தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  World Cup 2023: உச்சகட்ட பார்மில் தென் ஆப்பரிக்கா - வெற்றியுடன் விடைபெறும் முனைப்பில் ஆப்கானிஸ்தான்! இன்று பலப்பரிட்சை

World Cup 2023: உச்சகட்ட பார்மில் தென் ஆப்பரிக்கா - வெற்றியுடன் விடைபெறும் முனைப்பில் ஆப்கானிஸ்தான்! இன்று பலப்பரிட்சை

Nov 10, 2023, 06:10 AM IST

google News
SA vs AFG: அரையிறுதி வாய்ப்பை இழ்ந்திருக்கும் ஆப்கானிஸ்தான் வெற்றியுடன் உலகக் கோப்பை தொடலிருந்து விடைபெறுவதற்கான முழு முயற்சியில் ஈடுபடும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவுக்கு எதிரான படுதோல்வியிலிருந்து மீளும் விதமாகவும், பார்மை மீட்டெடுக்கும் விதமாக தென் ஆப்பரிக்கா ஆட்டத்தை வெளிப்படுத்தலாம்.
SA vs AFG: அரையிறுதி வாய்ப்பை இழ்ந்திருக்கும் ஆப்கானிஸ்தான் வெற்றியுடன் உலகக் கோப்பை தொடலிருந்து விடைபெறுவதற்கான முழு முயற்சியில் ஈடுபடும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவுக்கு எதிரான படுதோல்வியிலிருந்து மீளும் விதமாகவும், பார்மை மீட்டெடுக்கும் விதமாக தென் ஆப்பரிக்கா ஆட்டத்தை வெளிப்படுத்தலாம்.

SA vs AFG: அரையிறுதி வாய்ப்பை இழ்ந்திருக்கும் ஆப்கானிஸ்தான் வெற்றியுடன் உலகக் கோப்பை தொடலிருந்து விடைபெறுவதற்கான முழு முயற்சியில் ஈடுபடும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவுக்கு எதிரான படுதோல்வியிலிருந்து மீளும் விதமாகவும், பார்மை மீட்டெடுக்கும் விதமாக தென் ஆப்பரிக்கா ஆட்டத்தை வெளிப்படுத்தலாம்.

உலகக் கோப்பை தொடரின் 42வது போட்டி தென் ஆப்பரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் இன்று நடைபெறுகிறது. பகலிரவு ஆட்டமாக இந்தப் போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

உலகக் கோப்பை 2023 தொடர் ஆப்கானிஸ்தானுக்கு சிறப்பானதாக இதுவரை அமைந்துள்ளது. விளையாடிய 8 போட்டிகளில் 4 வெற்றி பெற்று நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதிய போட்டிக்கு முன்னர் வரை அரையிறுதி ரேஸில் இருந்தது. தற்போது அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டாலும், கடைசி லீக் போட்டியை வெற்றியுடன் முடிக்க முயற்சிக்கும்.

கடைசி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியை தழுவினாலும், முன்னாள் உலக சாம்பியனான அவர்களை தரமான பவுலிங்கால் மிரட்டியது. மேக்ஸ்வெல் மட்டும் நிலைத்து பேட் செய்யாவிட்டால் ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி வரலாறு படைத்திருக்கும்.

பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்படும் அணியாக இருந்து வருகிறது ஆப்கானிஸ்தான். இங்கிலாந்தை வீழ்த்தி இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் அப்செட் செய்த அணியாக இருந்த ஆப்கானிஸ்தான் அடுத்து பாகிஸ்தான், இலங்கை என இந்தியா தவிர்த்த மற்ற ஆசிய அணிகளையும், நெதர்லாந்தையும் வீழ்த்தி வெற்றி பெற்றது.

மூன்று முன்னாள் சாம்பியன் அணிகளை வீழ்த்தி முக்கிய அணியாக உருவெடுத்திருக்கும் ஆப்கானிஸ்தான், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் தகுதி பெற்றுள்ளது. கடந்த போட்டியில் அரையிறுதிக்கான வாய்ப்பு அமைந்தபோதிலும் அதை தவறவிட்டாலும், அதிரடி பேட்டிங் மற்றும் துல்லிய பவுலிங்கால் ஆஸ்திரேலியாவுக்கு பயத்தை காட்டியது. அதேபோல் தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக இன்றைய போட்டியில் தொடரும் என நம்பலாம்

தென் ஆப்பரிக்காவை பொறுத்தவரை விளையாடிய 8 போட்டிகளில் 2 தோல்வியை மட்டும் பெற்றுள்ளது. இரண்டுமே சேஸிங்கின்போது நிகழ்ந்துள்ளது. ஒன்று பலம் வாய்ந்த இந்தியாவுக்கு எதிராகவும், மற்றொரு நெதர்லாந்துக்கு எதிராக அப்செட் போட்டியாகவும் அமைந்துள்ளது. அரையிறுதிக்கு தகுதி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் தென் ஆப்பரிக்காவுக்கு இதுவொரு பயிற்சி போட்டியாகவும், பரிசோதனை முயற்சியை செய்து கொள்ளும் போட்டியாகவும் உள்ளது. அதேநேரம் கடந்த போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பெற்ற மோசமான தோல்வியிலிருந்து மீளும் முயற்சியையும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஆல்ரவுண்ட் ஆட்டத்திலும், முதல் பேட்டிங்கிலும் அசைக்க முடியாத அணியாக இருந்து வந்த தென் ஆப்பரிக்கா, இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக முறை 300+ ஸ்கோர் அடித்த அணியாகவும் உள்ளது. அதேசமயம் சேஸிங்கில் திணறும் அணியாக இருப்பதால் இன்றைய போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிட்ச் நிலவரம்

உலகக் கோப்பை தொடரில் பெரிய ஸ்கோர் குவிக்க முடியாத அளவில் பேட்ஸ்மேன்களை சோதிக்கும் ஆடுகளமாக அகமதாபாத் இருந்து வருகிறது. அதேபோல் வேகப்பந்து வீச்சாளர்கள், ஸ்பின் பவுலர்கள் என இருவருக்கும் சம அளவில் ஒத்துழைக்கும் ஆடுகளமாக இருந்து வருகிறது. சிவப்பு மணல், கருப்பு மணல் என இரண்டு ஆடுகளங்களும் இங்கு உள்ளன.

சிவப்பு மணல் ஸ்பின்னர்களுக்கு நன்கு உதவுவதுடன் நல்ல பவுன்ஸ் இருக்கும். கருப்பு மணல் மெதுவாக செயல்படுவதுடன் பேட்ஸ்மேன்களுக்கு சவால் விடுக்கும் விதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் வறண்ட வானிலை நிலவும் எனவும், வெப்பநிலை 35 டிகிரி அளவு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் இதுவரை உலகக் கோப்பை தொடரில் ஒரேயொரு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் தென் ஆப்பரிக்கா வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் ஆப்கானிஸ்தான் தனது வெற்றி கணக்கை தொடங்குவதற்கான முழு முயற்சியில் ஈடுபடும் என நம்பலாம்.

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி