்ளது.
ஆஸ்திரேலியா பவுலர்களில் ஸ்பின்னரான ஸாம்பா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் ஆட்டநாயகனாகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார். ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டை எடுத்தனர்.
இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியா நீடித்து வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்