World Cup 2023: உலகக் கோப்பை போட்டிகளில் இது முதல் முறை..! வங்கதேசத்தை வீழ்த்தி சாதனை வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா
Nov 11, 2023, 07:53 PM IST
உலகக் கோப்பை போட்டிகளில் முதல் முறையாக ஆஸ்திரேலியா அணி 300 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்து சாதனை புரிந்துள்ளது. வங்கதேசத்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா லீக் சுற்றில் 7 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
உலகக் கோப்பை 2023 தொடரின் 43வது போட்டி ஆஸ்திரேலியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையே புனேவில் இன்று நடைபெற்றது. பகில் ஆட்டமாக நடைபெற்றஇதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட் செய்த வங்கதேசம் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டவுகித் ஹிர்தோய் அரைசதமடித்து 74 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக கேப்டன் ஷாண்டோ 45, ஓபனிங் பேட்ஸ்மேன்கள் லிட்டன் தாஸ் 36, டன்சித் ஹாசன் 36 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா பவுலர்களில் சீன் அபாட், ஆடம் ஸாம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஒரு விக்கெட்டை எடுத்தார்.
இதைத்தொடர்ந்து 307 ரன்கள் என மிகப் பெரிய சேஸிங் செய்த ஆஸ்திரேலியா 44.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்து 32 பந்துகள் மீதமிருக்க, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மே மிட்செல் மார்ஷ் அதிரடியாக பேட் செய்து ரன்குவித்த நிலையில் 177 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகமல் இருந்தார். இவருடன் இணைந்து சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்த ஸ்டீவ் ஸ்மித் 63 ரன்கள் எடுத்தி நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார். மார்ஷ் - ஸ்மித் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 175 ரன்கள் சேர்த்தனர். ஓபனிங் பேட்ஸ்மேனான டேவிட் வார்னர் 53 ரன்கள் எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணி முதல் முறையாக 300 ரன்களுக்கு மேல் வெற்றிகரமாக சேஸ் செய்து சாதனை புரிந்துள்ளது. கட்டாயமாக வெற்றி பெற்றாக வேண்டிய இந்தப் போட்டியில் வங்கதேசம் தோல்வியை தழுவினாலும் ரன்ரேட்டை இழக்காமல் பார்த்துக்கொண்டதால், புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து 8வது இடத்தில் நீடித்து வருகிறது. இதனால் 2025இல் பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடும் வாய்ப்பையும் தக்க வைத்துள்ளது.
அதிரடியாக பேட் செய்த 177 ரன்களை குவித்த மிட்செல் மார்ஷ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலியா அணி அடுத்ததாக உலகக் கோப்பை 2023 தொடர் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பரிக்கா அணியை வரும் 16ஆம் தேதி எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்